"காசு கொடுத்தா தான்.. இல்லைனா!" யூடியூபை இலவசமாக பயன்படுத்துபவரா? இனி அப்படி பார்ப்பது கஷ்டம் தான்
வாஷிங்டன்: பிரபல வீடியோ தளமான யூடியூப் இலவசமாக வீடியோ பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
நெட்பிளிக்ஸ் போன்ற வீடியோ தளங்களுக்கு எல்லாம் முன்னோடி என்றால் அது யூடியூப் தான். கடந்த 2005இல் தொடங்கப்பட்ட யூடியூப், அப்போதே அமெரிக்காவில் ஹிட் அடித்தது.
இந்த தளத்தை 2006இல் கூகுள் வாங்கிய பின்னர், அசுர வளர்ச்சி தான். இப்போது உலகம் முழுவதும் மிகவும் அதிகம் விசிட் செய்யப்படும் தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது.

யூடியூப்
யூடியூப் தளம் முதலில் முற்றிலும் இலவசமாகவே இருந்தது. விளம்பரங்கள் கூட எதுவும் இல்லாமலேயே இருந்தது. அதன் பின்னர் கடந்த 2010இல் தான் யூடியூபில் முதலில் விளம்பரங்கள் வரத் தொடங்கியது. அதில் இருந்து வரும் வருவாயில் சிறு தொகை வீடியோவை பதிவிடுபவர்களுக்கும் வழங்கப்படும். முதலில் சில நொடிகள் மட்டுமே வரை இருந்த இந்த விளம்பரம் காலப் போக்கில் அதிகரிக்கப்பட்டு வந்தது.

அதிருப்தி
இப்போதெல்லாம் பெரும்பாலான வீடியோக்களின் தொடக்கத்திலேயே ஸ்கிப் செய்ய முடியாத இரு விளம்பரங்கள் வருகிறது. இதுவே பயனாளர்களை அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. யூடியூப் நிறுவனம் ப்ரீமியம் என்ற பெயரில் கட்டண சேவையை அதிக பேரைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காகவே விளம்பரங்களை அதிகரித்து வருகிறது.

5 விளம்பரங்கள்
இந்தச் சூழலில் பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வீடியோவை பார்க்கும் முன்பு பயனாளர்கள் ஒன்று அல்ல இரண்டு அல்ல மொத்தம் 5 விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இந்த புதிய முயற்சியைத் தான் இப்போது யூடியூப் சோதனை செய்து வருகிறது. இது தொடர்பான ஸ்க்ரீந் ஷாட்டை பகிர்ந்துள்ள பயனாளர்கள் பலரும் ட்விட்டரில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

விளக்கம்
இதையடுத்து யூடியூப் நிறுவனம் இந்த விவகாரத்தில் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்து உள்ளது. அனைத்து வீடியோக்களிலும் இப்படி 5 விளம்பரங்கள் வராது என்று கூறியுள்ள யூடியூப் நிறுவனம், ஒவ்வொரு விளம்பரமும் ஆறு வினாடிகள் மட்டுமே இருக்கும் என்றும் அதற்கு மேல் இருக்காது என்றும் யூடியூப் தெரிவித்து உள்ளது. அதாவது மொத்தம் 5 விளம்பரங்கள் என்றாலும் கூட வீடியோவை பார்க்க ஒரு நபர் சுமார் 30 வினாடிகள் மட்டுமே காத்திருக்க வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆறு நொடிகள்
ஆறு விளம்பரங்கள் வரும் போது, அவை பெரும்பாலும் பம்பர் விளம்பரங்களாகவே இருக்கும். இந்த விளம்பரங்கள் ஆறு நொடிகள் மட்டுமே இருக்கும் என்பதால் 30 நொடிகள் மட்டுமே காத்திருக்க வேண்டும். இப்போது இரு விளம்பரங்கள் வரும்போதும் கூட பயனாளர்கள் 30 நொடிகள் தான் காத்திருக்க வேண்டி உள்ளது. அதேநிலை தான் 5 விளம்பரங்கள் வந்தாலும் என்பது யூடியூப் வாதம்.

எப்படி தவிர்க்கலாம்
இருப்பினும், வருவாயை அதிகரிக்க அதிக விளம்பரங்களைப் போடுவது பயனாளர்களைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டும் இணையத்தளத்தில் அதிகரித்து உள்ளது. யூடியூப் விளம்பரங்களில் இருந்து இரு வகைகளில் தப்பிக்கலாம். டெஸ்க்டாப்பில் பயன்படுத்துபவர்கள், பிரவுசரில் ad blockerஐ பயன்படுத்தி விளம்பரத்தைத் தடுக்கலாம். அல்லது யூடியூப் பிரிமியம் சந்தாவிற்குப் பணம் கட்டி விளம்பரத்தைத் தடுக்கலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications