கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு.. மத்திய அரசின் பரிசீலனை நிச்சயம் தேவை.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் 4 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அனைவருக்கும் சீரான இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பசீரிலனை செய்ய வேண்டும் என்றனர்.
இந்தியாவில் இதுவரை 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர் ஷா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இழப்பீடு
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? இந்த விஷயத்தில் அரசு ஏதேனும் முடிவெடுத்துள்ளதா? கொரோனா பெருந்தொற்று ஒரு முறை நிகழும் பேரழிவு இல்லை என்பதைத் தொடர்ந்து கூறுவதன் மூலம் பேரிடர் சட்டம் பெருந்தொற்றுகளுக்கு பொருந்தாது என்று அரசு கூற வருகிறதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கவனம் செலுத்துகிறோம்
அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், மத்திய அரசிடம் போதியளவில் நிதி உள்ளது. நாங்கள் கொரோனா உயிரிழப்புகளுக்கு ஒரு முறை நான்கு லட்ச ரூபாய் வழங்குவதற்குப் பதிலாக உணவு, மருத்துவம், ஆக்ஸிஜன், தடுப்பூசி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். இது குறித்து மத்திய தாக்கல் செய்த பிரமாண பத்திரம் ட்விட்டரில் தவறாகச் சித்தரிக்கப்பட்டது" என்றார்.

பேரிடர் மேலாண்மை சட்டம்
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பி. உபாத்யாய், "மத்திய அரசிடம் நிதி இருக்கும்பட்சத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 12இன் கீழ் ஏன் இழப்பீடு வழங்கக்கூடாது. கடந்த ஆண்டு இதே மத்திய அரசு தான் கொரோனா பெருந்தொற்றை தேசிய பேரழிவாக அறிவித்திருந்தது" என்றார். மேலும், பேரிடர் மேலாண்மை சட்டம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான்கு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

உதவ வேண்டும்
சட்டம் தெளிவாகக் கூறுவதால் நிதி இல்லை என்று கூறி அரசு தப்பித்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான கவுரவ் குமார் என்ற வழக்கறிஞர், "அரசு அளிக்கும் தொகை சிறியதாகக் கூட இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கண்டிப்பாக அரசு உதவி வழங்கப்பட வேண்டும். பல குடும்பங்கள் வருவாய் ஈட்டி தரும் ஒரே உறுப்பினரைக் கூட இழந்து தவிக்கின்றனர்" என்றார்.

அரசு தரப்பு வழக்கறிஞர்
பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 12 இயற்கை பேரழிவுக்கு மட்டுமே பொருந்தும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஒருமுறை மட்டும் பண் அளிப்பதற்குப் பதிலாகப் பல உதவிகளைச் செய்கிறோம். மேலும், இது ஒரு முறை மட்டும் நிகழும் பேரழிவு அல்ல. மீண்டும் இப்படி ஒன்று நடப்பதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்" என்றார்.

நீதிபதிகள் கேள்வி
15ஆவது நிதி ஆணையத்தில் 2021-2026 வரையிலான ஆண்டுகளில் பேரிடர் மேலாண்மைக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்படும்போது ரூ 25,000 கோடி தேவை என்றால், அப்போது ரூ 15,000 கோடி தான் உள்ளது எனக் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், சட்டத்தினால் உறுதி செய்துள்ள பேரிடர் மேலாண்மை விதியை நிதி ஆணையத்தால் மாற்ற முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Click it and Unblock the Notifications