"டேஞ்சர்".. வண்டியில் ஏறுங்க! நடந்தே போகும் ராகுல்.. அந்த 29 கிமீ மட்டும் காரில் போனது ஏன்? என்னாச்சு?
கூடலூர்: பாரத் ஜோடோ யாத்திரையில் நடந்து சென்று மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி நேற்று குறிப்பிட்ட 29 கிமீ தூரத்திற்கு மட்டும் காரில் சென்றார். கால் வலி வந்ததால் சென்றார் என்று நினைக்க வேண்டாம். அவர் காரில் சென்றதற்கு பின் வேறு ஒரு காரணம் இருக்கிறது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. தினமும் இவரின் யாத்திரையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்ள தொடங்கி உள்ளனர்.
அதோடு இவர் ஊர் ஊராக சென்று யாத்திரை செய்வதால் மக்களை அதிக அளவில் பார்க்கிறார். இதனால் யாத்திரையும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 20-30 கிமீ தூரத்தை ராகுல் காந்தி நடந்தே கடக்கிறார்.
3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.

யாத்திரை
இந்த பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். அதன்பின் கேரளா சென்றவர், கேரளாவில் பெரும்பாலான நகரங்களை கவர் செய்தார். கேரளா முடிவில் வயநாடு சென்றுவிட்டு பின்னர் கூடலூர் வழியாக கர்நாடகா செல்வதே அவரின் திட்டம். இதற்காக அவர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்தார். கூடலூர் வந்து அங்கிருந்து அப்படியே மைசூரு செல்வது பிளான். கூடலூரில் இருந்து கர்நாடகாவில் உள்ள குண்டல்பேட் பகுதிக்கு இவர் நேற்று சென்றடைந்தார்.

கார் பயணம்
இதற்காக அவர் நடந்தபடி சென்றார். கூடலூரில் பயணம் முடித்த அவர் முதுமலை - பந்திப்பூர் புலிகள் ரிசர்வ் காடு வரை நடந்தபடியே வந்தார். அவருக்கு பின் சில கார்கள் தயாராக வந்தன. இந்த பயணம் முழுக்க நடந்து செல்வதே ராகுல் காந்தியின் பிளான். ஆனால் அந்த எல்லைக்குள் வந்ததும் அவருடன் வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை.. இடம் வந்துவிட்டது காரில் ஏறுங்கள் என்று கூறினர். அவரும் காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.

29 கிமீ
சரியாக 29 கிமீ தூரம் அவர் காரில் சென்றார். கர்நாடக எல்லையில் உள்ள மேல் கம்மனஹள்ளி வரை இவர் காரில் சென்றார். இந்த முதுமலை - பந்திப்பூர் ரிசர்வ் காடு என்பது.. புலிகள் உலவும் ரிசர்வ் காடு ஆகும். இங்கே இரவு நேரத்தில் கார்கள் செல்ல அனுமதி இல்லை. எந்த நேரத்திலும் மனிதர்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை. யானை, புலி என்று பல விலங்குகள் இந்த காட்டில் உள்ளன. மிகவும் ஆபத்தான காட்டுப்பகுதி ஆகும் இது.

ஏன்?
தென்னிந்தியாவில் உள்ள "டேஞ்சரஸ்" காடுகளில் இதுவும் ஒன்று. இங்கே நடந்து செல்ல அனுமதி இல்லை என்பதால் ராகுல் காந்தி காரில் சென்றார். மற்றவர்களும் இவருடன் காரில் சென்றனர். இந்த எல்லையை கடந்ததும், அவர் மீண்டும் நடந்து செல்ல தொடங்கினார். இந்த பந்திப்பூர் சாலை பகுதி காட்டுக்குள் அமைக்கப்பட்டு இருக்கும் மிக அழகான சாலை ஆகும். இங்கே வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது என்பதால், காரில் மெதுவாக அந்த பகுதியை ராகுல் காந்தி கடந்து சென்றார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications