உங்க காதல் ஜெயிக்குமா..யாருக்கு காதல் மணியடிக்கும்..காதல் கிரகங்கள் கை கொடுக்குமா?
துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம்.
சென்னை: ஒருவரின் மனதில் திடீரென காதல் மணியடிக்கும். அதற்குக் காரணம் காதல் கிரகங்கள் செய்யும் சேட்டைகள்தான். நவகிரகங்களும் கூட்டணி அமைத்து 12 ராசிகளில் பயணிக்கும் காலத்தில் ஒருவருக்கு பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையைப் பொருத்து காதல் தோன்றும் அந்த காதல் திடீர் திருமணத்தில் முடியும்.
காதல் ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும். துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம்.

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, தோல்வியில் முடியுமா என்பதை தீர்மானிக்கின்றன. காதல் தோன்றுவதற்கு மனசு முக்கிய பங்குவகிக்கிறது.மனதுக்கு காரகர், உடல் காரகர், சஞ்சலத்தை தருபவர் சந்திரன். ராகு ஒரு தலைக்காதல் காரகன்.
காதலில் துணிவான முடிவெடுக்க உதவுபவர், தைரியத்துக்கு காரகர் செவ்வாய். காதல் வெற்றி பெற உதவி தேவை. காதலுக்கு இனம் புறியாத பாசத்திற்கும், இன்பத்திற்கும்.ஆடம்பரம் அழகு, எதிர்பாலினத்தை ஈர்க்கும் சக்தியை தருபவர், வசீகரத்தின் காரகர் சுக்கிரன்.
சுக்கிரன் செவ்வாய் 5 பாவத் தொடர்பு ஏற்பட்டால் காதல் கனியும். ஏழாம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் திருமணம் அமையும். பொதுவாக எந்த ராசிகளுக்கும் 5 மற்றும் 9ஆம் ராசியாகி அமைபவருடன், காதல் ஏற்படும்.
ஒரு ராசிக்கு ஏழாவது ராசிக்காரருடன் காதல் மலர வாய்ப்புண்டு. ஐந்தாம் அதிபதி ஏழாம் அதிபதியும் இணைந்திருப்பது. அல்லது அதிபதி ஐந்தாம் இடத்தில் இருப்பது அல்லது ஏழாம் அதிபதிக்கும் ஐந்தாம் அதிபதி பார்வை பெறுவது அல்லது ஏழாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஐந்தாம் அதிபதி இருப்பது, ஐந்தாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஏழாம் அதிபதி இருப்பது காதல் திருமணம் அமையும்.
ஒன்பதம் அதிபதிக்கும், வீட்டிற்கும் ஐந்தாம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் கை கூடும். களத்திரக்காரனாகிய சுக்கிரன், ஏழாம் அதிபதிகளை சனி பார்த்தால்,சுக்கிரன், சனி ஏழாம் இணைந்திருந்தால் காதல் திருமணம்.
லக்கினத்திற்கு 1 5 9ல் சுக்கிரன் இருப்பதும். சந்திரன், சுக்கிரன் இணைந்து நீர் இருந்தாலும் காதல் திருமணம். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள ராசியும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் உள்ள ராசியும் ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஏற்படும்.
சனி அவமானத்தையும், முறையற்ற காதலையும், தாமதத்தையும் தருவார். மதம் மாறிய, குலம் மாறிய வழக்கத்துக்கு மாறான அனைத்து திருமணங்களுக்கு காரகர் ராகு புதன் -ராகு காதல் தடை ஏற்படுத்தும். ஒரு தலைக்காதல். சட்டரீதியாக திருமணம், பதிவு திருமணம், காதல் உருவாக்குவது, உணர்ச்சி பூர்வமாக மாற்றும் கேது காரகர். உங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எந்த ராசியில் யாருடன் கூட்டணி அமைத்துள்ளன என்று பார்த்து உங்கள் காதல் ஜெயிக்குமா? சொதப்புமா என காதலர் தினத்தில் முடிவு செய்து கொள்ளுங்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications