For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேக் இல்லாமல் கிறிஸ்துமஸா?.

By Super
Google Oneindia Tamil News

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்களில் முக்கிய இடம் கேக்குக்குத்தான். வெரைட்டியானகேக்குகள் இருந்தாலும், சாம்பிளுக்கு சில கேக்குகளை உங்கள் முன்வைக்கிறோம். செய்யுங்கள், சாப்பிடுங்கள், கிறிஸ்துமஸை சுவையாககொண்டாடுங்கள்!

பைனாப்பிள் கேக்

தேவையான பொருட்கள்:

  • மைதா : 2 கப்

  • உப்பு : சிறிதளவு

  • பேக்கிங் பவுடர் : 2 டீஸ்பூன்

  • முட்டை : 2

  • வெணிலா எசென்ஸ் : 1 டீஸ்பூன்

  • வெண்ணெய் : 1 கப்

  • சர்க்கரை : 1 கப்

  • பால் : 3 டேபிள் ஸ்பூன் ( 6 அல்லது 7 டீஸ்பூன்)

    செய்முறை:

    ஒரு தட்டில் உப்பையும், பேக்கிங் பவுடரையும் சலித்து எடுத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    Christmas Cakeவெண்ணிலா எசென்ஸ், வெண்ணெய், சர்க்கரையை அது பசை போன்ற பதம் வரும் வரை பாத்திரத்தில் போட்டு கிளறவும். இதனுடன் முட்டைக் கலவையையும்சேர்த்து கவனமாக கிளறவும். இப்போது தயாராக இருக்கும் இந்த கலவையுடன் பாலை ஊற்றி கலக்கவும்.

    பால் ஊற்றிய பின் தயாரான கலவை ஓரளவு திடமான தரத்துக்கு வந்து விடும். இதை எண்ணெய் தடவிய மாடர்ன் ஓவனில் வைத்து 355 டிகிரி பாரன்ஹீட்சூட்டில் அடுப்பில் சுமார் 20 முதல் 25 நிமிடம் வரை சூடு செய்யவும்.

    அதன்பின் இதை வெளியே எடுத்து குளிர வைக்கவும். கேக் ரெடி!

    Divider

    வெஜ் கேக்

    Christmas Cakeதேவையான பொருட்கள்:

    • சர்க்கரை 2 கப்

    • மைதா மாவு 3 கப்

    • பேக்கிங் சோடா 2 டீஸ்பூன்

    • உப்பு 1 டீஸ்பூன்

    • கோகோ அரை கப்

    • எண்ணெய் முக்கால் கப்9

    • வெண்ணிலா ஒரு டீஸ்பூன்

    • வினிகர் இரண்டு டீஸ்பூன்

    • குளிர்ந்த நீர் இரண்டு கப்

      செய்முறை:

      Christmas Cakeஅனைத்து பொருட்களையும் பாத்திரம் ஒன்றில் போட்டு சலிக்கவும், அனைத்து திரவ பொருட்களையும் கொடுக்கப்பட்டுள்ள வரிசையிலேயே ஊற்றிகலக்கவும்.

      குளிர் நீரை ஊற்றி நன்றாக கலக்கவும். 9க்கு 13 இன்ச் என்ற அளவுள்ள கேக் பானில் போட்டு மை பதம் வரும் வரை கலக்கவும். 350 டிகிரிவெப்பத்தில் 35 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.

      முட்டையில்லாத வெஜ் கேக் தயார்.

      Divider

      ஆப்பிள் கேக்:

      தேவையான பொருட்கள்:

        Christmas Cake
      • ஆப்பிள் ஜூஸ் 1 லிட்டர்

      • லவங்கப் பட்டை 2 குச்சிகள்

      • வெல்லம் 1- 2 கப் (தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்)

        செய்முறை:

        ஆப்பிள் ஜூசை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் வெல்லத்தையும் சேர்த்து வெல்லம் கரையும் வரை கலக்கவம். அதில் லவங்கப்பட்டையையும் சேரத்துமிதமான சூட்டில் சூடு செய்யவும். அதிக நேரம் சூடுசெய்தால் பதம் கெட்டுவிடும்.

        அடுப்பில் வைக்கப்பட்ட கலவை மிதமான கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியவுடன் அருஞ்சுவையுடன் கூடிய ஆப்பிள் கேக்கை சுவைத்துமகிழுங்கள்.

        Divider

        டஃப்நட் கேக்

        தேவையான பொருட்கள்:

        • மைதா மாவு 2 கப்

        • உடைத்து கலக்கப்பட்ட முட்டை 2

        • பொடிசெய்யப்பட்ட சர்க்கரை அரை கப்

        • உருக்கப்பட்ட வெண்ணெய் 2 டீ ஸ்பூன்

        • உப்பு 1 டீஸ்பூன்

        • பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்

        • ஜாதிக் காய் (பொடியாக்கப்பட்டது) அரை டீஸ்பூன்

        • எண்ணெய் வறுப்பதற்காக சிறிதளவு

        • பால் கால் கப் அல்லது அரை கப்

          செய்முறை:

          Christmas Cakeஉடைத்து கலந்து வைக்கப்பட்டுள்ள முட்டைக் கலவையையும், சர்க்கரையையும் இணைத்து இரண்டும் நன்றாக கலக்கும் வரை கலக்கவும், இதனுடன்வெண்ணெயையும் போட்டு கலக்கவும்.

          மைதா மாவு, சர்க்கரை, வெண்ணெய் கலவையுடன் ஜாதிக்காய் பொடியையும் உப்பையும் சேர்த்து கலக்கவும்,

          முன்னர் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் முட்டை, சர்க்கரை வெண்ணெய் கவவையுடன் பாலை ஊற்றிக் கலக்கவும். ஆனால் மிக கெட்டியாகும் வரை கலக்கவேண்டாம். பதமாகும் வரை கலக்கினால் போதுமானது.

          இந்த கலவையை கேக் செய்யும் மாவு கொட்டி வைக்கப்படும் பலகையில் போட்டு கால் இன்ச் கனம் வருமளவுக்கு உருட்டவும். பின் இதை சிறு சிறுதுண்டுகளாக வெட்டி எடுக்கவும். ஒவ்வொரு துண்டின் நடுவிலும் துளை போட்டு அதை பொன்நிறம் வரும்வரை வறுக்கவும். பின் எடுத்து பரிமாறவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X