For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை ஆடிப்பூரம்: ஆண்டாளை பிரார்த்திப்போம்

By Staff
Google Oneindia Tamil News

Aandalசெவ்வாய்க்கிழமை ஆடிப் பூர விழா கொண்டாடப்படவுள்ளது. சூடிக் கொடுத்தசுடர்கொடியான ஆண்டாளுக்கு மிக உகந்த நாள் ஆடிப்பூரம். இந்த புனித நாளில்ஆண்டாளை நினைத்து பூஜித்தால் நினைத்த காரியம் சித்திக்கும்.

ஆண்டாள் பெருமாளை பூஜித்து அவரையே கணவனாக அடைய வேண்டும் என்றுபிரார்த்தித்து அவரையே மணந்தவள்.

இதற்காக மார்கழி மாதம் 30 நாளும் நோன்பிருந்து, அதிகாலையில் நீராடி ஆண்டவனைஎண்ணி, திருப்பாவை பாடி ஆண்டவனை மணம் செய்து கொண்டவள்.

ஆழ்வார்களில் பெரியவராய் போற்றப்படும் பெரியாழ்வாரின் மகள் தான் ஆண்டாள்.பூமாதேவியே பெரியாழ்வாருக்கு மகளாக வந்து பிறந்தார், பின்னர் ஆண்டாளாய் வளர்ந்துபெருமாளை மணந்தது குறித்து புராணக்கதை உண்டு.

அந்த புராணக்கதை:

துளசிச் செடிக்கு அருகில் ஆண்டாள்:

பெரியாழ்வார் தீவிர விஷ்ணு பக்தர். தன் உயிரையும், உடலையும் பெருமாளுக்குஅர்ப்பணித்தவர். காலையும், மாலையும், இரவும் சதா சர்வ காலமும் விஷ்ணுவையேஜெபித்து வந்தவர்.

பகவானுக்கு தொண்டு செய்ய 24 மணி நேரம் போதவில்லை என்று வருந்தும் அளவிற்குபகவான் தொண்டில் ஈடுபாடு கொண்டவர். அவர் தீவிர பிரம்மச்சாரி.

தன்னைப் பூஜித்து வரும் பெரியாழ்வாருக்கு அருள விரும்பிய பகவான், பூமாதேவியைஅவருக்கு மகளாக அவதரிக்க வைத்து ஆழ்வாருக்கு முக்தி தர விரும்பினர்.

ஆண்டவனுக்கு பூஜை செய்வதற்காக பெரியாழ்வார் அமைத்திருந்த மலர்த் தோட்டத்தில்இருந்த துளசிச் செடிக்கு அருகில் பூமாதேவி பெண் சிசுவாய் அவதரித்தாள்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு ஓடினார் ஆழ்வார். அழகே வடிவான பெண்குழந்தையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அதை எடுத்து பாசமழை பொழிந்து வளர்த்துவந்தார். அவளுக்கு ஆண்டாள் என்றும் பெயரிட்டார்.

சூடிக் கொடுத்த சுடர்கொடி:

ஆண்டாள், பூமாதேவியின் அவதாரமல்லவா? அவள் ஆண்டவனையே மணக்கவேண்டும் என்று விரும்பினாள். மணக்க முடியும் என்றும் நம்பினாள்.

திருமாலை மணக்க வேண்டும் என்று மார்கழி மாதம் முழுதும் நோன்பிருந்தாள். மார்கழிதிங்கள் மதி நிறைந்த நன்னாளாம் என தொடங்கும் திருப்பாவை பாடல்களைப் பாடிஆண்டவனை பிரார்த்தித்தாள்.

மார்கழியின் கடும் குளிரிலும் அதிகாலையில் நதி நீரில் குளித்து ஆண்டவனைபிரார்த்தித்து வந்தாள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X