For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கல் பட விருந்து

By Staff
Google Oneindia Tamil News

Sugarcaneபொங்கலுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கிறது பத்துக்கும் மேற்பட்ட படங்கள். தீபாவளியைப் போலவே, இந்தமுறையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளிவரவில்லை. கமல் படமும் இம்முறை கிடையாது.

அதற்குப் பதிலாக, இளைய சூப்பர் ஸ்டார்களான விஜய், அஜீத், பிரசாந்த் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத் குமார், புரட்சித்தமிழன் சத்யராஜ் ஆகியோரின் படங்கள் வெளிவருகின்றன.

பாரதி ராஜா நீண்ட நாட்களுக்குப் பிறகு கடற்கரைக் காதலோடு, வெள்ளித் திரைக்கு வருகிறார். முரளிகதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோஜ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறார்.

இதுதவிர தாலி காத்த அம்மன் என்ற கிராபிக்ஸ் கலக்கலும் படப் போட்டியில் இருக்கிறது. பிரசாந்த், ஷாலினி நடித்தபிரியாத வரம் வேண்டும், இந்த முறையாவது வருமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

ஷாலினி திருமணமாகிச் சென்று விட்ட பிறகு, படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டதால், சில காட்சிகளைஎடுக்க முடியாமல் போய் விட்டது. இதனால் பிரியாத வரம் வேண்டும் பாதியிலேயே நிற்கிறது.

பொங்கலுக்கு வரப் போகும் படங்களைப் பற்றி பார்ப்போமா?

கடல் பூக்கள்

Kadal Pookkalமுரளியுடன் கை கோர்த்திருக்கிறார் பாரதி ராஜா. அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்திருக்க வேண்டிய முரளிஅப்போது வாய்ப்பு கிடைக்காமல் இப்போது பாரதி ராஜாவுடன் சேர்ந்திருக்கிறார்.

இரண்டு கதாநாயகர்கள், இரண்டு கதாநாயகிகள். முரளியுடன் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் நடித்திருக்கிறார்.இருவரும் நண்பர்களாக வருகிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக பிரதிக்ஷா, உமா நடித்திருக்கிறார்கள்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு தேவா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன. மீண்டும்முட்டத்திற்குச் சென்று கடல் பூ பறித்துள்ள பாரதி ராஜா, நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றிப் பூவையும் பறிக்ககாத்திருக்கிறார்.

கடல் பூக்கள் பாரதி ராஜாவின் வெற்றி மகுடத்தில் மணம் வீசுமா என்பதை பார்க்கலாம்.

பிரெண்ட்ஸ்

Vijay with Devayaaniதண்ணீர் தண்ணீர் சரிதா தயாரித்துள்ள மலையாள ரீமேக், பிரெண்ட்ஸ். விஜய் மூதல் ஹீரோ, சூர்யா 2-வது ஹீரோ.கூடவே காமெடிக்கு ரமேஷ் கண்ணா.

விஜய்க்கு தேவயாணி, சூர்யாவுக்கு விஜயலட்சுமி (மலையாளம்) ஜோடிகள். வடிவேலுவும் இருக்கிறார். ஜோடிக்குகோவை சரளா.

மலையாளத்திலும் பிரெண்ட்ஸ் என்ற பெயரில் வந்த படம் தான், தமிழிலும் அதே பெயரில் வந்துள்ளது.காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். சமீப காலமாகவே, மொழி மாற்றுப் படங்களில் அதிகம் நடிக்கஆர்வம் காட்டும் விஜய் இந்தப் படத்தையும் விடவில்லை.

சித்திக் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார் (பிரமிக்க வைத்திருக்கிறார்). நீண்டநாட்களுக்குப் பிறகு குளுமையான இசையைக் கொடுத்திருக்கிறார்.

பழனி பாரதி, காதலுக்கு மரியாதைக்குப் பிறகு, ராஜாவுக்காக அனைத்துப் பாடல்களையும் எழுதிக்கொடுத்திருக்கிறார்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. கூடவே, பிரியமானவளேபடத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்துள்ள படம் என்பதாலும் எதிர்பார்ப்பு இரட்டிப்பாக்கியுள்ளது.

மலையாளத்தில் பெற்ற வெற்றி தமிழிலும் கிடைக்குமா என்பதை படம் வெளிவந்த பிறகுதான் தெரிந்து கொள்ளமுடியும்.

தீனா

Nagmaa with Ajithஅஜீத் ரவுடியாக நடித்திருக்கும், அமர்க்களமான படம். சுரேஷ் கோபி, அஜீத்தின் அண்ணனாக நடித்திருக்கிறார்.லைலா, அஜீத்திற்கு ஜோடியாக வருகிறார். நக்மா ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

இளைய ராஜாவின் இளைய புதல்வன் யுவன் சங்கர் ராஜா இசையில் அசத்தியிருக்கிறார். பாடல்கள் பேசவைத்திருக்கின்றன. ஒரு பாடலும் சோடை போகாத வகையில் அத்தனை பாடல்களும் தித்திப்பாக உள்ளன.

பிரெண்ட்ஸ் படத்திற்கு உருவாகியுள்ள அதே அளவு எதிர்பார்ப்பு தீனாவிற்கும் எழுந்துள்ளது. அஜீத்வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். முதல் பாதிப் படம் வரை அமைதியாக வரும் அஜீத், அடுத்தபாதியில் ரவுடியாக வருகிறார். இதற்காக உடலில் சதை போட்டுள்ளார், மீசையை மழித்துக் கொண்டுள்ளார்.

சில தோல்விப் படங்களைக் கொடுத்ததால் தொய்வடைந்துள்ள அஜீத்திற்கு இந்தப் படம் திருப்புமுனையாகலாம்.

வாஞ்சிநாதன்

Vaanchinaathanவிஜயகாந்தின் அதிரடிப் படம். அரசியல் வசனங்கள் ஆணி அடித்தாற் போல இருக்குமென்று பேச்சு அடிபடுகிறது.

மலையாளத்தின் ஷாஜி கைலாஷ் இயக்கியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், சாக்ஷி ஆகியோர் ஹீரோயினாகவருகிறார்கள். விஜயகாந்த்தின் ஆஸ்தான லியாகத் அலிகான் வசனம் எழுதியிருக்கிறார்.

பாடல்களுக்கு இளைய ராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜயகாந்த் படத்திற்கு கார்த்திக்ராஜா இசை அமைப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் பாடல்கள் மனதில் நிற்கும் வகையில் இல்லை.விஜயகாந்த் படம் என்பதால் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஆக்ஷனும், அடிதடியும்தான் அதிகமாகஇருக்கும்.

இதுதவிர, மலையாள நடிகர் கலாபவன் மணியும் உண்டு. இவர் மலையாளத்தில் வெளிவந்த வசந்தியும்,லட்சுமியும், பின்னே ஞானும் என்ற படத்தில் பார்வையற்றவராக வந்து அசத்தியவர்.

விஜயகாந்த்தே கூட இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்திருக்கிறார். வாஞ்சி நாதன் வாகை சூடுவாரா என்பதைப்பொறுத்திருந்து பார்க்கலாம்.

லூட்டி

Lootyசத்யராஜ், ரோஜா, மும்தாஜ் ஆகியோர் இணைந்து லூட்டியடித்திருக்கிறார்கள். காமெடியும், கவர்ச்சியும் சரியானகலவையில் கந்து கொடுத்திருக்கிறார்கள்.

கிராபிக்ஸில் எம்.ஜி.ஆர்., டினோசர் ஆகியோரும் உண்டு. பரமேஷ்வர் என்பவர் இயக்கிருக்கிறார்.

சமீப காலமாக சத்யராஜ், காமெடி பிளஸ் கவர்ச்சியுடன் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் அதே பாணியில்எடுத்திருக்கிறார்கள்.

லூட்டி எப்படி இருக்குமோ?

ரிஷி

சரத் குமார், மீனாவுடன் மீண்டும் இணைந்துள்ள படம். வெளிநாடுகளில் பாடல் காட்சிகள்படமாக்கியிருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருக்கிறார்.

மாயி வெற்றிக்குப் பிறகு ரிஷி வருவதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X