For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகர் உருவம் சொல்வது என்ன?

By Staff
Google Oneindia Tamil News

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

விநாயகர் ஸ்லோகம்

Ganesha
விநாயகர் அமர்ந்திருக்கும் கோலத்தை நோக்கும் போது ஓம் என்ற எழுத்து போல் தோன்றும். இதனால் இவரை ஓம்கார ஸ்வரூபி என்றுவணங்கப்படுகிறார்.

அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றன.

விநாயகரது பெரிய தலை நன்கு சிந்தனை செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

விநாயகரது பெரிய காது எல்லா விஷயத்தையும் கூர்ந்து கேட்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

இவரது சிறிய கண்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

இவரது கையில் இருக்கும் கோடாலி உலக பந்தங்கள் அனைத்தும் வெட்டி எறிப்பட்டு முக்தி அடைய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

இவரது மற்றொரு கையில் இருக்கும் கயிறு நம்மை இறைவனுக்கு அருகில் இழுத்துச் செல்கிறது.

இவரது சிறிய வாய் குறைவாக பேசி நிறைய சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

இவரது ஒரு தந்தம் நாம் நல்லதை மட்டும் வைத்திருந்தால் போதும் கெட்டதை இழப்பதில் தவறில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆசி வழங்கும் இவரது கரங்கள் நம்மை என்றும் ஆசிர்வதித்து நம்மை நல்வழிப்படுத்துகிறது.

இவரது தும்பிக்கை நமக்கு திறமையை தருகிறது

இவரது பெரிய வயிறு நல்லதையும், கெட்டதையும் எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொண்டு, இரண்டையும் ஒன்று போல் பாவிக்க வேண்டும் என்றதத்துவத்தை உணர்த்துகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X