For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கலோ பொங்கல்

By Staff
Google Oneindia Tamil News

Pongalபொங்கலுக்குத் தயாராகி விட்டீர்களா. சுவையான, தினுசு, தினுசான பொங்கல்,தித்திக்கும் பாயசங்கள், வித விதமான சாதங்கள், கையில் கரும்புடன் டேஸ்ட்பார்க்க தயாராகுங்கள்.

  • சர்க்கரை பொங்கல்

    தேவையான பொருட்கள்:

    • பால் : 2 லிட்டர்
    • பாதாம் பருப்பு : 10
    • அரிசி : ஒன்றரை கப்
    • பாசிப்பருப்பு : கால் கப்
    • முந்திரிப் பருப்பு : 15
    • தூள் செய்யப்பட்ட வெல்லம் : ஒன்றரை கப்
    • காய்ந்த திராட்சை : 30
    • குங்குமப்பூ : கால் டீஸ்பூன்
    • தூள் செய்யப்பட்ட ஏலம் : 1 டீஸ்பூன்
    • நெய் : 2 டேபிள் ஸ்பூன்

    • செய்முறை:

      பாதாம் பருப்பையும், முந்திரிப் பருப்பையும் தூள் செய்து கொள்ளவும்.உலர்ந்த திராட்சையை சுத்தம் செய்து கொள்ளவும்.அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி தயாராக வைத்துக் கொள்ளவும்.

      பாலை சூடு செய்யவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியையும், பருப்பையும் அதில் போடவும். அரிசியும் பருப்பும் நன்கு வெந்தவுடன் அதில்வெல்லத்தையும், நெய்யையும் சேர்க்கவும். இது மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க வைக்கப்பட வேண்டும்.

      இதனுடன் பொடி செய்து வைக்கப்பட்ட பாதாம் பருப்பையும், முந்திரிப் பருப்பையும், குங்குமப் பூ மற்றும் ஏலக்காய் பொடியையும், உலர்ந்த திராட்சையையும்போடவும். சிறிது நேரம் சூடு செய்யவும். பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.

      இதை பொங்கல் பானைக்கான மண்பானையில் செய்தால் சுவையும் கூடுதலாக இருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

      வெண்பொங்கல்:

      தேவையான பொருட்கள்:

      • அரிசி : 2 கப்
      • பாசிப்பருப்பு : ஒன்றரை கப்
      • நெய் : 2 டீ ஸ்பூன்
      • வறுக்கப்பட்ட முந்திரிப்பருப்பு : 10
      • உப்பு : தேவையான அளவு

      • செய்முறை:

        அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி தயாராக வைத்துக் கொள்ளவும். இதை நல்ல குழிவான பாத்திரத்தில் கால் லிட்டர் நீரில் கொதிக்கவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய்யையும், முந்திரிப் பருப்பையும் சேர்த்து வைக்கவும்.

        இதை அரிசி, பருப்பு, உப்பை சேர்த்து கலக்கி கொதிக்க வைக்கவும். இந்த கலவையை அவ்வப்போது கிளறி வரவும். நன்கு வெந்தவுடன் இறக்கி நெய்போட்டு சூடாக பரிமாறவும்.

        வெண்பொங்கல் (தமிழக ஸ்பெஷல்)

        தேவையான பொருட்கள்:

        • அரிசி : 2 கப்
        • பாசிப் பருப்பு : 1 கப்
        • மிளகு பொடி : ஒன்றரை டீ ஸ்பூன்
        • சீரகம் : 1 டீ ஸ்பூன்
        • முந்திரி பருப்பு : 10
        • சுக்கு : : 10 கிராம் (அல்லது 50
        • பைசாவுக்கு)
        • நெய் : தேவையான அளவு
        • உப்பு : தேவையான அளவு

        • செய்முறை:

          பாசிப்பருப்பை பொன்நிறம் வரும் வரை வறுக்கவும் வறுத்து வைத்த பருப்புடன் அரிசியை போட்டு அதைப் போல் இரண்டரை பங்கு நீர் ஊற்றி அதை ரைஸ்குக்கரில் போட்டு வேக வைக்கவும்.

          முந்திரி பருப்பை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். சுக்கையும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பையும், இஞ்சியையும் நெய்யில்போட்டு வறுத்துக் கொள்ளவும். சீரகத்தையும், மிளகையும் இஞ்சி, முந்திரியுடன் சேர்த்து வறுத்து கொள்ளவும். இந்த கலவயை நன்கு வெந்துள்ள அரிசி பருப்புடன்சேர்த்து (பொங்கல்) கிளறவும்.

          இத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். (சூடு குறைந்திருந்தால் லேசாக சூடு செய்து கொள்ளலாம். ரொம்பவும் வேக வைத்து விடவேண்டாம்)

          சூடாக எடுத்து பொங்கலை நெய் ஊற்றி பரிமாறவும். பொங்கலுக்கு ஏற்ற சைட் டிஷ். தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி. சுவையாக சாப்பிட்டுசுகமாக வாழுங்கள்.

          ரவா பொங்கல்:

          தேவையான பொருட்கள்:

          • ரவா : 1 கப்
          • பாசிப்பருப்பு : அரை கப்
          • மிளகு : 5
          • சீரகப்பொடி : 1 டீ ஸ்பூன்
          • பச்சை மிளகாய் : 1
          • பெருங்காயப் பொடி : சிறிதளவு
          • மஞ்சள் பொடி : சிறிதளவு
          • இஞ்சி : சிறிதளவு
          • உப்பு : அரை டீ ஸ்பூன்
          • எண்ணெய் : 6 டீ ஸ்பூன்
          • நெய் : 2 டீ ஸ்பூன்

          • செய்முறை:

            அரை கப் பாசிப் பருப்புடன் 1 கப் நீர் சேர்க்கவும். இதை குக்கரில் போட்டு நன்கு வேக வைக்கவும். ரவையை 4 டீ ஸ்பூன் எண்ணெயில் வறுக்கவும். இரண்டுகப் நீரை ஊற்றி அதில் ரவையை போட்டு நன்கு வேகும் வரை கலக்கவும். வேக வைக்கப்பட்டிருந்த பருப்பை வெந்து கொண்டிருக்கும் ரவையுடன்போட்டு. அதனுடன் உப்பையும் போட்டு நன்கு கலக்கவும். (பொங்கல் ரெடி)

            2 டீ ஸ்பூன் எண்ணெயில் மிளகை போட்டு வறுக்கவும். அதனுடன் பெருங்காய பொடியையும், மஞ்சள் பொடியையும் சேர்க்கவும். இதனுடன் சீரகப் பொடியையும்சேர்த்துக் கொள்வும்.

            முந்திரிப்பருப்பை பொன்நிறம் வரும் வரை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் வெட்டி வைக்கப்பட்ட மிளகாயையும், இஞ்சியையும் சேர்க்கவும். இந்தமுழுக்கலவையையும் பொங்கலுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.பொங்கலில் 2 டீ ஸ்பூன் நெய்யை ஊற்றி கலக்கவும்.

            சூடான ரவா பொங்கல் ரெடி. ரசித்து சாப்பிடுங்கள்.


            சேமியா பாயசம்:

            Sweetதேவையான பொருட்கள்:

            • சேமியா : 200 கிராம்
            • சர்க்கரை : 300 கிராம்
            • முந்திரிப்பருப்பு : 20
            • உலர்ந்த திராட்சை : 10
            • ஏலக்காய் பொடி : சிறிதளவு
            • பால் : 250 மிலி கிராம்
            • நெய் : 2 டீ ஸ்பூன்
            • வெண்ணிலா எசென்ஸ் : சிறிதளவு

            • செய்முறை:

              முந்திரிப் பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் நெய்யில் வறுத்து எடுக்கவும். 100 மிலி கிராம் நீரில் சர்க்ரையை சேர்க்கவும். சர்க்கரை நீரில் கரையும்வரை நன்கு கலக்கவும். முந்திரிப் பருப்பையும், உலர்ந்த திராட்சையையும, மீதமிருக்கும் நெய் அனைத்தையும் இதனுடன் சேர்த்து கலக்கவும்.

              இந்த கலவையை 10 நிமிடம் சூடு செய்யவும். இது சூடானவுடன் எடுத்து பொடி செய்யப்பட்டுள்ள ஏலக்காயுடன் சேர்க்கவும். இதை நன்கு கலந்து கொள்ளவும்.சுவையான சேமியா பாயசம் சுவைக்க தயார்.

              அவல் பாயசம்:

              தேவையான பொருட்கள்:

              • பால் : 1 லிட்டர்
              • அவல் : கால் கப்
              • சர்க்கரை : 1 கப்
              • ஏலக்காய் பொடி : அரை டீ ஸ்பூன்
              • முந்திரிப்பருப்பு : 9
              • உலர்ந்த திராட்சை : 5

              • செய்முறை:

                பாலை பாத்திரத்தில் ஊற்றி நன்கு சூடு செய்து கொள்ளவும். அவலை கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போடவும். இந்த கலவையை பாதியான அளவுக்குகுறையும் வரை தொடர்ந்து கிளறவும்.

                சர்க்கரையையும், ஏலக்காய் பொடியையும் இந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். முந்திரிப்பருப்பையும் இதனுடன் சேர்த்து கலக்கவும். இதனுடன் உலரந்ததிராட்சையையும் சேர்க்கவும். சூடாக எடுத்து பருகி மகிழுங்கள்.


                தேங்காய் சாதம்:

                தேவையான பொருட்கள்:

                • அரிசி : 2 கப்
                • ஒரு முழுத் தேங்காய் துருவல்
                • உளுத்தம் பருப்பு : 3 டீ ஸ்பூன்
                • பச்சை மிளகாய் : 2
                • உப்பு : தேவையான அளவு
                • பெருங்காயப்பொடி : சிறிதளவு
                • எண்ணெய் : சிறிதளவு

                • செய்முறை:

                  தேங்காய் துருவலை நன்றாக வறுத்துஎடுத்துக் கொள்ளவும் உளுத்தம் பருப்பை சிறிதளவு எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைசிறிதாக வெட்டிக் வைத்துக் கொள்ளவும்.

                  அரிசியை குக்கரில் வைத்து அது வெந்த பின் இறக்கி எடுத்து சிறிதளவு ஆறிய பின் அதில் தேங்காய் துருவல், வறுத்து வைத்திருக்கும் பருப்பு, வெட்டிவைக்கப்பட்டிருக்கும் பச்சை மிளகாய்,பெருங்காயப்பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.

                  தேவைப்பட்டால் முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்து போடலாம்.புளி சாதம் (புளியோதரை)

                  தேவையான பொருட்கள்:

                  • அரிசி : 2 கப்
                  • புளி : 150 கிராம்
                  • கடலைப் பருப்பு : 3 டீ ஸ்பூன்
                  • நிலக்கடலை : 25 கிராம்
                  • மிளகாய் வற்றல் : 5
                  • எண்ணெய் : 3 டீ ஸ்பூன்
                  • பெருங்காயப் பொடி : சிறிதளவு
                  • உப்பு : சிறிதளவு
                  • மஞ்சள் பொடி : சிறிதளவு

                  • செய்முறை:

                    புளியை15 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். கடலைப் பருப்பையும் நீரில் ஊறவைத்து தயாராக வைத்துக் கொள்ளவும். நிலக் கடலையை வறுத்து வைத்துக்கொள்ளவும்.

                    கடலை பருப்பில் இருக்கும் நீரை வடித்த பின் அதை எண்ணெயில் ஊற்றி வதக்கவும். சிறிது நேரம் கழித்து அதில் ஊறிய புளியில் இருக்கும் நீரை மட்டும் வடிகட்டி எடுத்து கடலைப்பருப்புடன் சேர்க்கவும். மிளகாய் வற்றலையும் எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

                    அரிசியை குக்கரில் வைத்து அது வெந்த பின்பு இறக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும். அதில் தயாராக வைத்திருக்கும் புளி, பருப்பு கலவையை ஊற்றி நன்றாககலக்கவும். இத்துடன் மிளகாய் வற்றல், நிலக்கடலை, உப்பு, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி போன்றவையும் சேர்த்து கலக்கவும்.புளியோதரை தயார்.எலுமிச்சம் பழ சாதம்:

                    தேவையான பொருட்கள்:

                    • அரிசி : 2கப்
                    • எலுமிச்சம் பழம் : 3
                    • கடலைப் பருப்பு : 3 டீ ஸ்பூன்
                    • மிளகாய் வற்றல் அல்லது
                    • பச்சை மிளகாய் : 3
                    • எண்ணெய் : சிறிதளவு
                    • பெருங்காயப் பொடி : சிறிதளவு
                    • உப்பு : தேவையான அளவு

                    • செய்முறை:

                      அரிசியை குக்கரில் வேக வைத்து எடுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பையும், மிளகாய் வற்றலையும் எண்ணெயில் வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.

                      சாதம் நன்றாக ஆறிய பின்பு அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து கலக்கவும். அத்துடன் வறுத்துவைக்கப்பட்டிருக்கும கடலை பருப்பு, மிளகாய், பெருங்காயப் பொடி, உப்பு ஆகியவற்றையும் போட்டி நன்குகலந்தால் எலுமிச்சம் பழம் சாதம் ரெடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X