For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் புனித நீராடும் பக்தர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தமிழகத்தின் காவிரி ஆற்றிலும் பிற புனித நதிகளிலும் சிவராத்திரிக்காகலட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர்.

சிவபெருமான் அருள்பாலிக்கும் எல்லா தலங்களிலும் சிவராத்திரி விழா சிறப்பாககொண்டாடப்படுகிறது. குறிப்பாக தஞ்சை பெரிய கோவிலில் சிவராத்திரி விழாசிறப்பான பூஜைகளுடன் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பெருந்திரளான மக்கள் வற்றாத ஜீவ நதியான காவிரி நதியிலும், அதன் கிளைநதிகளிலும் புனித நீராடியபின் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வருகின்றனர்.

ஆந்திராவில்...:

இதே போல் மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பலஇடங்களிலும் பரவி இருக்கும் கிருஷ்ணா நதியில் புனித நீராடினர்.

இந்த விழாவையொட்டி பக்தர்கள் கிருஷ்ணா நதியில் புனித நீராடிவிட்டு, பின்னர்பூஜையில் ஈடுபட்டனர். சிவபெருமான் அமைந்துள்ள புகழ் பெற்ற கோவில்களானஎலுரு, பீடகாலிப்பட்டி, சிவகங்கா, பாலிவி, முத்தியாலா, மன்கின்புடி கடற்கரைகோவில் மற்றும் போகேஸ்வரம் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை முதலே பக்தர்கள் கோவிலில் பெருந்திரளாக குவியஆரம்பித்துவிட்டனர். பேருந்துகள், மோட்டார் வாகனங்களிலும் பக்தர்கள் வந்தனர்.சிலர் மாட்டுவண்டியிலும் கூட வந்தனர்

எலுருவில் ஆற்றில் போதிய அளவு நீர் இல்லாத காரணத்தால் புனித நீராடுவதுகடினமாக இருந்தது.மாநில அரசாங்கம், மாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் 80-க்கும் அதிகமான சிறப்பு பேருந்தை ஏற்பாடு செய்திருந்தது.

அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க காவல்துறை பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்திருந்தது.

இன்று (புதன்கிழமை) நள்ளிரவில் சிவ பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X