அன்னதானப்பிரபுவே..சபரிமலையில் மூன்று வேளை அன்னதானம்!.. என்னென்ன ஸ்பெஷல்..இதோ மெனு!
சபரிமலை: ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பசியாற உண்டு மனதார ஐயப்பனை தரிசனம் செய்யலாம். சபரிமலை ஐயப்பனுக்கு அன்னதான பிரபு என்ற பெயரும் உள்ளது. மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தால் ஐயப்பன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டும் நேற்று முதலாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வசதிக் கொண்ட அன்னதான மண்டபத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை உப்புமா, சுக்கு காபியும், மதியம் 12.30 முதல் 3.30 வரை அளவில்லா மதிய சாப்பாட்டுடன், காய்கறி கூட்டு, பொறியலும், மாலை 4 மணி முதல் இரவு வரை பயறு கஞ்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை மண்டல பூஜை
மண்டல கால பூஜைகளுக்காக இந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று முதல் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை கோயில் நடையை திறந்தார். அப்போது, பக்தர்களின் சரணகோஷம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடந்தன. மண்டல காலத்தின் முதல் நெய்யபிஷேகம் அதிகாலை 3.20 மணி அளவில் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் சபரிமலையில் முந்தைய வருடங்களைப் போல பக்தர்கள் மிக அதிக எண்ணிக்கையில் குவிந்து வருகின்றனர். திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஆன்லைன் முன்பதிவு வசதி
தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வசதிக்காக சபரிமலை அருகே நிலக்கல் பகுதியில் 10 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல், செங்கணூர் ரயில் நிலையம், திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில், பந்தளம், குமுளி உள்பட கேரளாவில் 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அன்னதானப்பிரபு
சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக பார்க்கப்படுகிற புனித தலம் சபரிமலை. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் அதிகாரி,பாமரன் என பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே சபரிமலையின் தனிச்சிறப்பு. ஆண்டுதோறும் பலகோடி பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். ஐயப்பனுக்கு அன்னதான பிரபு என்ற பெயரும் உண்டு. எனவேதான் சரண கோஷத்தில் அன்னதான பிரபுவே என்று முழங்குவார்கள். சபரிமலைக்கு மாலை அணிந்து முதன்முதலாக மலைக்கு கன்னிசாமிகள் அவர்களின் குருசாமியின் தலைமையில் வீட்டிலேயே ஐயப்பனுக்கு பூஜைசெய்து, ஏழைகளுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கவேண்டும். இந்த அன்னதானத்தில் ஐயப்பன் மனிதரூபத்தில் கலந்துகொள்வார் என்பது ஐதீகம்.

ஐயப்பன் அவதாரம்
ஐயப்பன் அவதாரம் பற்றி பல புராண கதைகள் உள்ளன. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற ராஜசேகர பாண்டியன் திருவிதாங்கூர் மன்னனால் உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி செய்தார். ராஜசேகர பாண்டியன் பம்பை நதிக்கரையில் வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள் அவதாரமே குழந்தை மணிகண்டன். 12 வயது வரை மணிகண்டன் மனித உருவமாக வளர்ந்து தன அவதார நோக்கம் முடிந்த உடன் தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை.

இருமுடி பக்தர்கள்
ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் ஐயப்பனை கொண்டு வர சொன்னபோது இரண்டு முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.

பரசுராமர் ஆலயம்
பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் ராஜசேகர பாண்டியன். பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. இன்று அந்த சிலை உருக்கப்பட்டு கோவில் மணியாக கொடி மரம் அருகே காட்சி அளிக்கிறது. தற்போது உள்ள சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியால் செய்யப்பட்டது.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

திருவாபரண பெட்டி
பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண பெட்டி. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை, வாள், மாலை போன்றவை உள்ளன. ஓலை சுவடிகளை இன்றும் காணலாம். கடுமையான விரதம் கடைபிடிக்கப்படுவது சபரிமலை பக்தர்களுக்கு மட்டுமே. சாப்பிடாமல் பல விரதமுறை இருந்தாலும் சத்தான உணவுகளை சாப்பிட்டு விரதம் இருந்து அன்னதானம் செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில் மட்டுமே.

மூன்று வேளை அன்னதானம்
அடர்ந்த காட்டில் சாலை,ஹோட்டல்கள் இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக உணவும் பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக இருந்தவர் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணிய அய்யர். இன்றைக்கும் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. பசியாற உணவு உண்டு பக்தர்கள் மனதார ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications