ஆடிக்கிருத்திகை விழா..திருத்தணியில் கோலாகலம்..தெப்ப உற்சவம் காண குவியும் பக்தர்கள்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
திருத்தணி: ஆடிக்கிருத்திகை விழா திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று முதல் 25ஆம் தேதி வரைக்கும் 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
Recommended Video
முக்கிய நிகழ்ச்சியான ஆடி பரணி நேற்று அதிகாலை தொடங்கியது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிவப்பு, மஞ்சள் ஆடை அணிந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள், சரவணப் பொய்கை மற்றும் நல்லான் குளத்தில் நீராடிவிட்டு மலை படிக்கட்டு வழியாக நடந்து மலை கோயிலுக்கு வந்தனர்.

அங்கு, நீண்ட வரிசையில் நின்று நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோயில் மலர், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இன்று ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றர். பன்னீர் காவடி, புஷ்பக்காவடி போன்ற பல காவடிகளை சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பக்தர்கள் வசதிக்காக திருத்தணி - சித்தூர் சாலையில் உள்ள முருகூர் பகுதியிலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பட்டாபிராமபுரம் மற்றும் தரணிவராகபுரம் ஆகிய பகுதிகளிலும், அரக்கோணம் சாலையில் உள்ள பேருந்து பணிமனை அருகே என 3 இடங்களில் தற்காலி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. பஸ், கார், உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள், இந்த இடங்களில் நிறுத்திவிட்டு நடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
இன்றைய தினம் மாலையில் முதல்நாள் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகின்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் நகருக்குள் வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால் ஆதார் கார்டை காண்பித்தால் நகருக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, 7094400102, 7094400103 மற்றும் 7094400108 ஆகிய அலை பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கோயில் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications