கணவனின் எச்சில் தட்டில் மனைவி சாப்பிட காரணம் தெரியுமா? உணவு சாப்பிடுவதில் இவ்வளவு இருக்கா? சூப்பர்
சென்னை: நாம் சாப்பிடும்போது எந்த திசையில் சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? என்பது குறித்தெல்லாம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.. அதேபோல கணவன் தட்டில் மனைவி சாப்பிட என்ன காரணம் தெரியுமா? இதுகுறித்தெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்.
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், இப்படி தான் இருக்க வேண்டும் என்பது நியதியாகவே உள்ளது.. பிரார்த்தனை நேரம், குளிக்கும் முறை, சாப்பிடும் முறை, தூங்கும் முறை என அத்தனை விஷயங்களை பற்றியும் முன்னோர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதில் சாப்பிடுவது குறித்த வழிமுறைகள் மிக முக்கியமானவை.

சிலர் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவிவிடுவார்கள்.. இப்படி செய்வது குடும்பத்துக்கு கஷ்டத்தை தந்துவிடுமாம்.. உணவை அவமதிக்கும் செயல் என்பதுடன், தீராத மனக்கஷ்டத்துக்கும் ஆளாக வேண்டி இருக்கும் என்கிறார்கள்.
பரிமாறுதல்: அதேபோல, யாருக்காவது உணவு வழங்கினால், 2 அல்லது 4 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தர வேண்டும்.. ஒற்றை படை எண்களில் இட்லி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை வழங்கினாலோ, பரிமாறினாலோ அது அமலங்கலமாக கருதப்படுகிறது. அதிலும், 3 என்ற எண்ணிக்கையில் உணவு பரிமாறினால், அது இறந்தவர்களின் தட்டில் உணவு பரிமாறுவதற்கு சமமாம்.
அதேபோல நாம் சாப்பிடும்போதும் முறையான விஷயங்களை செய்யாவிட்டால், வீட்டில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.. அந்தவகையில், எந்த வீட்டில் உணவு வீணாக்கப்படவில்லையோ, அந்த வீட்டில் தெய்வத்தின் அருள் கிடைத்து வருமானம் பெருகும்.. பணத் தட்டுப்பாடு இருக்காது. அஞ்சறை பெட்டியில் தானியங்கள் நிரம்பி காணப்படும்.
உணவு உண்ணல்: எப்போதுமே சமையலறையும், உணவு சமைக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, அந்த உணவை நாய், காகம் போன்ற ஏதாவது ஒரு ஜீவராசிக்கு அளித்துவிட்டு சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் முன்பு போஜன மந்திரம் சொல்ல வேண்டும்.. சாப்பிடும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும். பிறரிடம் வாக்குவாதம், சண்டை போட்டுக் கொண்டே சாப்பிடக்கூடாது. அதேபோல, கிழக்கு திசையை நோக்கி மட்டுமே சாப்பிட வேண்டும்.. அல்லது மேற்கு திசையை நோக்கியும் உணவு அருந்தலாம்.. இதனால், தொழிலில் முன்னேற்றம் அல்லது பணவரவு உண்டாகும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்த்து சாப்பிடக்கூடாது..
சாப்பிடும் திசை: சாப்பிடுவதற்கு வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாப்பாட்டு தட்டில் மிச்ச உணவை வைக்கக்கூடாது.. இப்படி செய்வதால் ஆயுள் குறைந்து, பலநோய்களுக்கு ஆளாக நேரிடுமாம்.
சாப்பிடும் அளவைவிட கூடுதலான உணவை தட்டில் வைத்து சாப்பிட்டாலும் அது தீங்கை தந்துவிடும்.. ஒரு கையில் தட்டை வைத்து கொண்டு சாப்பிடாமல், ஏதாவது விரிப்பை வைத்து சாப்பிட வேண்டும்.
எச்சில் உணவு : கணவன் மிச்சம் வைத்த உணவை மனைவி சாப்பிடும் நடைமுறை தமிழகத்தில் இருந்து வருகிறது.. இதற்கு காரணம், கணவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளவும், பிடிக்காத உணவுகளை அடுத்த முறை சமைக்காமல் தவிர்க்கவும்தான் கணவனுக்கு முதலில் சாப்பாடு பரிமாறப்படுகிறதாம். அதேபோல கணவனில் எச்சிலில் உள்ள புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து, அது அவளது பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்க செய்யுமாம்..
இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் 6 மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் 6 மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனராம்..!!
சாப்பிடும் முன்பு 2 கைகளையும் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்த பின்பும் 2 கைகளையும் நன்றாக கழுவ வேண்டும்... தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் நமக்குதான் நலனும் நமக்குதான். சாப்பாடு தரையில் கொட்டக்கூடாது.. அதேபோல 2 கைகளால் பிசைந்து சாப்பிட கூடாது என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் உணவை தரையில் சிந்தாமல் சாப்பிட பழகி விட வேண்டும்.. ஸ்பூன் பயன்படுத்தாமல் கைகளால் எடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications