Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டுமா...இந்த பரிகாரங்களை செய்தால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அர்த்தநாரீஸ்வரரை மனதால் வணங்கினால் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவார்கள்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் பிரச்சினையாக இருக்கிறதா? கணவனும் மனைவியும் எலியும் பூனையுமாக சண்டை போடுகிறார்களா? தம்பதியர் ஒற்றுமை ஏற்படவும் அன்பும் காதலும் அதிகரிக்கவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். எளிதான இந்த பரிகாரங்களை வீட்டில் செய்தாலே போதும் எந்த ஒரு பிரச்சினையும் மாயமாகும்.

ஒரு வீட்டில், தம்பதி ஒற்றுமையுடனும் பொறுமையுடனும் கனிவுடனும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தால், அந்தக் குடும்பத்தில் வேறு உறவுகளிடையே விரிசல் ஏற்பட்டாலும் கூட, அவற்றை சரிசெய்துவிடுவார்கள்தம்பதிகள். அப்பேர்ப்பட்ட வலிமை மிக்க தம்பதி இடையே ஒற்றுமை இல்லாமல் போனால், அந்தக் குடும்பத்தின் நிலையை சரிசெய்யவே முடியாமல் போய்விடும்.

அதேபோல், கணவன் மனைவி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அர்த்தநாரீஸ்வரரை மனதால் வணங்குங்கள்.

அர்த்தநாரீஸ்வர மந்திரம் :

அர்த்தநாரீஸ்வர மந்திரம் :

ஓம் ஹும் ஜும் சஹ

அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை கணவன் அல்லது மனைவி இருவருமே சொல்லி வரலாம். விரைவில் தம்பதி இடையே இருந்து வந்த பிணக்குகள் தீரும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். புரிந்துகொண்டு விட்டுக்கொடுப்பார்கள்.

தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும் மந்திரம்

தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும் மந்திரம்

தினமும் அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என்று ஆத்மார்த்தமாக சொல்லி வாருங்கள். பூஜையறையில் அமர்ந்து சொல்லி வாருங்கள். 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வாருங்கள். இதேபோல், ''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என்று மூன்று முறை ஜபித்து, பெண்கள் குங்குமத்தை இட்டுக்கொண்டு வாருங்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் நிம்மதி பரவும். பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேருவார்கள்.

குங்குமம்

குங்குமம்

பெண்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து விட்டு தாலிச்சரடில் குங்குமம் இட்டுக்கொண்டு அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். விரைவில் தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்களும் பிணக்குகளும் நீங்கும்.

உப்பு மிளகு பரிகாரம்

உப்பு மிளகு பரிகாரம்

கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு, மிளகு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்பு மற்றும் மிளகிற்கு நிச்சயம் உண்டு. ஒருவரை வசியம் செய்யவும், அவரை நம் வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் உப்பு, மிளகு சிறந்த பரிகாரமாக உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நாள், நட்சத்திரம், நேரம், காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது.

தீராத சண்டை தீரும்

தீராத சண்டை தீரும்

கணவன், மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு ஒருவரை ஒருவர் முதலில் அமைதியான நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். சண்டையை தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் மனோதிடமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

27 மிளகு உப்பு

27 மிளகு உப்பு

உங்களால் முடிந்த நேரத்தில் நீங்கள் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். குண்டு குண்டாக இருக்கும் 27 மிளகுகள் மற்றும் இருபத்தி ஏழு கல் உப்புகளை எண்ணி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே சண்டை தீர வேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டு கண்ணாடி டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரில் முதலில் ஒவ்வொரு கல் உப்பையும் எடுத்து போட்டு கொண்டே வர வேண்டும்.

மிகச்சிறந்த பரிகாரம்

மிகச்சிறந்த பரிகாரம்

எல்லா மிளகு மற்றும் கல் உப்புகளையும் போட்டு முடித்த பின்பு நீங்கள் மனதார உங்கள் பிரச்சனையை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். என்னுடைய கணவன் அல்லது மனைவி என் மேல் மீண்டும் பழைய அன்புடன் அதே போல இருக்க வேண்டும். எல்லோரையும் போல நாங்களும் ஒருமித்த தம்பதிகளாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்ட பின் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அப்படியே ஓடும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். நீர் நிலைகள் இல்லாத பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் சிங்கிள் கொட்டி விடலாம். அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்த கொஞ்ச நாட்களிலேயே உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும்.

திங்கட்கிழமை விரதம்

திங்கட்கிழமை விரதம்

மனபிரச்னையால் பிரிந்த கணவன் மனைவி, உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ சிவனௌக்கு சோம வாரப் பூஜை செய்துவந்தால் விரைவில் ஒன்று சேர்வர். சோமனான சந்திர பகவான் இவ்விரத்தை பின்பற்றி நற்கதி பெற்ற விரதமாயின் இது சோமவார விரதம் என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு இருக்கும் விரதங்களில் மகத்துவம் வாய்ந்த விரதமானது இந்த சோமவார விரதம். இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் எல்லா திங்கள் கிழமைகளிலும் இந்த விரதம் இருக்கலாம். அப்படி இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை மனைவி பெறலாம் என்பது நம்பிக்கை.

திங்கட்கிழமை விரதம்

திங்கட்கிழமை விரதம்

சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை விரதம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

வயதான தம்பதியரின் ஆசி

வயதான தம்பதியரின் ஆசி

மேலும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர மனதை ஒருநிலைப்படுத்தி 21 திங்கள் கிழமை விரதம் இருந்தால் மனம் மாறி இல்லறம் நல்லறமாக மாறும். மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும். இவ்விரதமுறையில் பெரியவர்களின் ஆசீர்வாதம் மிக முக்கியமானதாாகும்.பெற்றோரிடமோ அல்லது மாமனார் மாமியாரிடமோ அல்லது வயதான தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளலாம்.

சிவபார்வதி தரிசனம்

சிவபார்வதி தரிசனம்

திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் நம்முடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+