குபேரன் அருள் தரும் குரு புஷ்ய யோகம்...வியாழக்கிழமை இந்த பூஜை செய்தால் கோடீஸ்வரர் ஆவது உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:பூச நட்சத்திரமும், குரு பகவானின் அருள் பெற்ற வியாழக்கிழை தினமும் இணைந்து வருவது அற்புதமான நாளாகும். அந்த தினம் குரு புஷ்ய யோகம் நிறைந்தது. இந்த நாளில் குபேர பூஜை செய்து வழிபட்டால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். நாளைய தினம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வியாழக்கிழமை பூசம் நட்சத்திரமும் கூடிய குரு புஷ்ய யோகம் கூடி வந்துள்ளது. இந்த யோகத்தின் சிறப்பு என்ன, அதன் பலன்கள் என்ன என்பதைப்பற்றியும் பார்க்கலாம்.

வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் 12 ராசிகளை ஆளுகின்றன. 12 ராசிகளிலும் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில், 8 வது நட்சத்திரம் கடக ராசியில் உள்ள பூசம் நட்சத்திரம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட பூசம் நட்சத்திர அதிபதி சனி. கடக ராசிக்கு அதிபதி சந்திரன். குருவும் சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகத்தை ஏற்படுத்துகிறது.

குரு புஷ்ய யோகம்

குரு புஷ்ய யோகம்

பூசம் நட்சத்திரம் மற்றும் வியாழக்கிழமை இணைந்து வரக்கூடிய நாள் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நிகழ்கிறது. இந்த தினத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய நாள் மிகச் சிறந்த நாள். குரு பூசம் யோகா தினம் லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்வதற்கும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் புனிதமான நாளாகும்.

என்ன வாங்கலாம்

என்ன வாங்கலாம்

சனியின் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கும் பூச நட்சத்திரம் குருவுக்கு உகந்த வியாழக்கிழமை அமையும் போது, மங்களகரமாகிறது. இந்த நாளில் புனித செயல்கள் செய்யலாம் தங்க, வைர நகைகள் வாங்கவும், புதிய மனை, வீடு வாங்க ஏற்ற நாள். நிலம், சொத்து, வெள்ளி, மின்னணு பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றை வாங்க இந்த நாள் சிறந்த நாளாகும்.

லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜை செய்யவும் இந்த நாள் ஏற்ற நாள். செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர்.குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தனர். குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் ஸ்வர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். குபேரனுக்கு ராவணன்,கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர்.

 செல்வ வளம் பெருகும்

செல்வ வளம் பெருகும்


பத்மம்,மஹாபத்மம்,மகரம்,கச்சபம்,குமுதம்,நந்தம்,சங்கம்,நீலம்,பத்மினி ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். இவற்றுள் சங்க நிதி மற்றும் பதும நிதி இரண்டும் கூடிக்கொண்டே இருக்கும் நிதிகள் என்று நம்பப்படுகிறது.
இந்த சங்க நிதி மற்றும் பதும நிதிகளின் அதிபதியான தெய்வ மகளீரை சங்க லட்சுமி,பதும லட்சுமி என்று அழைக்கின்றார்கள். இவர்கள் இருவரும் குபேரனின் மனைவிமார்கள் என்றும், இவர்களிடம் குபேரன் செல்வத்தினை கொடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

குபேர மந்திரம்

குபேர மந்திரம்

குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும். நாளைய தினம் குரு புஷ்ய யோகம் இணைந்த நல்ல நாளில், குபேர மந்திரமான "ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ!" என்று சொல்லி வணங்கலாம்.

கோடீஸ்வர யோகம் தேடி வரும்

கோடீஸ்வர யோகம் தேடி வரும்

பொதுவாகவே வியாழக்கிழமை குரு பகவானின் ஆசி நிறைந்த நாள். நாளைய தினம் அதிகாலையில் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி குபேரன் படத்திற்கு முன்பாக காய்ச்சிய பாலில் ஏலாக்காய், கிராம்பு, சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேரனுக்கு இனிப்பு பிடிக்கும். இனிப்பு நைவேத்தியம் செய்வதால் குபேரன் மகிழ்ச்சியோடு செல்வத்தை வாரி வழங்குவார். வியாழக்கிழமை தினத்தன்று குபேரனை வழிபட்டால் அதிகமாக செல்வம் சேரும். அதுவும் நாளைய தினம் பூசம் நட்சத்திரமும் இணைந்த அற்புதமான நாளாக உள்ளதால் மகாலட்சுமி பூஜை செய்யவும் குபேர பூஜை செய்யவும் எற்ற நாள். எனவே மறக்காமல் குபேர பூஜை செய்யுங்கள். கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+