புலிவாகனத்தில் வரும் மகரசங்கராந்தி..யாருடைய வீட்டில் செல்வம் பெருகும்..யாருக்கு ராஜயோகம்
சென்னை:
காலதேவதை மகரசங்கராந்தியின் பிரவேசம் ஜனவரி 14ஆம் தேதி நிகழ உள்ளது. மகரசங்கராந்தியின் சஞ்சாரத்தினால் 2023 ஜனவரி 14ஆம்தேதி தொடங்கி 2024 ஜனவரி 14ஆம் தேதி வரை என்ன பலன்கள் நடைபெறும் என்பதை தனது லட்சணங்களினால் உணர்த்துகிறார் மகர சங்கராந்தி. இந்த ஆண்டு தேவதையின் பெயர், வாகனம், உடை பற்றி பஞ்சாங்கத்தில் என்ன பலன் சொல்லியிருக்கிறார்கள். எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ யோகமும் வெகுமானமும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும்.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல்நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.
மகரசங்கராந்தி தேவதையின் பெயர், தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இந்த ஆண்டு மகரசங்கராந்தி தேவதை எப்படி எதன் மீதேறி வருகிறார் அதற்கான பலன்கள் எப்படி என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 30ஆம் தேதி ஜனவரி 14, 2023ஆம் ஆண்டு சனிக்கிழமை கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி சித்திரை நட்சத்திரம், சுகர்ம நாமயோகம் பாலவ கரணத்தில் இரவு 8.45 மணிக்கு சூர்ய உதயாதி 35.17 நாழிகை அளவில் சிம்ம லக்னம் மிதுன நவாம்சையில் சங்கராந்தி பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதைக்கு ஒரு பெயர் உண்டு. 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த ஆண்டு தேவதையின் பெயர், வாகனம், உடை பற்றி பஞ்சாங்கத்தில் என்ன பலன் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
மகரசங்கராந்தி தேவதையின் பெயர்: ராக்ஷஸீ - யுத்தம்
வாகனம்: புலி - மிருக பயம்
வஸ்திரம் : சிகப்பு - பயம் கணக்கர்களுக்கு பீடை
ஆபரணம்: வைடூரியம் - கலகம், ரோக பயம்
அபிஷேகம் : கங்கா தீர்த்தம்- ஆறுகளில் வெள்ளம்
ஆயுதம் : கட்கம் - யுத்தம்
கந்தம் : குங்குமம் - சௌபாக்கியம்,பிராமணர்களுக்கு பயம்
புஷ்பம் : சிறு செண்பகம் - பிராமணர்களுக்கு சௌக்கியம்
சத்திரம் (குடை) : ரவுப்பியம் - இரும்பு விலை ஏற்றம்
சாமரம் ( விசிறி) : நீலம் - பயிர் நாசம்
வாத்தியம்: மகாபேரி - யுத்தம்
பாத்திரம்: தாமிரம் - விருஷ்டி, சுபிட்சம்
போஜனம்: பாயாசம்- வியாதி,பீடை
முகபலன் : குரோதமுகம் - தானிய விருத்தி
ஜாதி : துவி ஜென்மம் - மிலேச்சர்களுக்கு பீடை
திக்கு: தெற்கு - பிராமணர், சத்ரியர்களுக்கு சௌபாக்கியம்,வைசியர்களுக்கு பீடை
பட்சம் : கிருஷ்ணபட்சம் - வியாதி
வாரம் : சனிக்கிழமை - வியாதிபயம்
காலம் : ராத்திரி காலம் - கோபாலர்களுக்கு பீடை
லக்கினம் : ஸ்திர லக்கினம் - தானிய குறைவு
சிம்ம லக்கினம் - ஜெகத் சுகம்,புழுக்கம்
மகரசங்கராந்தி பலன்கள்:
ஹஸ்தம்,சித்திரை,சுவாதி ஆகிய 3 நாட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன நாசமும், விசாகம், அனுசம், கேட்டை,மூலம்,பூராடம், உத்திராடம், ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் உண்டாகும்.
திருவோணம், அவிட்டம்,சதயம் ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான நாசமும் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி,அசுவினி,பரணி,கிருத்திகை, ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் ஏற்படும்.
ரோகிணி,மிருகஷீரிடம்,திருவாதிரை,ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜகோபமும், புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்,உத்திரம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் கிடைக்கும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications