For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளிக்கிழமை இந்த பரிகாரம் செய்ய மறக்கவே மறக்காதீங்க.. எப்படிப்பட்ட பணக்கஷ்டமும் மாயமாகும்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய சூழ்நிலையில் ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்கள் வந்து கொண்டுதான் உள்ளது. பொருளாதார ரீதியான கஷ்டங்கள் பலரையும் வாட்டி வதைக்கிறது. கடன் பட்டவர்கள் மனம் கலங்கி அவமானத்தில் கூனி குறுகிப்போய் விடுவார்கள். கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே தூங்காமல் தவித்தவர்கள் இருக்கிறார்கள். கடன் பிரச்சினை தீர ஏதாவது ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கி தவிக்கின்றனர்.
அவர்களுக்காகவே சில பரிகாரங்களை கூறியுள்ளோம்.

பொதுவாகவே நம்பிக்கைகள் நம்மை வழி நடத்தும். நாம் கோடீஸ்வரர்களாக மாறுவோம் என்ற நம்பிக்கை நம்மை வழிநடத்தும். பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் இல்லை. பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் இறக்கும் போது கோடீஸ்வரர் ஆக இருக்க வேண்டும் என்று இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர்.

பிசினஸ், வேலையில் சேர, விவசாயம் செய்ய, சின்ன கடை வைக்க என ஏதாவது ஒரு காரணத்திற்காக சக்திக்கு தகுந்து கடன் வாங்கியிருப்பார்கள். அந்த பணம் பலருக்கும் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கியிருக்கியிருக்கும். சிலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி மீள முடியாத கடனில் தள்ளியிருக்கும். அதுபோல கடன் பிரச்சினை தீர சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. உங்களால் எந்த பரிகாரத்தை எளிதாக செய்ய முடியுமோ அந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் உங்களின் பிரச்சினை படிப்படியாக நீங்கும்.

அடிக்கடி பாம்பு கனவில் வருது..பூசாரியை நம்பி செஞ்ச பரிகாரம்..பாம்பிடம் நாக்கை நீட்டி.. கதறிய விவசாயி அடிக்கடி பாம்பு கனவில் வருது..பூசாரியை நம்பி செஞ்ச பரிகாரம்..பாம்பிடம் நாக்கை நீட்டி.. கதறிய விவசாயி

குல தெய்வம்

குல தெய்வம்

நம்முடைய கஷ்டங்கள் தீர கண்ணீரை துடைக்க குலதெய்வம்தான் கை கொடுக்கும். குல தெய்வ கோவிலுக்கு சென்று எடைக்கு எடை பச்சரிசி தானமாக கொடுக்க வேண்டும். பச்சரிசி மாவு சர்க்கரை கலந்து குல தெய்வ கோவிலில் எறும்புக்கு அளிக்க கடன் பிரச்சினை தீரும் பண வருமானம் வரும். உங்கள் ஊரில் உள்ள எல்லைச்சாமிக்கு பட்டு சார்த்தி பொங்கல் வைத்துப் படைய லிட்டால், கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

சர்க்கரை தானம்

சர்க்கரை தானம்


காலையில் 6 மணிக்குள் எழுந்து குளித்து விட்டு, பூஜையறையில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி, சுவாமியை வழிபடுங்கள். அதேபோல் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக விளக்கேற்றி வழிபடலாம்.
காலை நேரத்தில் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகள் சாப்பிடும் போது உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவது உங்கள் கண் கூடாக தெரியும்.

சனி பகவான்

சனி பகவான்

நோய், கடன் இரண்டையுமே வளரவிடக்கூடாது என்பார்கள். இந்த இரண்டுமே எப்படிப்பட்ட மனிதர்களையும் துவண்டு போகச் செய்துவிடும். ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை கடனுக்குக் காரகத்துவம் பெற்றவர் சனி. சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட கடன் பிரச்சினை நீங்கும். நம்முடைய வீட்டில் தண்ணீரை வீணாக்கக்கூடாது. தானியங்களையும் வீணாக்கக்கூடாது.

எமகண்ட நேரத்தில் தானம்

எமகண்ட நேரத்தில் தானம்


செவ்வாய் கிழமை எம கண்ட வேளையில் கொள்ளு தானம் கொடுக்க வேண்டும். விநாயகர் கோவிலில் 7 செவ்வாய்கிழமை எமகண்ட நேரத்தில் கொள்ளு தானம் செய்தால் கடுமையான கடன் தீரும். செவ்வாய்கிழமை விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட கடன் பிரச்சினை தீரும். அசலின் ஒரு பகுதியை செவ்வாய் கிழமை எமகண்ட நேரத்தில் திருப்பி தரவேண்டும் அப்படி கொடுக்கும் போது 7 கொள்ளு பயிறை பணத்துடன் வைத்து தரவேண்டும். செல்வ விநாயகருக்கு பன்னீர் ரோஜா மாலை போட்டால் கடன் தீரும்.

அன்னதானம்

அன்னதானம்

வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம். தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும். தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி சன்னதியில் மல்லிகை பூ மாலை சாற்றி வழிபடவும்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை

அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும். ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

கடன் தீர்க்கும் கந்தன்

கடன் தீர்க்கும் கந்தன்

மைத்ர முகூர்த்த நேரத்தில் அசலில் ஒரு சிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும். குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம், கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம். மரணயோகம் உள்ள நாட்களிள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்த கடன் தீர்ந்துவிடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.
சஷ்டி விரதம் இருந்தாலும் கடன் பிரச்சினை நீங்கும்.

இந்து உப்பு

இந்து உப்பு

கல் உப்பு போல ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இந்து உப்பு இருக்க வேண்டும். இந்து உப்பை சமையலுக்கு பயன்படுத்தலாம். வெள்ளிக்கிழமை அன்று இந்த உப்பை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய உப்பை கொண்டு வந்து ஒரு பீங்கான் ஜாடியில் கொட்டி வைத்து சமையலறையில் கல் உப்பு பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். இந்த உப்பு ஜாடிக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். நம்முடைய பணக்கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினசரியும் காலையில் இந்து உப்பு கொட்டி வைத்திருக்கும் உப்பு ஜாடிக்கு உள்ளே கையை வைத்து பணக்கஷ்டம் தீர வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். சேமிக்க வேண்டும் வேண்டிக்கொண்டு தினசரி வேலையை தொடங்குங்கள். பண வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். கடன் பிரச்சினையும் மெதுவாக தீரும்.

English summary
Economic hardships are weighing on many. Those who are in debt will be upset and shrink in shame. There are people who can't sleep because of the thought of how they are going to pay off their debt. They yearn for some way to solve the debt problem. We have mentioned some remedies for them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X