For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..மாமரமே முளைக்காத காரணம் இதுதான்!

Google Oneindia Tamil News

திருச்செந்தூர்:

முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும். பல சிறப்புகளை கொண்ட திருச்செந்தூரில் இன்றைக்கும் மாமரங்கள் வளர்வதில்லை. அதற்கான காரணமே சூரசம்ஹாரம்தான் என்று சொல்லப்படுகிறது. மாமரத்தின் வடிவில் நின்ற சூரனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி தினத்தில் இது நிகழ்ந்தது.

அரசுரர்களை அழிக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தெறித்த அக்னியில் அவதரித்தவர் ஆறுமுகன். தமிழ்கடவுள் முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் நிவர்த்தியானது. எனவேதான் முருகனின் அறுபடை வீடு தலங்களில் திருச்செந்தூர் தலம் தனித்துவமும் கொண்டதாக திகழ்கிறது.

முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் கோயில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளிலும் ஆடிக்கிருத்திகை கோலாகலம்..பால்குடம் சுமந்த பக்தர்கள் முருகனின் அறுபடை வீடுகளிலும் ஆடிக்கிருத்திகை கோலாகலம்..பால்குடம் சுமந்த பக்தர்கள்

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம்

சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும். தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

அறுபடை வீடுகளில் 2வது தலம்

அறுபடை வீடுகளில் 2வது தலம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.
திருச்செந்தூரில் சுப்ரமணியர், சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்ரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

முருகப்பெருமான் தன் தாய் பார்வதியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமர வடிவில் இருந்த அசுரன் மீது விட அந்த வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும் பரமகாருண்ய மூர்த்தியான அவர் சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார்.

வரம் கேட்ட சூரபத்மன்

வரம் கேட்ட சூரபத்மன்

முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார்.

சஷ்டி திதியில் சூரசம்ஹாரம்

சஷ்டி திதியில் சூரசம்ஹாரம்

சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று.

சூரபத்மன்

சூரபத்மன்

முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7ஆம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

 நோய் தீர்த்த முருகன்

நோய் தீர்த்த முருகன்

ஆதிசங்கரர் வட மாநிலத்திற்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கியது. இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரின் சிலை உள்ளது.

முருகனால் கிடைக்கும் குழந்தை வரம்

முருகனால் கிடைக்கும் குழந்தை வரம்

சட்டி இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வளரும் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளனர். சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார நாளில் சுப்ரமணியரை தரிசனம் செய்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள் குழந்தை இல்லாத பெண்களுக்கு மசக்கை ஏற்படும். மாங்காய் சாப்பிடுவார்கள். அழகன் முருகனைப் போல ஒரு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூரில் ஒரு தினம் உபவாச விரதம் இருப்பவர்களுக்கு அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

English summary
The purpose of Muruga's incarnation was to destroy the demons. It was in Thiruchendur that the purpose of the incarnation was fulfilled. So among the places of Lord Murugan, Tiruchendur has divine excellence and uniqueness. Thiruchendur, which has many specialties, does not grow mangoes even today. It is said that the reason for that is Surasamharam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X