India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஷ்டங்களில் சிக்கியவர்களுக்கு கை கொடுக்கும் தீபம்.. இதை ஏற்றினால் வறுமை நீங்கும்

Google Oneindia Tamil News

மதுரை: நம் வீட்டிலோ மனதிலோ சில கஷ்டங்கள் ஏற்பட்டால் அந்த கஷ்டங்களை போக்க சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். அதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் காணாமல் போகும். எளிமையான பரிகாரம் ஒன்று உள்ளது. சிவபெருமானுக்கு ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் அற்புத மாற்றங்கள் ஏற்படும். வறுமையில் வாடி கொண்டிருப்பவர்கள் இந்த தீபத்தை 9 செவ்வாய் அல்லது 9 வெள்ளிக்கிழமை ஏற்றினால் கை மேல் பலன் கிடைக்கும்.

ஊமத்தை என்பதற்கு உன்மத்தம், என வேறு பெயரும் உண்டு, உன்மத்தம் என்றால் ஆவேசமான மனநிலை, பைத்தியம் எனப் பொருள்படும். உன்மத்தம் கொண்ட மனிதர்களுக்கு நிவாரணம் தரவும், உடல் வேதனைகளில் வாடும் மனிதர்களுக்கு நல்லுதவி செய்யவும் ஊமத்தை செடி, ஒரு அற்புத கொடை என்பதில் ஐயமில்லை. ஆயினும், ஊமத்தை செடியின் விஷத்தன்மை காரணமாக, அதை கவனமுடன் கையாள வேண்டும்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல, விஷத்தை, விஷத்தால் முறிக்கும் தன்மையுள்ள ஒரு விஷச்செடியான ஊமத்தைச்செடி கஷ்டங்களையும் கவலைகளையும் நீக்கும் செடியாக உள்ளது. வெற்றிலை போன்ற சற்றே பெரிய இலைகளுடன், இதன் காய்களின் வெளிப்பரப்பில், முட்கள் அதிகம்கொண்டு காணப்படும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும். ஊமத்தை காய் உருண்டையாகவும் பசுமையான முட்கள் அடர்ந்ததாகவும் இருக்கும். இலை, பூ, காய் விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

மன நோய் போக்கும் ஊமத்தை

மன நோய் போக்கும் ஊமத்தை

விபத்து போல தோன்றிய அதிர்ச்சியினாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ தமது இயல்பான நிலையை மறந்து, நிகழ்கால வாழ்க்கையின் பாதிப்புகள் எதுவும் அறியாமல், கற்பனை உலகில் சஞ்சரித்து, ஒரு ஜடம் போல வாழும் எண்ணற்றோருக்கு ஈடு இணையற்ற மருத்துவ மாமணியாகத் திகழ்கிறது, இந்த ஊமத்தை. சிறிது, ஊமத்தை மலர்களை இரவில், ஒரு அண்டா அல்லது குளிக்கும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் இட்டு வைத்து, காலையில் தலையில் இந்த மலர்களை நன்கு தலையில் தேய்த்து, குளிக்கச் செய்ய வேண்டும். இது போல, தொடர்ந்து ஒரு வாரம் குளித்து வரச் செய்ய, அவர்களின் மன நிலையைப் பாதித்த, சித்த பிரமை மற்றும் உன்மத்தம் எனும் பைத்திய நிலை நீங்கி, அவர்களும் இயல்பு வாழ்க்கைக்கு, சுலபமாகத் திரும்புவர்.

ஊமத்தை இலையால் சிவனுக்கு அர்ச்சனை

ஊமத்தை இலையால் சிவனுக்கு அர்ச்சனை

சிவனுக்கு உரிய இலையாக வில்வ இலை உள்ளது. அதற்கு இணையாக ஊமத்தை இலையும் உள்ளது. ஊமத்தை இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதால் நன்மைகள் பல நடைபெறும். வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. ஊமத்தை காயை எடுத்துக்கொண்டால் அதன் மேல் பகுதியில் முட்களாக இருக்கும். முட்கள் கொண்ட இந்த காயால் தீபம் ஏற்றினால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் முட்களை அடியோடு நீக்கிவிட முடியும்.

பணவறட்சியை நீக்கும் ஊமத்தங்காய்

பணவறட்சியை நீக்கும் ஊமத்தங்காய்

சிலருக்கு கையில் சுத்தமாக பணம் இருக்காது. வறுமை தாண்டவமாடும். கடன் தொல்லையால் கஷ்டப்படுவார்கள். பண பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் இந்த தீபத்தை ஏற்றினால் மூன்றே வாரங்களில் நல்ல பலனை பெற முடியும். நம்முடைய வீட்டில் இருக்கும் வறட்சியை நீக்கி, வீட்டை வளமாக்கக் கூடிய தன்மை ஊமத்தங்காய்க்கு உள்ளது.

ஊமத்தங்காய் தீபம்

ஊமத்தங்காய் தீபம்

ஊமத்தங்காய் சாலை ஓரங்களில் காய்த்திருக்கும். நேரடியாக உங்களால் பறித்து வர முடிந்தால் படித்து வரலாம். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். இரண்டு ஊமத்தங்காய்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் காம்புகளை நீக்கி விட்டு சிறிய துளை போட்டுக் கொண்டு அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும். உள்ளே கொஞ்சம் வெண்கடுகு போட்டு அதன் பின்பு, ஒரு சிறிய மண் அகல் விளக்கின் மேல் அந்த உமத்தங்காய்களை வைத்து அதன் உள்ளே இலுப்பை எண்ணெய் மட்டுமே ஊற்றி பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

ராகு காலத்தில் தீபம் ஏற்றலாம்

ராகு காலத்தில் தீபம் ஏற்றலாம்

சிவபெருமானை நினைத்து வேண்டிக் கொண்டாலும் நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக நீங்கத் தொடங்கும்.
ஊமத்தங்காய்களின் நிற்க வைக்க அடியில் மண் அகல் தீபங்களை சிலர் வைப்பார்கள். மண் அகல் தீபத்திற்கு பதிலாக கொஞ்சம் பசும் சாணத்தை கொண்டு வந்து, அதன் மேல் இந்த ஊமத்தங்காய் தீபத்தை ஏற்றுவது நல்லது.
இந்த தீபத்தை ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமான மாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் உங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கண் திருஷ்டி பிரச்சினை நீங்கும்

கண் திருஷ்டி பிரச்சினை நீங்கும்

கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றலையும் விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு. தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள். அதன் பின்பு உங்களுக்கு மனரீதியாக உங்களுடைய வீட்டில் மாறுதல்கள் ஏற்படுவதாக உணர்ந்தால், தொடர்ந்து அடுத்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த தீபத்தை ஏற்றுவதால் தவறொன்றும் கிடையாது. வீட்டை பிடித்த பீடை நீங்கி, வீட்டில் சுபிட்சம் நிலவ இது ஒரு சுலபமான ஆன்மீக ரீதியான வழிபாடு என்பது குறிப்பிடத்தக்கது. 9 செவ்வாய் அல்லது 9 வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றினால் பணக்கஷ்டம் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.

 ஊமத்தங்காய் பரிகாரம்

ஊமத்தங்காய் பரிகாரம்

திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கும். கண் திருஷ்டிகள் நீங்க புதிய மண் சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில் கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். அதோடு கண் திருஷ்டி காணாமல் போகும்.
ஊமத்தை முழுச் செடியும் மிக்க விஷத் தன்மை உடையதாகையால், அதன் பின் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்னரே, சாப்பிடவோ அல்லது குழந்தைகளுடன் விளையாடவோ செய்ய வேண்டும்.

English summary
Oomathankai deepam Parikaram: ( வறுமை நீக்கும் ஊமத்தங்காய் தீபம் பரிகாரம்)If there are some difficulties in our home or mind we need to do some remedies to get rid of those difficulties. That way our difficulties will disappear. There is one simple solution. Lighting a Oomathankai deepam for Lord Shiva will bring about miraculous changes. Those who are languishing in poverty will get the upper hand if they light this lamp on 9th Tuesday or 9th Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X