ஜொலிக்கும் திருவண்ணாமலை..கார்த்திகை தீப விழா எல்லை தெய்வ வழிபாட்டுடன் நாளை தொடக்கம்..27ல் கொடியேற்றம்
கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் எல்லை தெய்வ வழிபாட்டுடன் நாளை தொடங்குகிறது. 27ம் தேதி கொடியேற்றமும் முக்கிய நிகழ்ச்சியான மகாதீப விழா டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. தீப திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது திருவண்ணாமலை.
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த அளவிலான பக்தர்களே தீபத்திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதால் இந்தாண்டு தீபத்திருவிழாவை காண சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லை தெய்வ வழிபாடு
கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். தீபத்திருவிழா எவ்வித இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி 3 நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நாளை துர்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.

அதிகாலையில் கோவில் திறப்பு
இதையொட்டி நாளை அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். இரவு 8மணியளவில் சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

பிடாரி அம்மன்
அதைதொடர்ந்து நாளைய தினம் அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வருவார். தொடர்ந்து 26ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெறும்.

27ல் கொடியேற்றம்
வருஙம 27ம் தேதி கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கும். கடந்த 2 ஆண்டுகளாக மாட வீதியில் சுவாமி விதியுலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் மாடவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.

அன்னதானம் வழங்க அனுமதி
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 27 பொது இடங்கள் மற்றும் 157 தனியாருக்கு சொந்தமான இடங்கள், மண்டபங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்க விரும்புவோர் வரும் 26ம் தேதிக்குள் முன் அனுமதி பெற வேண்டும். திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் உரிய அனுமதி பெறலாம். மேலும், இணையதள முகவரியில் விண்ணப்பித்தும் அனுமதி பெறலாம்.

வாழை இலையில் அன்னதானம்
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையில் இருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய் தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்கக்கூடாது. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது.

தூய்மை அவசியம்
உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகளை தயாராக வைக்க வேண்டும். அன்னதானம் வழங்கும் இடத்தை தூய்மையாக வைக்க வேண்டும். அன்னதானம் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications