பெருமாளின் கால் மெட்டியை வாயால் கடித்த திருமங்கை மன்னன்..ஸ்ரீரங்கத்தில் வேடுபறி விழா உற்சாகம்
திருச்சி: திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற வையாளி உற்சவத்தில் திரளானவர்கள் பங்கேற்று நம்பெருமாளை வழிபட்டனர். திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து ராப்பத்து உற்சவம் 20 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்றது. தினந்தோறும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ராப்பத்து ஏழாம் திருநாளான, 8ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான, 9ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் அரங்கேறியது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து நிகழ்வின் 8ஆம் நாளான நேற்று தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகே உள்ள மணல்வெளி பகுதிக்கு அழைத்து சென்ற பாதந்தாங்கிகள் அனைத்து திசைகளிலும் கொண்டு சென்று மக்களின் தீவினைகளை வேட்டையாடுவது போல பாவனை செய்த வையாளி உற்சவத்தை அங்கு திரண்டிருந்த ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்.
இதை அடுத்து கொள்ளையில் ஈடுபட்ட திருமங்கை மன்னன் நம்பெருமாளிடமே கொள்ளை அடித்ததை உணர்ந்து சரணாகதி அடையும் வேடுபறி வைபவமும் அரங்கேறியது. வேடுபறி உற்சவம் அரங்கேறுவதற்கு ஒரு புராண கதை உள்ளது.
திருமாலுக்கு தொண்டு செய்தே தனது சொத்துக்களை இழந்தவர் நீலன் என்னும் திருமங்கை மன்னன் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இந்த ஆலயத்தை கட்ட துவங்கி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஆலயப்பணி முழுமை பெறாமல் போய்விடுமோ என்று அஞ்சி செல்வந்தர்களிடம் வழிப்பறி செய்தாவது ஆலயப்பணியை நிறைவு செய்திட துணிகிறான்.

திருமங்கை மன்னனை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் விளையாட்டு காட்டி மணமகன் வேடத்தில் மகாலட்சுமியுடன் வீதியில் வலம் வர அவரின் பொருட்களை வழிப்பறி செய்கிறார் திருமங்கை மன்னர், எல்லா ஆபரணங்களையும் பறித்தவரால் மணமகன் வேடத்தில் இருந்த பெருமாள் காலில் அணிந்திருந்த நகையை மட்டும் கழற்ற முடியவில்லை, பல்லால் கடித்து கால் மெட்டியை கழற்ற முயன்றபோது பகவானின் ஸ்பரிசம் பட்டு தான் வழிப்பறி செய்துக்கொண்டு இருப்பது பெருமானிடம் என்பதை உணர்ந்த நீலன் என்னும் திருமங்கை மன்னன் பெருமாளிடம் சரணாகதியடைந்தார். அப்போதுதான் ஓம் நமோ நாராயணா எனும் மந்திரத்தை உபதேசித்து திருமங்கை மன்னனை தன்னுடைய ஆழ்வாராய் பெருமாள் ஏற்றுக்கொள்கிறார்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் உள்ளேயுள்ள மணல் வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்பு நடந்தேறியது. இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் காண கண்கோடி வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் இருந்து ராப்பத்து நிகழ்வின் எட்டாம் நாள் வேடுபறி நிகழ்ச்சி அற்புதமாக நடந்தேறியது. பத்தாம் திருநாளான 11ஆம் தேதி தீர்த்தவாரியும், 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications