பூஜை அறையில் இந்த 21 மலர்களையும் விநாயகருக்கு சூட்டுங்க.. வெள்ளெருக்கு பூவின் மகிமை.. வேரின் வெற்றி
சென்னை: பூஜைகள் என்றாலே பூக்கள்தான் முன்னணியில் உள்ளன.. மணமுள்ள பூக்களை கொண்டு இறைவனை பூஜிப்பது, நல்ல ஆற்றலை ஈர்க்க உதவுகிறது.. வழிபாட்டிற்கு ஏற்ற சூழலையும் உருவாக்குகிறது. அதிலும் கடவுள்களுக்கு பிடித்த மலர்களை கொண்டு பூஜிப்பது பலனையும் பெற்று தருகிறது.. அந்த வகையில், விநாயகருக்கு பிடித்த பூக்கள் என்னென்ன? எந்தெந்த பூக்களை கொண்டு விநாயகரை வணங்கலாம்? விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு வைத்து வழிபடும் 21 பூக்கள் என்னென்ன? என்பது குறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
விநாயகருக்கு சாமந்திப்பூ மிகவும் பிடிக்கும்.. நேர்மறை உணர்ச்சிகளையும் ஆற்றலையும் இந்த பூக்கள் பிரதிபலிக்க செய்கின்றன.. அதனால்தான் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில், சாமந்திப்பூக்களை பிள்ளையாருக்கு அர்ப்பணிப்பார்கள்.. நாள்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இந்த சாமந்திக்கு உண்டு.

செம்பருத்தி - சங்குப்பூக்கள்
விநாயகப் பெருமானை மகிழ்விக்கவும், எதிரிகள் இல்லாமல் வாழவும், வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் காணிக்கையாக செம்பருத்தி பூவையும் வைத்து வழிபடலாம்
திருமணமாகாமல் தடைபட்டு உள்ளவர்கள், நீலநில சங்குப்பூவினை, விநாயகருக்கு வைத்து வழிபடலாம்.. நெகட்டிவ் ஆற்றல், மோசமான கண் திருஷ்டியிலிருந்து விடுபட செவ்வந்தி பூக்களை வைத்து வழிபடவேண்டும்.
பாரிஜாதம் - மகிமை
பாரிஜாதம் பூக்களை வைத்து விநாயகரை வணங்கலாம்.. பாரிஜாதம் என்றாலே "பரவியது" அல்லது "பரலோகம்" என்று அர்த்தமாம்.. அதேபோல, விநாயகருக்கு சிவப்பு அரளி பூக்களை வைத்து வழிபடலாம்.. விரும்பியவர்களை மணம் முடிக்க வேண்டுமானால், இந்த பூவை வைத்து விநாயகரை வழிபட வேண்டுமாம்.
இந்த பூக்களை போல விநாயகருக்கு மிகவும் பிடித்தது வெள்ளெருக்கு பூக்கள்தான்.. விநாயகருக்கு இந்த பூவில்தான் மாலை கட்டி அணிவிப்பார்கள்.. வறுமை நீங்க வேண்டுமானால், பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று, எருக்கம் பூமாலையை விநாயகருக்கு அணிவிப்பது வழக்கமாகும்.
வெள்ளெருக்கு சிறப்புகள்
விநாயகர் வழிபாட்டில், நீலநிற மற்றும் வெள்ளை நிறத்திலான இரண்டு எருக்கம் பூக்களுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. காரியத்தில் தடைகள் இருப்பவர்கள், ஆரோக்கியத்தில் குறைகள் உள்ளவர்கள் எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதால் நன்மைகளை பெறலாம்.
கோயிலில் விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வர வேண்டாம் என்பார்கள்.. எருக்கம்பூ மாலையை பிரசாதமாக அர்ச்சகர்களும் வழங்க மாட்டார்கள்.. அப்படியே தந்தாலும், இறைவனின் பிரசாதமாக பெண்களும் அதனை தலையில் வைத்துக் கொள்ள முடியாது.
வெள்ளெருக்கு வேர்கள்
அதேபோல, விநாயகருக்கு வீட்டில் வைத்து பூஜை செய்யும்போது, வெள்ளெருக்கு வேர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனால் பொருளாதார சிக்கல் நீங்கும்.. எனவேதான், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, எருக்கம் பூமாலையை விநாயகருக்கு சூட்டுகிறார்கள்.
சிவபெருமானின் ஜடாமுடியில் விரும்பி அணியக்கூடியது என்பதால், சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானது வெள்ளெருக்க பூக்கள்தான் .
21 வகையான பூக்கள்
பொதுவாக விநாயகர் சதுர்த்தியன்று , 21 பூக்கள், 21 பழங்கள் மற்றும் 21 இலைகள் வைத்து வணங்குவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பார்கள்.. அந்த 21 பூக்கள் என்னென்ன தெரியும்?
மல்லி, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, சம்பங்கி, தாமரை, செண்பகம், பாரிஜாதம்/ பவளமல்லி, அரளி, வில்வ பூ, மனோரஞ்சிதம், தும்பை, எருக்கம்பூ, தாழம்பூ, மாதுளம்பூ, மாம்பூ, செம்பருத்தி, ரோஜா, நந்தியாவட்டை, ஊமத்தைபூ, கொன்றை மலர் போன்றவைதான் அந்த 21 பூக்களும்.. இந்த பூக்களை வைத்து வணங்கும்போது துன்பம் நெருங்காமல் இருக்குமாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications