Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஃபருக்கு மேல ஆஃபர்.. வோடபோன் வழங்கும் App சலுகை.. போனஸ் டேட்டாவை ஃப்ரீயா பெறலாம்.. எவ்ளோனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வோடஃபோன் ஐடியா நிறுவனம், சில ரீசார்ஜ் பிளான்களில் App Offer வழங்குகிறது. அதன்படி, வழக்கமான பலன்களை விட போனஸாக கூடுதல் டேட்டா பெறலாம்.

வோடஃபோன் ஐடியா நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் பிளான்கள் உடன் கூடுதல் பலன்களையும் அளித்து வருகிறது. அந்த வகையில், Vi ஆப் மூலம் சில ரீசார்ஜ்களில் கூடுதல் டேட்டா பெறலாம். வோடஃபோன் ஐடியா வழங்கும் இந்த பிளான்களின் வேலிடிட்டி, டேட்டா, போனஸ் டேட்டா, ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை பற்றி பார்க்கலாம்.

 Vodafone Idea Offering Extra Bonus Data with App offers


Vi ரூ.839 ரீசார்ஜ் பிளான்: வோடஃபோன் ஐடியாவின் 839 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் உடன் தினமும் 100 SMS இலவசம். தினசரி 2 GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள். மேலும், 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல், Vi Movies சந்தாவும் இலவசம்.

இந்த திட்டம் Vi Hero அன்லிமிடட் நன்மைகளுடன் வருகிறது. இதில் Binge All Night, அதாவது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா, வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் கூடுதலாக பயன்படுத்தும் வகையில் Weekend Data Rollover மற்றும் Data Delight எனப்படும் மாதந்தோறும் 2 ஜிபி பேக்கப் டேட்டா ஆகிய சலுகைகளும் அடங்கும். இது தவிர, இந்த திட்டத்தில் 5 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது. Vi ஆப் மூலம் உங்களது 5 ஜிபி போனஸ் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.299 ரீசார்ஜ் பிளான்: வோடஃபோன் ஐடியாவின் 299 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் உடன் தினமும் 100 SMS இலவசம். தினசரி 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது. வேலிடிட்டி 28 நாட்கள். மேலும், இந்த திட்டத்தில் 3 நாள் வேலிடிட்டியுடன் 5 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது. Vi ஆப் மூலம் உங்களது 5 ஜிபி போனஸ் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

மாதா மாதம் ஒரே இம்சைப்பா.. ஒரே ரீசார்ஜ்.. வருடம் முழுக்க நோ தொல்லை.. Vi வழங்கும் சூப்பர் பிளான்கள்!

மேலும், இந்த பிளானில் Binge All Night, அதாவது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா, வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் கூடுதலாக பயன்படுத்தும் வகையில் Weekend Data Rollover மற்றும் Data Delight எனப்படும் மாதந்தோறும் 2 ஜிபி பேக்கப் டேட்டா ஆகிய சலுகைகளும் கிடைக்கும்.

ரூ.1,449 பிளான்: வோடஃபோன் ஐடியாவின் 1449 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் உடன் தினமும் 100 SMS இலவசம். தினசரி 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது. வேலிடிட்டி 180 நாட்கள். மேலும், இந்த திட்டத்தில் 30 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது. Vi ஆப் மூலம் உங்களது 5 ஜிபி போனஸ் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த பேக் ரீசார்ஜ் செய்ய ரூ.50 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

இந்த பிளானில் 6 மாதங்களுக்கு Binge All Night, அதாவது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா, வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் கூடுதலாக பயன்படுத்தும் வகையில் Weekend Data Rollover மற்றும் Data Delight எனப்படும் மாதந்தோறும் 2 ஜிபி பேக்கப் டேட்டா ஆகிய சலுகைகளும் கிடைக்கும். 180 நாட்களுக்கு கவலையே இல்லாமல் பயன்படுத்தலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+