அடுத்தவரிடம் வேலை செய்தால் அடிமையா? Bigg Boss common man ஆடிஷனில் நடந்த விவாதம்! ஆரி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வேண்டும் என்று எண்ணம் சினிமா பிரபலங்களுக்கு மட்டுமல்ல சாதாரண மக்களுக்கும் இருக்கிறது. அந்த வாய்ப்பை பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சி மூலமாக சாதாரண மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷன் மூலம் தேர்வு செய்யப்படும் பொது மக்களுக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக நேரடியாக பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பல கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வு முறையில் குழு விவாதம், தனிப்பட்ட நேர்காணல் உள்ளிட்ட பல கட்டங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் ஆடிஷனில் போட்டியாளர் ஒருவருக்கும் நடுவர் ஆரி அர்ஜுனனுக்கும் இடையே நடைபெற்ற சுவாரசியமான விவாதம் தற்போது சோசியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.

Bigg Boss bigg Boss Tamil

பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி

ஆடிஷனில் பேசிய அந்த நபர், தான் யாருக்கும் அருமையாக இருக்க விரும்பவில்லை என்றும், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் அங்கு சொல்லப்படும் அனைத்து வேலைகளையும் கேள்வி கேட்காமல் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்து இருந்தார். அப்போது அவரிடம் ஆரி அப்படியானால் பள்ளி, கல்லூரி, வேலை என தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு இடங்களில் மற்றவர்களின் வழிகாட்டுதல்படி செயல்படும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களும் அடிமைகள் தானா? என்ற கேள்வி கேட்டார்.

அதோடு நீங்களும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் யாருடைய கட்டுப்பாட்டிலாவது இருக்கீங்க தானே என்று ஆரி கேட்க, அந்த நபர் என்னால அப்படி எல்லாம் யாருகிட்டயும் இருக்க முடியாது சார் என்று சொல்கிறார். உடனே அவரிடம் ஆரி நீங்க மாடு வெச்சிருக்கீங்க அந்த மாடு உங்களுடைய பேச்சைக் கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்கிறார். அதுக்கு அந்த நபர் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். எதற்காக என்று ஆரி கேட்க, அந்த நபர் நான் மாட்டுக்கு சாப்பாடு எல்லாம் கொடுக்கிறேன் அதனால் என்னுடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்.

Bigg Boss bigg Boss Tamil

ஆரி கேட்ட கேள்வி

அங்கு தான் ஆரி அவருடைய பதிலையே அவருக்கு எதிராக கேள்வியாக மாற்றுகிறார். நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை செய்கிறீர்கள், அதற்காக அந்த நிறுவனம் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது, உங்களுடைய தேவைகளுக்காக பல விஷயங்களை அந்த வேலையால் நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அந்த நிறுவனத்தில் இருக்கும் விதிமுறைகளையும் உங்களுக்கு மேலே இருப்பவர்களின் பணி சார்ந்த அறிவுறுத்தல்களையும் நீங்கள் கேட்பது எப்படி அடிமைத்தனமாகும் என்று கருத்தை ஆரி முன் வைக்கிறார்.

இதை கேட்ட போட்டியாளரால் உடனடியாக பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். ஒருபுறம் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன் என்று அந்த போட்டியாளர் மிகவும் தன்னம்பிக்கையுடன் தொடங்கிய நிலையில் ஆரியின் அடுத்தடுத்து கேள்விகள் அந்த நபரை பேச முடியாமல் தடுமாற வைத்திருக்கிறது.

Bigg Boss bigg Boss Tamil

போட்டியாளரின் பதில்

இது போல தான் பலரும் நாங்கள் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய முடியாது என்று பிசினஸ் தொடங்குகிறார்கள். ஆனால் அதிலும் அடுத்தவர்களை சார்ந்து இருக்கிற வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். அது போல ஆரம்பத்தில் அந்த நபர் ஆரியிடம் பேசும்போது நீங்களும் இந்த நிகழ்ச்சிக்காக ஒருவரிடம் வேலை பார்க்கிறிங்க, அவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டி சூழல் இருக்கிறது.. அப்படி எல்லாம் என்னால் வாழ முடியாது என்று அவர் சொல்லி இருந்தார்.

அதற்கு எல்லாம் சேர்த்து தான் ஆரி அந்த நபருக்கு பதில் கொடுத்திருக்கிறார். இதனால் சாதாரணமாக ஆடிஷனாக தொடங்கிய நிகழ்வு திடீரென வேலை, சுதந்திரம், கட்டுப்பாடு, பொறுப்பு, மரியாதை ஆகியவற்றை பற்றிய விவாதமாக மாறி உள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் ஒருவர் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார், மற்றவர்களுடன் எப்படி பழகுவார்? அதிகாரம் அல்லது கட்டுப்பாடு வரும் சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வார் என்பதை அறிய இதுபோன்ற கேள்விகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Bigg Boss bigg Boss Tamil

குறிப்பாக யார் கட்டளை இடக்கூடாது என்ற மனநிலையுடன் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் அங்கு போட்டியின் விதிமுறைகள், குழு முடிவுகள், பிக் பாஸ் அறிவுறுத்துகள் போன்றவற்றை அவர் எப்படி எதிர்கொள்வார் என்பதையும் யோசிக்க வேண்டியது இருக்கும். அதனால் இந்த விவாதம் வெறும் ஒரு கேள்வி பதில் நிகழ்வாக இல்லாமல் ஒரு பிக் பாஸ் போட்டியாளரின் மனநிலையை சோதிக்கும் தருணமாக பார்க்கப்படுகிறது.

Bigg Boss bigg Boss Tamil

பிக் பாஸ் தி காமன் மேன் ப்ரோமோ

பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே இதுதான். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்து வந்து சாதாரண மக்கள் இனி அதற்குள் போட்டியாளராக நுழையும் வாய்ப்பை பெறுகின்றனர். அதற்காக டிஜிட்டல் ஆடிஷன் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களை கடந்து தேர்வு செய்யும் முறை அதிகாரப்பூர்வ விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்த புதிய முயற்சிகள் திறமை மட்டுமல்லாமல் தனித்துவமான குணம் கருத்தை வெளிப்படுத்தும் விதம், அழுத்தமான சூழ்நிலையில் பதிலளிக்கும் திறன் போன்றவற்றின் முக்கியமாக இருக்கக் கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+