சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தில் புதிய பிரிவு.. அரசியல் விவாதத்தை கிளப்பிய அறிவிப்பு.. தனுஷுக்கு செக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கத்தில் புதியதாக கலை, இலக்கிய பண்பாட்டு பிரிவு தொடங்கப்படுவதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் சிவகார்த்திகேயன் இப்போது அடுத்ததாக ஒரு புதிய பிரிவையும் உருவாக்கி இருப்பது சினிமா வட்டாரத்திலும் சமூக வலைத்தளத்திலும் கவனம் பெற்றுள்ளது.

அதிலும் நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுக்கள் ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதால் இருவரையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து படிப்படியாக முன்னேறி நடிகராக வளர்ந்தவர். அதிலும் சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் தனுஷ் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். தனுஷின் எதிர்நீச்சல் படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

ஆரம்பத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன்

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே 3 படத்தில் நடித்திருந்தனர். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. அந்த காலகட்டத்தில் எல்லாம் தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தனுஷ் என்று பல மேடைகளிலும் சிவகார்த்திகேயன் பெருமையாக பேசி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது அவர் முன்னணி ஹீரோவாக மாறி இருக்கும் சமயத்தில் ரசிகர் மன்றங்கள் மூலமாக நடைபெறும் நற்பணிகளும் இன்னொரு பக்கம் கவனிக்கப்பட்டு வருகிறது.

Sivakarthikeyan Dhanush

ரசிகர் மன்ற செயல்பாடு

ரத்த தானம், கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளில் அவருடைய ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காகவே ரசிகர்கள் மன்றத்தை ஒருங்கிணைந்த நற்பணி இயக்கம் என்ற அமைப்பாகவும் நடத்தி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது. அதில் கலந்து கொண்ட ரசிகர்கள் அரசியல் மாநாடு போல வெள்ளை சட்டையில் வந்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது நற்பணி இயக்கத்தின் கீழ் கலை, இலக்கியம் பண்பாட்டு பிரிவு தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் பண்பாடு என்ற தளத்தில் இயக்கம் செயல்பட போகிறதா? என்று எதிர்பார்ப்பு உருவாக்கி இருக்கிறது. அதே நேரத்தில் இது அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். ஆனால் இந்த புதிய பிரிவு தொடங்கப்பட்டிருப்பதன் உண்மை நோக்கம் என்ன என்பதை பற்றி சிவகார்த்திகேயன் சொல்லவில்லை.

விஜய்யை தொடரும் நடிகர்கள்

இதற்க்கிடையே தனுஷின் அரசியல் பேச்சும் வலம் வந்து கொண்டிருக்கும் சமயத்தில் சிவகார்த்திகேயன் இப்போ எடுத்துருக்கும் முடிவு தனுஷுக்கு முன்பு அரசியலுக்கு வருவதற்காக ஏற்பாடா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரிய சம்பவத்தை ஏற்படுத்தி விட்டது. இப்போது அதேபோல தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோரும் நற்பணி மன்றம் மூலமாக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் சூர்யா, லாரன்ஸ் மாஸ்டர், லெஜெண்ட் சரவணன் என சினிமா துறையில் இருந்து பலர் நற்பணி மன்றம் மூலமாக பலருக்கு உதவிகள் கிடைத்தாலும், அடுத்து என்ன? நீங்களும் அரசியலுக்கு வர போறீங்களா? என்ற விமர்சனமும் இவர்கள் மீது வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+