பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஆரி... உற்சாகத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய ரசிகர்களின் கருத்துக்கு ஆரி விளக்கம் கொடுத்துள்ளார்.
தனது மனதை கவர்ந்த போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு ஆரியின் பதில் அசத்தலாக உள்ளது.
ஆரி கூறிய செய்தியைக் கேட்டதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திகைத்து வருகின்றனர்.

ரசிகர்களை கவரும் ரியாலிட்டி ஷோ
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் வெற்றியை தொடர்ந்து தான் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வரைக்கும் ரசிகர்கள் அதிகமாக பிறமொழி சீரியல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருவதை ஆர்வத்தோடு ரசித்து வந்தனர். ஆனால் அதற்கு எல்லாம் மாற்றம் கொடுக்கும் வகையில் தமிழில் வரும் ரியாலிட்டி ஷோக்கள் தற்போது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

இவர்களை கவர்ந்த ஆரி
பல திரைப்படங்களில் நடித்து வாங்கும் பெயர்களை கூட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பல போட்டியாளர்கள் தட்டி விடுகிறார்கள். அந்த மாதிரி அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்த ஒரு போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஆரி தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இதுவரைக்கும் 4 சீசன்கள் முடிவடைந்து இருந்தாலும் யாரும் ஆரியைப் போல ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடிக்கவில்லை என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். தற்போது ஐந்தாவது சீசனில் 70 நாட்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் ஆரியை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி வருகின்றனர்.

ஆரிக்கு பிடித்த போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரியும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாராம். அதனால் ரசிகர்கள் பலர் ஆரியிடம் இந்த சீசனில் உங்கள் மனதை கவர்ந்த போட்டியாளர் யார் என்று கேட்டு வருகிறார்களாம். அதற்கு இந்த சீசன்களில் இவர்கள் அனைவருமே தனித்துவமாக விளையாட்டை விளையாடி வருகிறார்கள். அதனால் அதனை பார்க்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. யாரும் யாரையும் கூட்டு சேர்ந்து விளையாடாமல் தனியாக விளையாடுவதால் அவர்களின் திறமையும் நன்றாக மெருகேறி வருகிறது. அதனால் குறிப்பிட்டு இவரை தான் பிடிக்கும் என்று எந்த போட்டியாளரை பற்றியும் தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆரி சொன்ன ரகசியம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறிய வார்த்தை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த சீசனில் தான் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி கலந்து கொண்டால் தன்னுடைய நிலைப்பாடு பற்றி தெளிவாக கூறுவேன் என்று கூறியுள்ளார். ஆரியின் என்ட்ரி மீண்டும் பிக்பாஸில் இருக்கிறது என்று தெரிந்ததும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். எப்போது இவர் கலந்து கொள்வார் என்று தான் பலர் கேட்டு வருகிறார்கள். இந்த வீட்டிற்குள் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications