நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்! 13 வருட காதலருடன் போட்டோ சூட்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா தன்னுடைய காதலருடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 13 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்களுடைய திருமணம் விரைவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அடைமொழியோடு அழைக்கப்படும் அர்ஜுனுக்கு அறிமுகமே தேவை இல்லை. 90ஸ் கிட்ஸ்களுக்கு பேவரைட் கதாநாயகனாக வலம் வரும் அர்ஜுன் நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகனாக தான் கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய மூத்த மகள் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலிக்கிறார் என்ற விஷயம் தெரிந்ததும் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார்.

பன்முகத்திறமை
அதே போல இப்போது இரண்டாவது மகளும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கன்னட சினிமா உலகில் அறிமுகமான அர்ஜுன் தமிழில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமையாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிகர் அர்ஜுன் கன்னட நடிகையான நிவேதிகா என்பவரை கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் காதல் திருமணம் தான்.
அர்ஜுன் குடும்பம்
இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் கதாநாயகி ஆனார். அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு கிட்டு கொடுக்கவில்லை. தந்தையின் பிசினஸ் மற்றும் படம் நிறுவன பணிகளை கவனித்து வருகிறார்.

தொழிலதிபர்
ஐஸ்வர்யா நடிகர் உமாபதியை திருமணம் செய்த பிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனாவிற்கு சினிமாவில் துளி கூட ஆர்வம் கிடையாதாம். தொழிலதிபராக மாற வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசையாம். கடந்த 2023 ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதை நிர்வகித்து வருகிறார்.
காதல் திருமணம்
இவருடைய நிறுவனத்தில் செய்யப்படும் ஹேண்ட் பேக்குகள் எல்லாம் பழங்களின் தோல்கள் மற்றும் காய்கறிகள் தோல் நார் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறதாம். அஞ்சனா நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய நிறுவனத்தில் மாடலாக இவரே இருந்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சனாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குடும்ப புகைப்படங்கள்
அஞ்சனா கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின் திருமண பிரபோசலை ஏற்றுக் கொண்டதாக கூறி அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அஞ்சனாவின் காதலர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை என்றாலும் அஞ்சனா அவருடைய காதலருடன் புகைப்படங்கள் எடுத்து இருக்கும்போது நடிகர் அர்ஜுன் அவருடைய மனைவியோடு ஒரு பக்கத்தில் இருக்கிறார். அதேபோல அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் உமா பதவியுடன் மறு பக்கத்தில் இருக்கிறார். இவர்களுடைய குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications