18 வருடமா சினிமாவில் வராதது இதனால்தான்! நானும் சாந்தனுவும் நார்மலா பேச மாட்டோம்.. பாக்யராஜின் மகள்
சென்னை: இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜ் பூர்ணிமா தம்பதியின் மூத்த மகளான சரண்யா பாக்கியராஜ் தான் சினிமாவை விட்டு 18 வருடங்களாக விலகியதற்கான காரணம் என்ன என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சினிமா துறையில் நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாக்யராஜின் மனைவியான பூர்ணிமாவும் நடிகை தான். அதுபோல இந்த தம்பதிக்கு சரண்யா மற்றும் சாந்தனு என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சரண்யா பாக்யராஜ் இயக்கி நடித்த பாரிஜாதம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அதுபோல சாந்தனுவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருடைய நடிப்பு மற்றும் உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. பாக்கியராஜ் ஆரம்ப காலகட்டத்தில் அவர் இயக்கிய பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
அதிலும் முந்தானை முடிச்சு போன்ற திரைப்படங்கள் எல்லாம் இப்போதும் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. பாக்யராஜின் மகள் சரண்யா சில வருடங்களுக்கு முன்பு காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்திருந்தார். அப்போது அவருடைய குடும்பத்தினர் போராடி காப்பாற்றி இருந்தனர். அதற்குப் பிறகு எந்த சினிமாக்களிலும் அவர் நடிக்கவில்லை. தற்போது 18 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருப்பது குறித்து சமீபத்தில் அவள் விகடன் youtube சேனலில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் நான் சினிமாவில் நடித்த காலகட்டத்தில் கதாநாயகிகளுக்கு நல்ல முக்கியத்துவம் இருந்தது. அப்போது ஒரு சில திரைப்படங்கள் எனக்கு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படங்கள் நான் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. நான் சினிமாவில் கதாநாயகியாக இல்லை என்றாலும் அப்பாவிற்கு உதவியாக பல திரைப்படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அதனால் நடிகையாக தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.

நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே முடிவெடுத்தது கிடையாது. எனக்கு தெரிந்தது சினிமா தொழில் தான்
ஆனால் சரியான வாய்ப்புகள் வராததால் தான் என்னால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எனக்கு என்னுடைய அப்பா நடித்த திரைப்படங்களும், அம்மா நடித்த திரைப்படங்களும் ரொம்பவே பிடிக்கும். அதில் சின்ன சின்ன கரெக்ஷன் இருந்தால் நானும் தம்பியும் சேர்ந்து அப்பாவிடம் சொல்லுவோம்.
எங்க அப்பா சூட்டிங் போயிட்டு வீட்டுக்கு வந்தால் அவருக்கு மேக்கப் கலைத்து விடுவது நான் தான். அதற்காகவே அவர் என் பொண்ணு கையால் முகத்தில் இருக்கும் மேக்கப் கலைக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் என்று அப்பா சொல்லுவாரு. என் மீது அப்பாவுக்கு ரொம்பவே பாசம். எனக்கு அம்மாவும் ரொம்ப பிடிக்கும் நான் அதிகமா பேசுறது அம்மாவிடம் தான். எனக்கும் சாந்தனுவுக்கும் ஒன்றரை வயது வித்தியாசம் தான். அதனால் நாங்கள் அக்கா தம்பி என்று அதிகமாக பேசிக் கொள்வது கிடையாது. நண்பர்கள் போலத்தான் பேசிக் கொள்வோம்.
நான் அம்மாவிடம் செல்போனில் அதிகமாக பேசுவேன். ஆனால் சாந்தனுவிடம் நார்மலாக செல்போனில் பேசிக் கொள்வது கிடையாது. ஏதாவது பேச வேண்டும் என்றால் வடிவேலு இமோஜி ஏதாவது தான் ஷேர் பண்ணிக் கொள்வோம். மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன். அப்பா ஆரம்பத்தில் நடிகனாக இருப்பதை விட இப்போ தாத்தாவாக பேரப்பிள்ளைகளோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பதுதான், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் என்று சரண்யா பகிர்ந்து இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications