இந்திரஜா குழந்தையை பார்க்காத காரணம் இதுதான்! இந்த இடத்தில் இருந்து மாறிட்டாங்க.. போஸ் வெங்கட் ஓபன்
சென்னை: சினிமாவில் ஒன்றாக நடிப்பவர்கள் பலர் ஒரே குடும்பமாக மாறிவிடுகிறார்கள். அது போன்ற நடிகர்கள் ரோபோ சங்கர் மற்றும் போஸ் வெங்கட் குடும்பத்தினர் பல வருடங்களாகவே நட்பாக இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ரோபோ சங்கரின் மகள் திருமணம் நடந்த போது போஸ் வெங்கட் குடும்பத்தினர் தான் அதிக வேலைகள் செய்து வந்தனர். ஆனால் ரோபோ சங்கர் மற்றும் அவருடைய மகள் இந்திரஜா பற்றி போஸ் வெங்கட் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
ரோபோ சங்கர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். இப்போது முன்னணி நடிகர்களோடு குணச்சித்திர வேடங்களிலும், காமெடி கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் கதாநாயகன் அவதாரமும் எடுத்திருக்கிறார். இது இவருடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த அதிகாரம்.

அதுபோல ரோபோ சங்கர் பற்றிய செய்திகள் இணையத்தில் அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டு இருக்கும். கடந்த வருடத்தில் அவருடைய மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்தில் பல சினிமா நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் உடல் எடை குறைந்த புகைப்படம் வெளியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.பிறகு தன்னுடைய குடும்பத்தினரின் அன்பாலும் கவனிப்பாலும் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். அதுபோல மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் தான் ரோபோ சங்கர் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்ப்பதற்கு ரோபோ சங்கரின் நண்பரான போஸ் வெங்கட் குடும்பத்தினர் செல்லவில்லை. இது குறித்து நடிகர் போஸ் வெங்கட் மற்றும் அவருடைய மனைவி சோனியா இருவரும் கலாட்டா youtube சேனலில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
அதில் அவர்கள் பேசுகையில், ரோபோ சங்கர் குடும்பமும் எங்களுடைய குடும்பமும் பல வருடங்களாக நட்பாக இருக்கிறோம். என்னுடைய குழந்தைகள் சின்ன வயதில் இருக்கும்போது ரோபோ சங்கரும் அவருடைய மனைவியும் தான் குழந்தைகளை தூக்கி வளர்த்தார்கள் என்று சொல்லலாம். எத்தனையோ நாட்கள் நான் சூட்டிங்கில் இருக்கும் போது என்னுடைய குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ரோபோ சங்கரும் அவருடைய மனைவியும் தான் ஹாஸ்பிடலுக்கு தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
இந்திரஜா பற்றி நாஞ்சில் விஜயன் வெளியிட்ட போஸ்ட்.. கண்ணீரோடு பதில் கொடுத்த ரோபோ சங்கர் மருமகன்
அதுபோல எங்களுக்கு இந்திரஜா ரொம்ப பிடிக்கும். ரொம்பவும் செல்லமான பொண்ணு. இந்திரஜாவின் கல்யாணத்தில் நாங்கதான் முன்னால் நின்று நடத்தணும் என்று ஆசைப்பட்டோம் அதுபோல செய்து முடித்தோம். ஆனால் அவருடைய வளைகாப்புக்கு நாங்கள் போகவில்லை. அதற்கு காரணம் அந்த நேரத்தில் எனக்கு காய்ச்சல் இருந்தது. அதனால் இந்த நேரத்தில் நாம் அங்கு போக வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.
அது பற்றி இந்திரஜாவிடம் சொல்லவும் செய்துவிட்டோம். அதுபோல அவளுக்கு குழந்தை பிறந்த போது கூட நான் பார்க்க போகவில்லை. அப்போவும் நான் ஹாஸ்பிடலில் தான் இருந்தேன். நான் போகவில்லை என்றதால் என்னுடைய மனைவியும் போகவில்லை. ஆனால் சிலர் எங்கள் இருவருக்கும் பிரச்சனை அதனால் தான் நாங்கள் போகவில்லை என்று சொல்லி வந்தார்கள் அதெல்லாம் உண்மை கிடையாது.
அதுபோல இந்திரஜாவும் என்னுடைய மகன்களும் ரொம்பவே க்ளோசாக இருப்பார்கள். எல்லோரும் ஒரே வீட்டு குடும்ப பிள்ளைகள் போல பழகி வந்தார்கள். ஆனால் இந்திரஜா அவருடைய கணவரை காதலிக்க தொடங்கிய பிறகு என்னுடைய மகன்களோடு அவருக்கு நெருக்கம் குறைய தொடங்கியது.

ஒரு கட்டத்தில் இந்திரஜாவின் முழு கவனமும் அவருடைய கணவர் பக்கம் திரும்பியதால் எங்கள் பக்கம் அட்டென்ஷன் இல்லாமல் போனது. அது எல்லாருடைய வாழ்க்கையிலும் நடப்பதுதான். இந்திரஜா குழந்தையாக எங்களுக்கு தெரியும். இப்போது அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்து அவள் தனியாக போய்விட்டாள்.
இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் சோகம்.. அக்கா, அண்ணனை தொடர்ந்து அம்மா மரணம்.. முதல்வர் வருத்தம்
இனி அவளுடைய குடும்பத்தை தான் பார்க்கனும் அது தான் சரியாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அவளுடைய வளைகாப்பு பங்க்ஷனில் கலந்து கொள்ளாததற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தான் என்று போஸ் வெங்கட் மற்றும் அவருடைய மனைவியும் பேசி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications