மீண்டும் இந்தியா வந்த நடிகர் நெப்போலியன்.. குழந்தைகளுக்காக செய்த செயல்! நெகிழ்ச்சி காரணம்
சென்னை : நடிகர் நெப்போலியன் சமீபத்தில் இந்தியா வந்துள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. சினிமா, அரசியல், தொழில் என பல துறைகளில் பயணித்த நெப்போலியன் வாழ்க்கையில் அவரது மூத்த மகன் தனுஷின் உடல்நிலை மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. அந்த தனிப்பட்ட வலியால் தன்னைப்போன்ற குடும்பக்களுக்கு உதவும் ஒரு முயற்சி ஆக நெப்போலியன் மாற்றி இருக்கிறார்.
நெப்போலியன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த பதிவில், மயோபதி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சென்று அவர்களை சந்தித்து இருக்கிறார். அங்கு குழந்தைகளுடன் அவர் பேசுவது, அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிப்பது, மருத்துவமனையில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

நெப்போலியன் குடும்பம்
ஒரு காலத்தில் தன்னுடைய மகனுக்காக மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கிய ஒரு தந்தை இன்று தன்னைப் போன்ற சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகளை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அதனால் தான் இந்த வீடியோவை பார்த்த பலரும் நெப்போலியனின் வலி இப்போது பல குழந்தைகளுக்கான உதவியாக மாறி இருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்.
நெப்போலியன் மகன்
நெப்போலியன் ஜெய சுதா என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில், இந்த தம்பதிக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் தனுஷுக்கு 4 வயதிலேயே தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் மற்ற குழந்தைகளைப் போலவே இருந்த தனுஷுக்கு பிறகு உடல் நிலையில் பல மாற்றங்கள் தொடங்கியதால் ஹாஸ்பிடலுக்கு போன நெப்போலியனுக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
அப்போதே டாக்டர்கள் 10 வயதுக்கு மேல் தனுஷால் எழுந்து நடக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் நெப்போலியன் எப்படியாவது தன்னுடைய மகனை சரி பண்ணி விடலாம் என்று நினைத்திருக்கிறார். அதற்காக பல இடங்களில் சிகிச்சைக்காக அலைந்து இருக்கிறார். அப்போதுதான் மயோபதி சிகிச்சை குறித்து நெப்போலியனுக்கு தெரிய வந்திருக்கிறது. அப்போது திருநெல்வேலி பக்கத்தில் உள்ள மயோபதி ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்திருக்கிறார்.
நெப்போலியன் தொடங்கிய ஹாஸ்பிடல்
அதில் ஏற்பட்ட மாற்றத்தையும், அதே நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஆரம்பத்திலேயே இந்த சிகிச்சை கொடுத்து இருந்தால் நிலைமை மாறி இருக்கலாம் என்று டாக்டர்கள் சொன்னதைக் கேட்டு இதே போல இனி மற்ற குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஜீவன் பவுண்டேஷன் சார்பில் மயோபதி சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டதாகவும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் அங்கு சிகிச்சை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தனுஷின் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு போன நெப்போலியன் குடும்பத்தினர் அங்கேயே குடியேறி இருக்கின்றனர். அங்கு பிசினஸ் செய்து வரும் அவர் சினிமா மற்றும் அரசியல் பயணத்திலிருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் வருடத்திற்கு ஒரு முறை அல்லது சில நேரங்களில் திடீரென இந்தியாவிற்கு வரும் நெப்போலியன் திருநெல்வேலி மயோபதி ஹாஸ்பிடல் சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை கவனித்து வருகிறார். அதுபோல இப்பொழுது இந்தியாவிற்கு வந்திருக்கும் நெப்போலியன் மயோபதி ஹாஸ்பிடல் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
