விஜயகாந்த் உடன் என்னை கம்பேர் பண்ணுவது எனக்கு பிடிக்காது.. நான் ரஜினி ரசிகன்! ஆனால், நடிகர் சரவணன் ஓபன்
சென்னை: உங்களை பார்க்கும் போது விஜயகாந்த் மாதிரி இருக்கீங்க என்று பலரும் பெருமையாக கூறிய நிலையில், எனக்கு விஜயகாந்த் சாரை பிடிக்காது என்று நடிகர் சரவணன் பேசிய பழைய பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் 1990களில் தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நடிகரின் ஒருவர்தான் சரவணன். வைதேகி பொறந்தாச்சு, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். பிறகு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு குணசித்திர வேடங்கள், வில்லன் கேரக்டர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்து இருக்கிறார்.
நடிகர் சரவணனின் பழைய பேட்டி
சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகி வரும் அந்த பேட்டியில் தன்னுடைய ஆரம்பகால சினிமா அனுபவங்களை சரவணன் பகிர்ந்திருக்கிறார். அதில் நான் சினிமாவுக்கு வந்த புதியதில் சிலர் என்னை பார்த்து விஜயகாந்த் சாரின் தம்பி மாதிரி இருக்கீங்க என்று சொல்வார்கள். ஆனால் அந்த ஒப்பிட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மிகப்பெரிய உயரத்தில் இருந்தவர். நான் அவரைப்போல ஆக வேண்டும் என்று நினைத்து சினிமாவுக்கு வரவில்லை என்று கூறி இருக்கிறார்.

ரஜினியின் ரசிகன்
மேலும், இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளியில் படிக்கும் காலத்தில் விஜயகாந்த் சாரின் சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி ஆகிய இரண்டு படங்களை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். நான் அப்போது ரஜினியின் தீவிரமான ரசிகன். காலேஜ் படிக்கும்போதெல்லாம் காலேஜை கட் அடிச்சுட்டு தலைவர் படம் பார்க்க போய் இருக்கிறேன். ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்திருக்கிறேன்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் சினிமாவில் யாரை போல ஆக வேண்டும் என்று நினைத்தேன் என்றால் அது நடிகர் பார்த்திபனை பார்த்து தான் என்று சரவணன் கூறியிருந்தார். இந்த பேட்டி தற்போது மீண்டும் பரவி வருவதற்காற காரணம், விஜயகாந்த் குறித்து ரசிகர்களின் எமோஷனல் இன்னும் ஸ்ட்ராங்காக இருப்பது தான்.

விஜயகாந்துடன் ஒப்பீடு
அதனால் தான் விஜயகாந்த் மாதிரி இருக்கிறீங்க என்று சொல்வதே பெருமை, அப்படி சொன்ன போதும் சரவணன் இப்படி பேசி இருப்பது ஏன் என்று சில கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் அவர் தன்னுடைய உண்மையான மனநிலையை கூறியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும் அதை தவறாக பார்க்க கூடாது என்று அவருக்கு சப்போர்ட்டாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜயகாந்த் தம்பி அனுப்பி வச்சிருக்காரு! பாவா லட்சுமணனுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் ராஜ் மோகன்
சரவணன் எப்போதுமே பேட்டிகளில் தன்னுடைய மனதில் இருப்பதை ஓபனாக பேசிவிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் நாங்க காலேஜ் படிக்கும் போது பெண்களை இடிப்பதற்காகவே பஸ்ஸில் போயிருக்கிறேன் என்று சொன்னதுதான் அவருக்கு பெரிய பிரச்சனை கொடுத்தது. உடனே அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி இருந்தார்கள்.
அதுபோல பேட்டிகளிலும் கூட அவர் பேசியது சில விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறது. அதுபோல இப்பொழுது விஜயகாந்த் குறித்து பேசிய பழைய பேட்டி மீண்டும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
