ஜேசன் சஞ்சய் கொடுத்த ஒரு பேட்டி.. நள்ளிரவு நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த நடிகர் விக்ராந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா படம் வரும் அக்டோபர் 2ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய்யின் தம்பியும் நடிகருமான விக்ராந்த் கலந்து கொண்டு ஜேசன் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ராந்த் பேச்சு

நடிகர் விக்ராந்த் விஜயின் தம்பி அதாவது சித்தி மகன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய அண்ணன் மகன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும் போது, நான் இந்த நிகழ்ச்சிக்கு நடிகராக வரவில்லை ஜேசனுக்கு சித்தப்பாவாக வந்திருக்கிறேன். எனக்கு சினிமாவில் அறிமுகம் கிடைப்பதற்கு அண்ணன் காரணமாக இருந்தார். ஆனால் ஜேசன் யாருடைய துணையும் இல்லாமல் தனக்கு பிடித்த விஷயத்தை தானே செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

Actor Vikranth Vijay

ஜேசனின் சின்ன வயது கனவு

அவர் சின்ன பையனாக இருக்கும்போது கிரிக்கெட்டராக வேண்டும் என்று ஆசை என சொல்லுவாரு. அப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். நம்மால் தான் கிரிக்கெட்டில் பெரிய சாதனை செய்ய முடியவில்லை. நம்ம வீட்டில் நம்ம ஆசையை நிறைவேற்ற ஒரு ஆளு இருக்கு என்று சந்தோஷப்படுவேன். அந்த நேரத்தில் நடக்கும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை எல்லாம் லைவில் பார்த்துக் கொண்டிருப்பார். பிறகு இரவு அந்த நிகழ்ச்சியை ரிப்பீட்டில் பார்த்து அதில் எந்தெந்த இடத்தில் எந்த மிஸ்டேக் பண்ணி இருக்காங்க என்று நோட்ஸ் எடுப்பார். இது இரவு 1 மணி 2 மணி வரைக்கும் நடந்து கொண்டிருக்கும். இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.

அதேபோல இப்போது இந்த படத்தை இயக்குகிறேன் என்றால் அவர் உடனே இயக்குனராக வேண்டும் என்று வரவில்லை அதற்காக முறைப்படி படித்துவிட்டு, அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதனால் படம் கண்டிப்பாக சக்ஸஸ் ஆகும். என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். சஞ்சய் பேசிய ஒரே ஒரு பேட்டி தான் மொத்த பிரச்சனைகளுக்கும் பதிலாக இருந்தது. அந்த சமயத்தில் எவ்வளவோ விஷயங்கள் பேசப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் சஞ்சய் விளக்கம் கொடுத்துவிட்டார்.

ஜேசன் கொடுத்த பேட்டி

அவருடைய பேட்டியை பார்த்து பலர் நான் வெளியே போகிற நேரத்தில் எல்லாம் ஜேசனை கேட்டதாக சொல்லுங்க என்று சொல்லுவாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று விக்ராந்த் பேச பேச சஞ்சய் சந்தோஷமாக நன்றி சொன்னார்.

அதுபோல விக்ராந்தின் அண்ணனான சஞ்சீவ் பற்றி ஏற்கனவே இதற்கு முன்பு இந்த படத்தின் பிரமோஷனில் கூட பட குழுவினர்கள் பேசி இருந்தார்கள். கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் கார்த்தியும் சரவணனும் எப்படி சித்தப்பு மகனாக இருந்தார்களோ அதே போலத்தான் நிஜத்தில் ஜேசனும், சஞ்சீவும் இருப்பார்கள். செட்டில் எப்போதும் இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள், சண்டை போட்டுக் கொள்வார்கள், அவ்வளவு ரகளை பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்கள்.

விஜய்யின் இன்னொரு தம்பி

அதேபோலத்தான் இப்போது இந்த நிகழ்ச்சியிலும் நடிகர் சூரி உட்பட எல்லோருமே சொல்லி இருக்கிறார்கள். அது பற்றி விஜயின் இன்னொரு தம்பியான சஞ்சீவ் பேசும்போது, நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க காரணம் என்னுடைய அண்ணி தான். அவங்க தான் எனக்கு ஒரு நாள் போன் பண்ணி ஜேசன் படம் இயக்கனும் என்று சொல்லுறான் அவனுக்கு முடிஞ்சதை பண்ணி கொடுங்க என்று சொன்னாங்க. அதற்கு பிறகு தான் நாங்க அதற்கான முயற்சியில் தீவிரமா ஈடுபட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+