மறைந்தாலும் ஜொலிக்கும் வினு சக்கரவர்த்தியின் பிறந்தநாளில் ரசிகர்களின் வித்தியாசமான வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் வாழ்பவர்களில் ஒரு சிலர் தான் உள்ளனர். அவர்களில் வினுசக்கரவர்த்தி ஒருவர்.

தன்னுடைய கம்பீரமான குரலால் அனைவரையும் கவர்ந்து எடுத்தவரின் பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேலாக நடித்த நடிகரை மறக்க முடியாமல் அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

மறக்காத நினைவுகள்

மறக்காத நினைவுகள்

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கி குணச்சித்திர வேடம், வில்லன் மற்றும் காமெடி வேடங்களிலும் முத்திரை பதித்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சக்கரவர்த்தியின் பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். சுமார் 1000 படங்கள் வரை நடித்து தன்னை ஒரு நடிகனாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை எழுதி இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வந்த வினு சக்ரவர்த்தி அவர்களின் நினைவலைகள் சில...

காவல்துறை முதல் நடிப்புத்துறை வரை

காவல்துறை முதல் நடிப்புத்துறை வரை

இன்றைய மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ஆதிமூல தேவர் மற்றும் மஞ்சு வாணி அம்மாள் தம்பதியருக்கு முத்த மகனாகப் பிறந்தார். தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையே சென்னையில் படித்த இவர் சில காலங்கள் ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும் பின்பு கொஞ்ச நாட்கள் ரயில்வே துறையிலும பணியாற்றி வந்தார்.தனக்கு எழுத்தின் மீது இருந்த ஆர்வத்தால் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் இடம் உதவி இயக்குனராக கலைத் துறையில் காலடி எடுத்து வைத்தார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் மணி அவர்களால் பரசங்கடா கெண்டதிம்மா என்ற கன்னட படத்தில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார்.பின்னர் அந்தப் படம்தான் தமிழில் ரோசாப்பூ ரவிக்கைகாரி என்று ரீமேக்காகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின் இவருடைய நடிப்பிற்கு ஏறுமுகம்தான். தென்னிந்திய அளவில் நான்கு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

அசத்திய நாட்டாமை

அசத்திய நாட்டாமை

வெறும் சந்தனத்தை மட்டும் உடலில் பூசிக் கொண்டும், துண்டை மேலே போட்டுக் கொண்டும் நாட்டாமை போல் வருகிற காஸ்டியூமை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். இவரது ஆஜானுபாகுவான உடலமைப்பும் கம்பீரமான குரல் மற்றும் இவரது டயலாக் டெலிவரியின் போது வித்தியாசமான பாடி லாங்குவேஜ்ம் என்றும் இவரை பற்றி தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்க காரணமாயிருக்கிறது. இன்று வரையும் மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் களின் முக்கியமான குரல்களில் ஒன்றாக வினுசக்கரவர்த்தி அவர்களின் குரல் இருந்து வருவதே அதற்கு சான்றாகும்.

மறைந்தாலும் மறையாத புகழ்

மறைந்தாலும் மறையாத புகழ்

ஆந்திராவிலிருந்து விஜயலட்சுமி என்ற பெண்ணை அழைத்து வந்து தனது வண்டிச் சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஆக அறிமுகம் செய்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கவர்ச்சி நடிகை அறிமுகம் செய்தது இவர்தான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களே தங்களுடைய படத்தில் ஏதாவது ஒரு சீன் மட்டும் வினுச்சக்கரவர்த்தி அவர்கள் நடிக்க வேண்டுமென்று இயக்குனர்களிடம் கேட்கும் அளவிற்கு படங்கள் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் தனக்கான சீனில் தனது ட்ரேட்மார்க் முத்திரையைப் பதித்து விடுவார். அந்த அளவிற்கு அனைத்துவித எக்ஸ்பிரஸ் எண்களையும் தனது ஸ்டைலில் வித்தியாசமாக நடித்து கலக்கியவர் இம் மண்ணுலகை விட்டு அவர் மறைந்தாலும் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமா உலகில் அவர் என்றும் வாழ்வார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+