சொந்தக்காரங்க கூட இப்படி எல்லாம் பேச மாட்டாங்க! ஆனால், ரஜினி கேட்ட கேள்வி.. நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்
சென்னை: நடிகை ஆர்த்தி கணேஷ் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இப்போது காமெடி நடிகையாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் தங்களிடம் கேட்ட கேள்வி குறித்து மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். சொந்த பந்தங்கள் கூட இவ்வளவு உரிமையாக விசாரிக்க மாட்டார்கள். ஆனால் ரஜினி எங்களிடம் உரிமையாக பேசினார், என்னுடைய எதிர்காலம் குறித்தும் அட்வைஸ் செய்தார் என்று ஆர்த்தி ரஜினியை புகழ்ந்திருக்கிறார்.
நடிகை ஆர்த்தி கணேஷ் கோவை சரளா, மனோரமா போல காமெடியில் தனித்துவமாக சிறந்து விளங்கி வருகிறார். 65 படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்திருக்கிறார். அதிலும் என் தங்கை கல்யாணி படத்தில் நடிகர் கனிஷ்கரின் தங்கையாக நடித்திருந்தார். பிறகு பல வருடங்கள் கழித்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆர்த்தியின் திறமை
சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதுபோல மானாட மயிலாட நடன நிகழ்ச்சிகளிலும் கணவரும் மனைவியும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி இரண்டாவது பரிசையும் பெற்றிருந்தனர். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஆர்த்தி கலந்து கொண்டிருந்தார். இவருடைய உடல் எடை குறித்து பலர் கலாய்தாலும் அதையே தனக்கு சாதகமாக வைத்து அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆர்த்தி நடித்த திரைப்படங்கள்
பொல்லாதவன் படத்தில் இவர் செய்த அறந்தாங்கி கேரக்டர் பெரிய அளவில் இவருக்கு பாராட்டு வாங்கி கொடுத்தது. அதுபோல தனுசுடன் பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆர்த்தி கலந்து கொண்டு சினிமா வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து பேசி இருந்தார். அப்போது தன்னுடைய கணவரின் பிறந்தநாள் பற்றியும் அந்த பிறந்தநாளுக்கு நடிகர் ரஜினியிடம் ஆசீர்வாங்கியது குறித்தும் பகிர்ந்து இருக்கிறார்.

ரஜினியுடன் சந்திப்பு
அதில் ஆர்த்தி பேசும் போது ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாளுக்கு நாங்க ரெண்டு பேருமே ரஜினி சார் வீட்டிற்கு போய்விடுவோம். ரஜினி சார் சென்னையில் இருந்தால் நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிடுவோம். இந்த வருஷம் அவர் சென்னையில் தார் இருந்தார். அதனால் கடந்த மே பத்தாம் தேதி கனிஷ்கர் பிறந்தநாளுக்கு வரலாமா என்று அவரிடம் கேட்டுவிட்டு ரஜினியை சந்தித்தோம்.
ஆர்த்தி நெகிழ்ச்சி
அப்போது அவர் நாங்கள் நடித்துக்கொண்டு இருக்கிற படங்கள் பற்றி கேட்டு நிறைய அட்வைஸ் தந்தார். அதிலும் சினிமா தாண்டி வருமானத்திற்கு ஏதாவது வழி பண்ணி வைக்கணும் என்று அக்கறையோடு சொன்னார். சொந்தக்காரங்க கூட இப்படி எல்லாம் அக்கறை படுவாங்களான்னு தெரியாது. ஆனால் ரஜினி சார் அவ்ளோ அக்கறையாக எங்க கிட்ட பேசிகிட்டு இருந்தாரு என்று ஆர்த்தி மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். அதுபோல ரஜினியோடு எடுத்த புகைப்படங்களையும் தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications