கேப்ரில்லா வெளியிட்ட ஒற்றைப்பதிவு.. என்ன இப்படி சொல்லிவிட்டார்...!! குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லா போட்டோக்களை வெளியிட்டு குதர்க்கமாக கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாக்களில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், தற்போது மீண்டும் சீரியல்களில் வலம் வந்து கொண்டிருக்கும் கேபிரில்லாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். என்ன தான் இவர் சின்னத்திரையில் வலம் வநது கொண்டிருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளைப் போன்று தான் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்த கேப்ரில்லா இளைஞர்கள் பலருக்கும் பரிச்சயமான நபர்தான். டான்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தன்னுடைய நடன திறமையை பலருக்கும் அறிமுகப்படுத்திய அதே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். கேப்ரில்லா என்னும் பெயரை சொல்லும் போதே இளைஞர்களின் மனதில் புன்னகை பூத்து குலுங்கி வருகிறதாம். அவர் சின்னத்திரையில் கலக்கி கொண்டு இருந்தாலும் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஈரமான ரோஜா காவியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா கேரக்டரில் தற்போது கேப்ரில்லா நடித்து வருகிறார். இவரை கதாநாயகியாக திரைப்படங்களில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த திடீர் முடிவு அதிர்ச்சியை தான் கொடுத்திருந்ததாம். ஆனாலும் இவருக்காக இவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறியிருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் எப்போதும் பிசியாக இருக்கும் கேப்ரில்லா தற்போது இன்ஸ்டாகிராமில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

என்னவாக இருக்கும்
மார்டன் உடை புடவை என விதவிதமாக வலம் வரும் கேப்ரில்லா தற்போது புடவையில் பவ்யமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு கொடுத்த கேப்ஷன் தான் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறதாம். அதில் இறுதியாக காவியா அல்லாத கேப்ரில்லாவாக நான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து விலகப் போகிறாரா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வழக்கம்போல ரசிகரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கேப்ரில்லா மௌனமாக இருந்து வருகிறார். இந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ வெள்ளித்திரைக்கு ரெடி ஆகியாச்சா??என்று இடைவிடாமல் கேள்விகளை மலமலவென அனுப்பி வருகிறார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications