நெகட்டிவ் கமெண்ட்களுக்கு நடிகை மகாலட்சுமி வெளியிட்ட நச் பதில்... இந்த முடிவும் சரிதான்
சென்னை: திடீர் திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன் தம்பதிகளை அதிகமாக சமூக வலைத்தளத்தில் நெகட்டிவர்ஸ் கலாய்த்து வருவதற்கு தற்போது மகாலட்சுமி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
மகாலட்சுமியை பற்றி மீம்ஸ்களால் கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடியாக தான் இவர்கள் முன்பு செம்மையாக வாழ்ந்து காட்டப் போகிறேன் என்று சபதம் எடுத்திருப்பதை பார்த்து மகாலட்சுமியின் தீவிரமான ரசிகர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
திருமண வாழ்க்கையை தொடங்கும் போது அனைவரையும் போல பல கனவுகளோடு தொடங்கிய மகாலட்சுமி தற்போது திருமணம் முடிந்த இரண்டே நாளில் நெட்டிசன்களால் இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்திருப்பது நல்லது தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பரபரப்பு ஏற்படுத்தி திருமணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். மகாலட்சுமியின் திருமணம் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரைத்துறையினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மகாலட்சுமியின் திருமணத்தை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நெட்டிசன்கள் விதவிதமாக மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர். தற்போது திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில் சமூக வலைதளத்தில் அதிகமாக மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமண புகைப்படங்கள் வெளியாகி கலாய்க்கப்பட்டு வருகிறது.

நல்ல முடிவு தான்
பல நெட்டிசன்கள் மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று கலாய்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பலரும் ரவீந்தரை உருவத்தை வைத்து அதிகமாக கலாய்த்து வருகிறார்கள். இது வருத்தத்தை கொடுத்து இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் இருவரும் நெகட்டிவ்வர்ஸ்களுக்கும் கலாய்ப்பவர்களுக்கும் தக்கப்பதிலடி கொடுத்தது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. யார் எங்களை கலாய்த்தாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை அவர்கள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற ஒரு சிந்தனைதான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் கூறி இருக்கின்றனர்.

வலம் பெறும் மீம்ஸ்கள்
தயாரிப்பாளரான ரவீந்தர் தன்னை பற்றி உருவ கேலி செய்பவர்களை பற்றி ஒருபோதும் கண்டு கொண்டதே கிடையாது. அவர் தன்னை பற்றி கலாய்ப்பவர்கள் சிரித்துக் கொண்டால் அதுவும் எனக்கு நல்லது தான் என்று பலமுறை கூறியிருக்கிறார். அதுபோலத்தான் தற்போதும் கூட தன்னுடைய திருமண செய்தியை வைத்து யார் என்ன கலாய்த்தாலும் அதை எல்லாம் நாங்கள் நினைத்து கவலைப்பட்டதே கிடையாது. ஆனால், மகாலட்சுமியும் நானும் ஒருவரை ஒருவர் மாற்றி மீம்ஸ்களை வைத்து கலாய்த்து கொள்வோம் என்று ஜாலியாக சமூக வலைத்தளத்தில் பேசியிருக்கின்றனர்.

நெகட்டிவர்களுக்கு பதிலடி
மகாலட்சுமி சீரியல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் நடிக்கும் நடிகர்களுக்கு கூட மகாலட்சுமி திருமணத்தைப் பற்றி எந்த செய்தியும் தெரியவில்லையாம். அதனால் பலர் மகாலட்சுமியிடம் செல்லமாக கோபப்பட்டு இருக்கின்றனர்..அதனால் விரைவில் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடத்துவதற்கு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் முடிவு எடுத்து இருக்கின்றார்களாம். சமூக வலைத்தளத்தில் தங்களைப் பற்றி எவ்வளவு நாட்களுக்கு தான் நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். கலாய்த்து விட்டுப் போகட்டும் கலாய்ப்பவர்களுக்கு இன்னொருவர் சிக்கும் வரை தான் எங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் ஒருபோதும கமெண்ட் அடிப்பவர்களை பற்றி நினைத்துக் கொண்டிருப்பது இல்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications