விஜய் டிவியில் களமிறங்கும் நடிகை ரம்பா.. இனி இவருக்கு பதில் தான் இவர்..! வேற லெவலில் இருக்க போகுது
சென்னை: நடிகை ரம்பா விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள இருக்கிறார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி, மீனா, சங்கீதா, சினேகா என பலர் நடுவர்களாக இருந்திருக்கின்றனர்.
அழகிய லைலா என்று 2கே கிட்ஸ்களும் அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமான நடிகை ரம்பாவிற்கு அறிமுகமே தேவையில்லை. 90ஸ் காலகட்டத்தில் பலருடைய கனவு கன்னியாக வலம் வந்த ரம்பா தமிழில் பல ஹிட்டான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் காதலா காதலா, விஐபி, அருணாச்சலம், த்ரீ ரோசஸ், குங்குமப்பொட்டு கவுண்டர், பூ மகள் ஊர்வலம், உள்ளத்தை அள்ளித்தா, ஜானகிராமன் ஆனந்தம், சுதந்திரம், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன் என்று பல படங்கள் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
அதே நேரத்தில் சினிமாவில் உச்சகட்ட காலத்தில் இருந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார்.
அதிலும் மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சிகளில் இவர் நடுவராக கலந்து கொண்டார். ஆனால் இப்போது சில வருடங்களாக இவர் சினிமா பக்கமே தலை காட்டவில்லை. சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் நான் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தையும் பார்ப்பது கிடையாது, காரணம் இப்போது உள்ள சினிமாக்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர் இருப்பதில்லை.

அதனால் எனக்கு சினிமா அதிகமாக பிடிக்காது அந்த மாதிரி படங்களில் நான் நடித்தால் கூட என்னுடைய பிள்ளைகளே என்னை கிண்டல் பண்ணுவார்கள் என்று பேட்டி கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது இவர் மீண்டும் சின்னத்திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுவும் வேறு எதுவும் இல்லை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்கு தான். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி டான்ஸ் நிகழ்ச்சியில் அடுத்த சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த ஷோவிற்கு புதியதாக ரம்பாவும் வரப்போவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் நடிகர் ரியோ ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரோடு டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகர் ஸ்ரீதேவி நடிகை மீனா சிறப்பு நடுவர்களாக இருந்தனர். இந்த நிலையில் புதிய சீசனில் மீனாவிற்கு பதிலாக ரம்பா வர இருக்கிறார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications