என் வாழ்க்கையை சீரழித்த 3 பேர்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ! ரகசியங்களை உடைத்த நடிகை சோனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூட்டிங் ஸ்பாட்டில் தான் அனுபவித்த பிரச்சினைகள், தொந்தரவுகள் முதல் கிளாமர் நடிகை என்று அடையாளம் தனது வாழ்க்கை எப்படி பாதித்தது என்பது வரை நடிகை சோனா மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் சினிமா துறையில் 3 பேரு தன்னுடைய வாழ்க்கை சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கிளாமர் கேரக்டர்கள் மற்றும் பாடல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சோனா குசேலன், சிவப்பதிகாரம், மிருகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளரவும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும் முயற்சி செய்து வருகிறார்.

Sona

ஆனால் வெளியில் ரசிகர்கள் பார்த்த சோனாவுக்கும் திரைக்குப் பின்னால் அவர் சந்தித்த வாழ்க்கை மிகப்பெரிய வித்தியாசம் இருந்ததாகவும் அவர் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். குறிப்பாக தன்னை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டுமே சிலர் பார்த்ததாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகை சோனா பேட்டி

சோனா பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது, சினிமாவில் ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகள் தன்னை ஒரு குறிப்பிட்ட வகையான கேரக்டருக்குள்ளே சிக்க வைத்து விட்டது. எல்லோரும் என்னை ஒரு கவர்ச்சி பொருளாக தான் பார்த்தார்கள். நான் நடிகை சோனா என்று சொல்லுங்கள், கவர்ச்சி நடிகை என்று கூப்பிடாதீர்கள் என்று எனக்கு சொல்ல தோணும்.

ஆனால் நாம அந்த மாதிரி தானே கேரக்டர்கள் செய்து கொண்டிருக்கிறோம் நமக்கு திறமை இருக்கிறது என்று வேற கேரக்டர் கொடுக்காமல் சிலர் ஒரு வட்டத்துக்குள்ளையே கேரக்டர் கொடுத்து விட்டதால் அது அடையாளமாகவே மாறிவிட்டது. நான் கவர்ச்சியாக இருப்பது தான் என்னுடைய பிளஸ். அதே கவர்ச்சி தான் என்னுடைய மைனஸ் என்று அவர் கூறியிருக்கிறார். சினிமாவில் ஒரு பெண் தனது தோற்றத்தால் மட்டும் அடையாளப்படுத்துவதால் அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகளையும் இது காட்டுகிறது.

சூட்டிங்ஸ்பாட் அனுபவங்கள்

இதையெல்லாம் விட அதிர்ச்சி ஏற்படுத்தும் விஷயங்கள் தான் சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தது இருக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதாவது, சூட்டிங் ஸ்பாட்டில் தன்னைவிட 20 வயது முதல் 30 வயது வரை மூத்த சிலர் உரசி செல்வார்கள் என்றும் அந்த நேரத்தில் தனக்கு எதிராக வெளிப்படையாக பேச முடியாத சூழல் இருந்ததாகவும் சோனா கூறி இருக்கிறார். அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் தொடர்ந்து படங்களை நடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருந்ததால் சில சம்பவங்களை கண்டும் காணாதது போல் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாழ்க்கையை கெடுத்த 3 பேர்

அதுபோல எனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்களுக்கு 3 பேருதான் காரணம். அவங்க செய்த சதி தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றி விட்டது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த 3 பேர் யார் என்று அவர் பெயரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான ஏமாற்றங்கள் மற்றும் மோசமான அனுபவத்தினால் ஒரு கட்டத்தில் யாரையும் நம்ப முடியாத நிலைக்கு தான் சென்றதாகவும் சொல்லியிருக்கிறார்.

வடிவேலு உடன் நடிப்பு

சோனா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஸ்மோக் என்ற வெப்சீரிஸை உருவாக்கி இருந்தார். அதில் தனது 5 வயது முதல் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களை பதிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார். சோனா வடிவேலுவுடன் குசேலன் படத்தில் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தையும் கொடுத்தது ஆனால் அந்த படத்தின் நடித்துக் கொண்டிருந்தபோது வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தான் அவருடன் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்கவே மாட்டேன் என்று பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அதனால் இப்போது இவர்கள் இருவருடைய காம்பினேஷனை பார்க்க முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+