குழந்தை பிறந்த சில நாட்களில் "மிர்ச்சி செந்தில்” மனைவியை பற்றி கூறிய உருக்கமான வார்த்தைகள்
சென்னை: சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் செந்தில் தன்னுடைய மனைவியை குறித்து பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி நடிக்காத காரணத்தைப் பற்றி அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தன்னுடைய மனைவி மற்ற நடிகைகளை போல அல்ல என்று செந்தில் கூறிய காரணங்கள் கேட்டு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அவர் பேசிய வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

மனதை கொள்ளை கொண்ட சரவணன் மீனாட்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. அதிலும் குறிப்பாக முதல் பாகத்தை இப்ப கேட்டாலும் இளையர்களின் பலருடைய ஃபேவரிட் கதை என்று சொல்லும் வகையில் இந்த சீரியல் இருந்து வருகிறது. அதுவும் இந்த சீரியலில் "ஏதோ.. ஏலோ" பாடல் நைட்டிஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல். இப்ப வரைக்கும் பலர் இந்த சீரியலில் பாடலை காலர் டியூனாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இந்த சீரியலில் ரீல் கணவன் மனைவியாக அறிமுகமாகி, நிஜ கணவன் மனைவியாக மாறிய செந்தில் ஸ்ரீஜாவை இப்ப வரைக்கும் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்கள்தான்.

சமீபத்தில் ஆண் குழந்தை
முதல் சீசனில் இவர்களை ரசித்த ரசிகர்களால் தான் தொடர்ந்து இந்த சீரியல் பல சீசன்களை தொட்டது. இந்த வகையில் நடிகை ஸ்ரீஜா திருமணத்திற்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் செந்தில் உடன் மாப்பிள்ளை எனும் சீரியலில் நடித்தார். அதை தொடர்ந்து மீண்டும் எந்த சீரியலிலும் நடிக்க வராமல் இருக்கிறார். சமீபத்தில் தான் 8 வருடங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு செந்தில் ஸ்ரீஜாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய மனைவியை பற்றி எதற்காக ஸ்ரீஜா திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிக்க வராமல் இருந்தார் என்பதை பற்றி முதல் முறையாக மனம் திறந்து செந்தில் பேசி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காத காரணம்
அதில் ஸ்ரீஜா திருமணத்திற்கு பிறகு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம் ஆனால் அவர் அதற்கு எல்லாம் மறுத்துவிட்டாராம். தனக்கு சீரியலில் நடிப்பதற்கு ஆசை இல்லை என்று கூறிவிட்டாராம். தான் சிறுவயதில் இருந்து நடித்து வந்ததால் திருமணத்திற்கு பிறகு எனக்கு நடிக்க விருப்பமில்லை நீங்கள் மட்டும் நடித்தால் போதும் என்று கூறிவிட்டாராம் அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு தனக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்கு தான் பிடித்திருக்கிறது. அதிலேயே தன்னுடைய நேரத்தை செலவழிப்பதில் எனக்கு போதும் என்று கூறியிருந்தாராம். வீட்டில் இருக்கும்போது மரம் செடிகள் வளர்ப்பது ஸ்ரீஜாவுக்கு ரொம்பவே பிடிக்குமாம். அதில் தான் தன்னுடைய கவனத்தை முழுக்க செலுத்தி கொண்டு இருப்பாராம்.

மற்ற நடிகைகள் போல இல்லையாம்
மற்ற நடிகைகள் போல ஸ்ரீஜா அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் காட்ட மாட்டாராம். இதைக் குறித்து கேட்டால் எனக்கு விருப்ப வில்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விடுவாராம். ரொம்பவே வற்புறுத்தி கேட்டு தான் ஏதாவது பண்டிகை நேரங்களில் கூட செந்தில் உடன் ஒரு சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்வாராம். அதை தான் செந்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறார். தற்போது குழந்தை பிறந்த நிலையில் குழந்தையும் மனைவியும் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஸ்ரீஜாவும் அவருடைய மகனும் நன்றாக இருக்கிறார்கள் என்று ரசிகர் கேள்விகளுக்கும் செந்தில் பதில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications