சீ... சீ! பிக் பாஸ்க்கு மட்டும் போக மாட்டேன்! ஒரே பெட்டில் ஆணும் பெண்ணும்.. விஷால் பட நடிகை ஆதங்கம்
சென்னை: சர்ச்சைகளும், பரபரப்பும் நிறைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருக்கிறது. பலரும் இதில் கலந்துகொண்டால் புகழ் கிடைக்கும், வருமானம் பெருகும் என நம்பிவரும் நிலையில், பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, தனக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராகப் பேசி இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் இந்த தனுஸ்ரீ தத்தா
பாலிவுட் திரையுலகில், ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தனுஸ்ரீ தத்தா. 2005 ஆம் ஆண்டு வெளியான ஆசிக் பனாயா ஆப்னே என்ற திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர், சாக்லேட், அப்பு சப் கோ, போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.
2018-ல், மீ டூ இயக்கத்தின் கீழ், தான் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தைரியமாகப் பேசியதன் மூலம், இந்தியத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பினார். அதன் பிறகு, அவர் திரையுலகிலிருந்து சில காலம் விலகி இருந்தார்.
தனுஸ்ரீயின் அதிரடி பேட்டி
பாலிவுட் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஸ்ரீ, தனக்குக் கடந்த 11 வருடங்களாகப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் அதை மறுத்து வருவதாகக் கூறினார்.
"நான் அந்த மாதிரி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன். பிக் பாஸ் வீட்டில் தங்க முடியாது. நான் என் சொந்த குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் தங்காத ஆள். அப்படி இருக்கும்போது பிக் பாஸ் வீட்டுக்குப் போவேனா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ரூ. 1.65 கோடி கொடுத்தாலும் வரமாட்டேன்
"பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எனக்கு ரூ. 1.65 கோடி சம்பளம் தருவதாகத் தெரிவித்தார்கள். நிகழ்ச்சியின் ஆடை வடிவமைப்பாளரும் என்னைத் தொடர்புகொண்டு, 'நீங்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், உங்களின் டயட்டை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். நீங்கள் நிலாவையே கொடுத்தாலும் நான் வரமாட்டேன் என்று கறாராகச் சொல்லிவிட்டேன்" என்று தனுஸ்ரீ தத்தா திட்டவட்டமாகப் பேசினார்.
மேலும், "எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுத்தமாக ஆர்வம் இல்லை. ஆண்களும், பெண்களும் ஒரே ஹாலில் தூங்குகிறார்கள், சண்டை போடுகிறார்கள். என்னால் அது முடியாது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக ஒரே படுக்கையில் ஆணுடன் படுக்கும் அளவுக்கு சீப்பான பெண்ணாக நான் தெரிகிறேனா? நான் சீப்பான ஆள் இல்லை. எனக்கு என் மன நிம்மதி தான் முக்கியம்" என்று தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என நடிகர் ராம் கபூர் ஏற்கெனவே பேசியிருந்த நிலையில், தற்போது தனுஸ்ரீ தத்தாவும் இதே கருத்தைப் பதிவு செய்திருப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்கம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications