Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர்களுக்கும் உணர்வு இருக்கு, தடுப்பது சரி இல்லை! தெரு நாய்களுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்.. குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நாய் கடி மூலம் பரவும் ரேபிஸ் வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு நாய் பிரியர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

Aishwarya Rajesh vijay tv

நீதிமன்ற உத்தரவும் எதிர்ப்புகளும்

தெருநாய் கடி அதிகமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் தலையிட்டு டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் நாடு முழுவதும் உள்ள தெரு நாய்களை 8 வாரங்களில் பிடிப்பதற்கான காலக்கெடுவையும் விதித்தது. இந்த உத்தரவு விலங்கு நல ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இதில் இயக்குநர் வசந்த், நடிகைகள் வினோதினி, அம்மு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பிரபலங்களின் எதிர்ப்பு

நடிகை சதா கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகைகள் வேதிகா, கனிகா ஆகியோரும் நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நாய்களுக்கும் நம்மைப் போல தானே உயிர் இருக்கிறது தெருவில் இருக்கும் நாய்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு இடத்தில் அடைத்து வைப்பது எந்த வகையில் நியாயம் நம்மை ஒரு இடத்தில் இருந்து கடத்தி இன்னொரு இடத்தில் அடைத்து வைத்தால் ஏற்றுக் கொள்வோமா அதுபோல தானே நாய்களுக்கும் கஷ்டமாக இருக்கும் அதுவும் உயிர் தான் என்று பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்

யார் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சி மூலம் அவர் ரசிகர்களிடையே பிரபலமானார். பிறகு இவர் சினிமா உலகில் நுழைந்து 'அட்டக்கத்தி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு 'பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடித்த 'காக்கா முட்டை' திரைப்படம் இவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. மேலும் 'கனா', 'அண்ணன்' போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சப்போர்ட்

ஒரு நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "எல்லோருக்கும் விலங்குகள் மீது ஒரு அன்பு இருக்கும். குறிப்பாக தெரு நாய்களை நிறைய பேர் நாய்கள் என்றே சொல்ல மாட்டார்கள். நம்மில் ஒரு வராகத்தான் பார்ப்பார்கள். அந்தளவிற்கு நாய்களுடன் இணக்கமாக இருப்பார்கள். அவர்களின் உணர்வுகளைத் தடுப்பது சரியில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவை நான் ஆதரிக்கவில்லை" என்றார்.

சமூக வலைத்தளங்களில் விவாதம்

தெரு நாய்களுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சில ரசிகர்கள் ஐஸ்வர்யாவின் மனிதநேயத்தை பாராட்டி வரும் நிலையில், வேறு சிலர் தெரு நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுமக்கள் சிலர் ரேபிஸ் வைரஸ் குறித்த தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அதற்கு அரசு ஒரு தீர்வைக் காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரபலங்கள் தெரு நாய்களுக்கு சப்போர்ட் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் வீட்டில் தெரு நாய்களை விட்டால் தான் அவர்களுக்கு கஷ்டம் தெரியும், பிரபலங்கள் தெருவில் நடந்து போவதில்லை அவர்கள் காரில் போகிறார்கள் அதனால் அவர்களுக்கு தெருநாய்களால் சாதாரண மக்கள் படும் கஷ்டம் தெரியாது, அதுபோல தெரு நாய்களுக்கு சப்போர்ட் பண்ணுபவர்கள் தெரு நாய்களை தத்தெடுத்து தங்களுடைய ஏசி வீட்டில் வளர்க்கலாமே என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தெரு நாய்கள் விவகாரம் பொதுமக்களிடையே ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+