பாவனிக்கு ஆதரவாக அமீர் செய்த செயல்..குவியும் கருத்துக்கள்..என்ன இப்படி சொல்லிவிட்டார்..?!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாவனிக்கு ஆதரவாக அமீர் சமூக வலைத்தளத்தில் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாவனி பற்றி பேசிய அனிதா மற்றும் நிரூப், தாமரைச்செல்விக்கு இப்படி ஒரு பதிலை அமீர் கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லையாம்.

வைரலாகும் வெட்டி கதை

வைரலாகும் வெட்டி கதை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தொடங்கப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது தான் முதல்முறையாக கலக்கப்போவது யாரு சதீஷ் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களுக்கு நேரம் போக வேண்டும் என்பதற்காக இதற்கு முந்தைய சீசன்களில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அனிதா பாவனியைப் பற்றி பேசியது தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அனிதா பேசிய வார்த்தைகள்

அனிதா பேசிய வார்த்தைகள்

சின்னத்திரை நடிகையாக ஏற்கனவே பலருக்கும் பரிச்சயமான பாவனி ரெட்டி பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாவனி 100 நாட்கள் உள்ளே இருந்து மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருடன் இருந்த சக போட்டியாளரான நிரூப் ஐந்தாவது இடத்தில் வெற்றி பெற்றிருந்தார். இதனால் ஐந்தாவது சீசனில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அனிதா நிரூப்பிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது நிரூப்புக்கு ஆதரவு கொடுத்து பாவனியை மட்டம் தட்டும் விதமாக அனிதா பேசிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்துக்கள்

ரசிகர்களின் கருத்துக்கள்

பாவனி ஐந்தாவது சீசனில் அப்படி என்னதான் விளையாட்டு விளையாடினார். அவர் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன?? என்று அனிதா கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு நிரூப் எப்போதும் பாவனி எப்போதும் கேமரா முன்னாடி தான் பேசிக் கொண்டிருப்பார் என்று சொன்னதும் அது எல்லாம் எங்களுக்கு காட்டப்படவில்லை, பாவனி அமீர் காதல் காட்சிகள் தான் காட்டப்பட்டது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அனிதாவுக்கு ஆதரவாகவும், பலர் பாவனியைப் பற்றி எப்படி இப்படி எல்லாம் கூறலாம் என்றும் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

பதில் சொன்ன அமீர்

பதில் சொன்ன அமீர்

தற்போது வைரலாகும் இந்த வீடியோவை அமீரும் பார்த்து இருக்கிறார். அதனால் அனிதா, நிரூப், தாமரை செல்வி மற்றும் சுருதி 4 பேருக்கும் பதில் சொல்லும் விதமாக, 'எதுவும் செய்யாமல் யாராலும் இறுதிப்போட்டிக்கு வர முடியாது..தனியாக நின்று விளையாடியவர், பாவனி' என்று

கூறியிருக்கிறார். இந்தப் போஸ்டர் பார்த்ததும் ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை குவித்து வருகிறார்கள். வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இப்படி அடுத்தவர்களை குறை சொல்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. விளையாட்டை விளையாடாமல் அங்கேயே உட்கார்ந்து வெட்டி கதை பேசிக் கொண்டிருப்பது தான் பிக்பாஸ் போட்டியாளர்களின் குணமாக இருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+