Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவி சீரியலை பாராட்டி அனுஷ்கா செய்த செயல்.. உருக்கமாக மகிழ்ச்சியை வெளிக்காட்டிய சீரியல் நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் கதாநாயகிக்கு அனுஷ்கா வாழ்த்து தெரிவித்துள்ளாராம்.

ஒரு காலத்தில் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்ட சீரியலுக்கு அனுஷ்கா ஆதரவு தெரிவித்து இருப்பது அந்த சீரியலின் ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கும் பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் ஏற்பட்ட சோதனை

ஆரம்பத்தில் ஏற்பட்ட சோதனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பவித்ரா, ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீரியலின் மூலமாக பலருக்கும் பரிச்சயமானவர்தான். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்புவரைக்கும் பவித்ரா ஒரு சில சீரியல்களில் சைடு கேரக்டராக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கு ஹீரோயினியாக வாய்ப்பு வந்ததும் பலர் இவரை கலாய்த்து வந்தார்களாம். இவரெல்லாம் ஹீரோயினியா?? என்றுதான் இவரை பற்றி பலரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அது மட்டும் அல்லாமல் ஒரு சிலர் இவரிடம் நேரடியாக கூட நீ எல்லாம் ஹீரோயினியாக நடிக்க போறியா?? அது உன்னால் முடியுமா?? என்றெல்லாம் கேட்டு இருந்தார்களாம்.

ரசிகர்களின் மனதை வென்ற கதாநாயகி

ரசிகர்களின் மனதை வென்ற கதாநாயகி

எப்போதும் காற்று ஒரு பக்கம் வீசிக் கொண்டிருக்காது. திறமை இருந்தால் நாம் முன்னேறி ஜெயிக்கலாம் என்பதற்கு இணையாக தான் ஈரமான ரோஜாவே சீரியலில் பவித்ரா தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். அதன் மூலமாக அவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர். தற்போது அந்த சீரியல் முடிவடைந்ததும் பலர் இவரை ரொம்பவே மிஸ் பண்ணி இருந்தார்களாம். ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் வரும்போது கூட மீண்டும் பவித்ரா அந்த சீரியலில் நடிக்க வேண்டும் என்று பலரும் தங்களது விருப்பங்களை தெரிவித்து வந்தார்களாம்.

சர்ச்சைக்கு உள்ளான ப்ரோமோ

சர்ச்சைக்கு உள்ளான ப்ரோமோ

ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைந்த பிறகு விஜய் டிவியில் மீண்டும் பவித்ரா, தென்றல் வந்து என்னை தொடும் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் வெளியாவதற்கு முன்பே இதன் ப்ரோமோ பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. அதில் வெளிநாட்டில் சென்று படித்து வந்த நடிகை உள்ளூரில் ரவுடிசம் பண்ணும் கதாநாயகன் கோவிலில் வைத்து ஒரு காதல் ஜோடியை பிரிப்பதை பார்த்ததும் பொங்கி எழுகிறார். அப்போது அந்த கதாநாயகன் கதாநாயகிக்கு தாலியை கட்டி அவருக்கு தண்டனை கொடுக்கிறார். இப்படி வந்த ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் சமூக சிந்தனையாளர்கள் கூட தங்களுடைய சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அனுஷ்கா செய்த செயல்

அனுஷ்கா செய்த செயல்

என்னதான் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு நெகட்டிவ் கருத்துக்கள் வந்தாலும் இந்த சீரியல் ஒளிபரப்பான பிறகு இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கிவிட்டது. சீரியலின் கதையின்படி தற்போது வெற்றி கேரக்டரில் வினோத் பாபு நடித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகியாக பவித்ரா ஜனனி நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் பவித்ரா ஜனனியின் நடிப்பை பிடித்து போன வெள்ளித்திரை நடிகையான அனுஷ்கா, பவித்ராவுக்கு போன் செய்து பேசி உள்ளாராம். அப்போது இந்த சீரியலை தொடர்ந்து தான் பார்த்து வருவதாகவும் கூறி இருக்கிறாராம். அதை குறித்து பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

நெகிழ்ச்சியான பதிவு

நெகிழ்ச்சியான பதிவு

பவித்ரா இன்ஸ்டாகிராமில், "தாமதமான பதிவு, என் உற்சாகத்தை வார்த்தைகளால் மொழிபெயர்க்க எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஒரு நீண்ட சோர்வான நாளை புதிய காற்றின் ஊக்கமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது வேற யாரும் இல்லை அனுஷ்கா தான். நமது சொந்த பாகுபலி நடிகை தேவசேனா. இது ஒரு பிராங்க் என்ற நினைத்தேன். ஆனால் உண்மையை தெரிந்து கொண்ட பிறகு மிகவும் சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு இது ஒரு பாராட்டு அழைப்பு. அனுஷ்கா எங்களை பாராட்டினார். அவர் மீதான மரியாதை எல்லைக்கு அப்பாற்பட்டது. அவர் எங்கள் தொடரை வழக்கமாக பார்ப்பார் என்று குறிப்பிட்டார். மேலும் அவரிடம் பெற்ற பாராட்டுக்கள் என் இதயத்தில் என்றென்றும் பொறிக்கப்படும். நான் மேகத்தில் பறக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நான் சோர்வாக இருக்கும்போது அனுஷ்காவிடம் இருந்து வந்த அழைப்பை நினைத்து என் சோம்பல் எல்லாம் மந்திரம் போல் பறந்து செல்கிறது. "என்று உருக்கமாக தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவை பார்த்ததும் இந்த சீரியலின் ரசிகர்கள், நடிகர்கள், பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+