மகள் பதிவிட்ட போஸ்ட்..அர்ச்சனாவின் வருத்தம்...இப்படி பண்றாங்களே ஏன்.. ரசிகர்களின் ஆறுதல்
சென்னை: பிரபல தொகுப்பாளரான அர்ச்சனா மற்றும் அவருடைய மகள் சாரா சமூக வலைத்தளத்தில் தன் மனதில் இருக்கும் வருத்தத்தை போஸ்டாக வெளியிட்டுள்ளார்.
நாங்களும் மனிதர்கள் தான்... எதற்காக சிலர் இப்படி செய்கிறார்கள் என்று வேதனையோடு அர்ச்சனா கூறியுள்ளார்.

கலகலப்பாக பேசும் திறமை
தொகுப்பாளர் என்று சொன்னதுமே டக்கென்று நினைவிற்கு வரும் தொகுப்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா இருந்து வருகிறார். தற்போது அவருடைய மகளும் அவருக்கு இணையாக தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே ஜீ தமிழில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர். இவர் கல்லூரி படிக்கும்போது ஜெயா டிவியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பின்பு சன் டிவிக்கு மாறியுள்ளார். இளமை புதுமை நிகழ்ச்சியில் இவருடைய கலக்கலான பேசும் திறமையால் இவரை பலருக்கும் பிடித்துப் போய் உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளராக இவர் வலம் வந்து கொண்டிருந்தார், அதன்பின்பு திருமணத்திற்கு பிறகு மீண்டும் அவர் தொகுப்பாளர் ஆகவே அறிமுகமாகக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இவர் பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். பலருக்கும் பிடித்த ஃபேவரைட் ஆக இவர் இருப்பதால் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் இவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்று இவர் நினைத்திருந்த நேரத்தில் அதுவரை பெற்றிருந்த பெயரையும், புகழையும் இந்த நிகழ்ச்சி இவருக்கு மாற்றி அமைத்து விட்டது.

மகள் சாராவின் போஸ்ட்
பிக்பாஸ் நான்காவது சீசனில் இவர் கலந்து கொண்ட பிறகு அதிகமான நெகட்டிவ் கமெண்ட் பெற்று வருகிறார். அது மட்டுமல்லாமல் இவரை மட்டுமல்லாமல் இவருடைய மகளையும் பலர் நெகட்டிவ் கமெண்ட்களால் திட்டி வருகிறார்களாம். சமூக வலைத்தளத்தில் இவருடைய மகள் சாரா ஆக்டிவாக இருக்கும் போது பலர் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி வருகிறார்களாம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் தாயில்லாமல் நானில்லை எனும் நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் அவருடைய மகள் இருவரும் தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்து பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கின்றோம் என்கிற பெயரில் கன்னாபின்னாவென பேசிவருகிறார்களாம். இதனால் மன உளைச்சலான சாரா போஸ்ட் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். பிக்பாஸ் நான்காவது சீசனில் இவர் கலந்து கொண்ட பிறகு அதிகமான நெகட்டிவ் கமெண்ட் பெற்று வருகிறார். அது மட்டுமல்லாமல் இவரை மட்டுமல்லாமல் இவருடைய மகளையும் பலர் நெகட்டிவ் கமெண்ட் களால் திட்டி வருகிறார்களாம். சமூக வலைத்தளத்தில் இவருடைய மகள் சாரா ஆக்டிவாக இருக்கும் போது பலர் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி வருகிறார்களாம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் தாயில்லாமல் நானில்லை எனும் நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் அவருடைய மகள் இருவரும் தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்து பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கின்றோம் என்கிற பெயரில் கன்னாபின்னாவென பேசிவருகிறார்களாம். இதனால் மன உளைச்சலான சாரா போஸ்ட் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.

சாராவின் விளக்கம்
எல்லோருக்கும் வணக்கம், இங்கு உள்ள அனைத்து வெறுப்பாளர்களுக்கும் இது ஒரு சிறிய குறிப்பு...நானும் என் அம்மாவும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறோம். அதனால் நாங்கள் டன் கணக்கில் வெறுப்பை பெற்றுள்ளோம். அது ஏன் என்று புரியவில்லை. அதைவிட முக்கியமாக என் மீதும் அம்மா மீதும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களிடமிருந்து அதிகமான கருத்துக்கள்
இருந்துள்ளது. எனக்கு தெரிந்த படி இரண்டு அபிமான மகளின் தாய் கூட இருந்து கருத்து இருந்தது. நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அன்பை மட்டுமே வரவேற்கும் நபர்கள். நீங்கள் எங்களை விரும்பவில்லை என்றால் உங்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அது எங்களை மிகவும் பாதிக்கிறது என்பதால், நீங்களே வைத்துக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை. வெறுப்பை மகிழ்வதில் எங்களுக்கு ஆர்வமில்லை. எப்போதும் எங்களை ஆதரித்து அனைவருக்கும் நாங்கள் உன்னை நேசிக்கிறோம்...உங்களை அணைத்துக் கொள்கிறோம்... நன்றி மற்றும் நாங்கள் நம்புகிறோம்..என்று கூறியுள்ளார்.

பிரபலங்களின் ஆறுதல்கள்
சாராவின் இந்த வருத்தமான பதிவை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சில பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதில் முதலாவதாக டிடி உங்களுக்கு இன்னும் பலம் ஆச்சும்மா..அதனால் ஃபீல் பண்ணாதே சாரா என்று கூறியுள்ளார் அதுபோல ஜாக்லின் ஜொலித்துக் கொண்டே இருங்கள் சாரா..ராக்கிங் லேடிஸ் அக்கா மற்றும் சாரா பொம்மை தட்டி விடு, சேதர விடு என்று புதுவிதமாக
அறிவுரையும், ஆறுதல்களையும் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவருடைய இந்த போஸ்ட்க்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications