Arun Vijay: பிள்ளைங்க விஷயத்துல.. எங்க அப்பா மாதிரி இருக்க கூடாதுனு நினைத்தேன்! உருக்கமாக பேசிய அருண் விஜய்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, தன்னுடைய அப்பா மாதிரி மட்டும் இருக்கக்கூடாது என்று நான் நினைத்தேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கான காரணம் பற்றி அவர் சொன்னதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக சினிமாவில் பல நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களைப் போல அவர்களால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால் சிலர் தங்களுக்கு என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் அதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் நடிகர் அருண் விஜய்.

அருண் விஜய் 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானார். அந்த நேரத்தில் அவர் நடித்த இயற்கை, பாண்டவர் பூமி படம் எல்லாம் இப்போது பார்ப்பவர்களுக்கும் அருண் விஜய் அப்போ இருந்த மாதிரியே இப்போ இருக்கிறாரே என்று சொல்ல தோணும். அதே அளவிற்கு 90ஸ் காலகட்டத்தில் அறிமுகமான அருண் விஜய் இப்போதும் இருக்கிறார். ஆனால் அவருடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் தான் கிடைக்கவில்லை என்பது அவருடைய ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது.
நடிகர் அருண் விஜய் பழம் பெறும் நடிகரான விஜய குமாரின் மகன் தான். விஜய குமார் முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். பிறகு மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து விட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சுளாவிற்கு நடிகை வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருந்தனர். ஆனால் மஞ்சுளா இறப்பதற்கு முன்பு விஜயகுமாரின் 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் எல்லோருமே ஒன்றாக தான் வளர்ந்து இருக்கிறார்கள். சமீபத்தில் நடிகை வனிதா மட்டும் தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க அருண் விஜய் கடைசியாக இட்லி கடை படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து இப்போது அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ரெட்டை தல திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷனில் பேசியிருந்தார். அப்போது நான் என்னுடைய அப்பா மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்தேன் என்று பேசி இருக்கிறார்.

அதற்கான காரணத்தை பற்றி அவர் சொல்லும்போது, என் பசங்க விஷயத்துல நான் எங்க அப்பா மாதிரி இருக்க கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா என்னோட சின்ன வயசுல என் அப்பா ரொம்ப பிசியா இருந்தாரு. நான் அதனால அவரை ரொம்ப மிஸ் பண்ணினேன். அது என் பசங்களுக்கு வரக்கூடாதுன்னு நினைச்சேன். அதுக்கு ஏத்த மாதிரி சினிமாவில் வாய்ப்பு இல்லாத போது வருத்தப்பட்டது இல்ல.
Vijay TVK : விஜய் கட்சிக்கு போனதால இனி சினிமா வாய்ப்பு வராதுன்னு சொல்றாங்க! நடிகர் ஜீவா ரவி உருக்கம்
ஏன்னா அந்த நேரத்தில் தான் என் பசங்க கூட நேரத்தை செலவழிச்சேன். அவங்கள ஸ்கூல்ல போய்விட்டு கூட்டிட்டு வருவேன். அதைவிட என்ன சந்தோஷம் இருக்கு? அதனால சினிமாவில் எனக்கு கிடைச்ச பிரேக்கை நல்ல விஷயமாக தான் நான் பார்த்திருக்கிறேன் என்று மிகவும் பாசிட்டிவாக பேசியிருக்கிறார்.
அதோடு பெற்றோர்கள் எல்லோரும் தங்களுடைய குழந்தைகளுக்காக பணத்தை மட்டும் சம்பாதித்தால் போதாது, அவர்களுடன் நேரமும் செலவிட வேண்டும் என்று இன்றைய பெற்றோர்களுக்கும் அறிவுரைகளையும் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications