கவுண்டவுன் ஸ்டார்ட் மகிழ்ச்சியில் அஸ்வின்.. இவ்வளவு கோபமா..?? எத்தனை பேர் மாட்டிக்க போறாங்களோ..!!
சென்னை: சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்து உள்ளார் அஸ்வின்.
அதோடு மட்டுமின்றி இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கு என்று சொல்வது போல் கவுண்டவுன் ஸ்டார்ட் என்று கூறியுள்ளார்.
இதைப் பார்த்த இணையவாசிகள் அஸ்வின் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது இன்னும் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் தான் இந்த செய்தியை பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

அழகன் அஸ்வினின் ரசிகைகள் கூட்டம்
கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த அஸ்வின் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்று மிகவும் கஷ்டப்பட்டு விஜய் டிவியில் வாய்ப்பைப் பெற்று அந்த சேனல்களில் வரும் சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து முன்னேற முயற்சித்து வந்தார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் அஸ்வினுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் ஹேட்டர்ஸ்களே இல்லாமல் சின்னத்திரை அஜித் என்று சொல்லப்படும் அளவுக்கு புகழின் உச்சத்தை அடைந்தார். தமிழக மக்கள் எல்லாம் தங்கள் வீட்டு பையனாக ஏற்றுக்கொண்ட அஸ்வினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவர் கதவை தட்டின. சமூக வலைத்தளங்களிலும் அஸ்வினுக்கென்று ஒரு பெரிய ரசிகர் ரசிகைகள் கூட்டங்களே இருந்தது.

சாத்தான் ஆக மாறிய சமூக வலைதளங்கள்
யார் கண் பட்டதோ!! அஸ்வினின் முன்னேற்றத்திற்கு அவரே தடைக்கல்லாய் மாறிப் போனார். அஸ்வின் ஹீரோவாக அறிமுகமான என்ன சொல்லப் போகிறாய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன் பட இயக்குனரையும், கதையையும் புகழ்வதாக நினைத்துக் கொண்டு, தான் இந்த கதையை கேட்பதற்கு முன்பு 40 இயக்குனர்களிடம் கதை கேட்டதாகவும், அந்த நேரத்தில் தான் தூங்கி விட்டதாகவும்,தான் தூங்காத ஒரே கதை இதுதான் என்று கொஞ்சம் ஓவர் டோஸில் புகழ்ந்து விட்டார்.இது போதாதா..!! சும்மா விடுவார்களா நெட்டிஸன்கள் திரை உலகில் அஸ்வினின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவிற்கு வைத்து செய்து விட்டனர்.

டிவிட்டர் பதிவு
தான் பேசியதை குறித்து வருத்தம் தெரிவித்து உடனே அஸ்வின் வீடியோ போட்டிருந்தார் இருந்தாலும். அஸ்வின் தான் தூங்கியதாக சொன்னதை டெம்ப்லட்டாக எடுத்துக் கொண்ட ஒரு குரூப் இன்னும் இணையத்தில் அவரை சீண்டி வருகிறது.பல பிரபலங்கள் அஸ்வினுக்காக ஆதரவு குரல் கொடுத்தாலும் அவரது அன்றைய பேச்சின் பாதிப்பு இன்னும் அஸ்வினை தொடர்ந்து வரத்தான் செய்கிறது.சமீபத்தில் யூடியூப் வியூஸ் அதிகமாவதற்காக தவறான தகவல்களை முகப்பு பக்கத்தில் தலைப்பாக வைத்துள்ளார் என்று ஒரு யூடியூபரை கைது செய்துள்ள செய்தியை தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அஸ்வின்.

இது ஆரம்பம்தான்
அதுமட்டுமின்றி இது ஆரம்பம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அஸ்வின் ரசிகர்கள் இந்த மாதிரியான நபர்களால் தான் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல் மூலம் தன்னுடைய கேரியரில் எதிர்பார்க்காத பின்னடைவை சந்தித்ததாகவும்,எனவே தான் அஸ்வின் யூடியூப் சேனல்கள் மீது கோபத்தில் இருப்பதாகவும், அஸ்வின் பக்கத்தில் இருந்து பார்த்தால் இது நியாயம் தான் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் வழக்கம்போல் சிலர் நெகட்டிவ் மீம்ஸ்களையும், கருத்துகளையும் அஸ்வினின் தூக்கத்தை மறக்காதவர்கள் கமெண்ட்களில் பதிவிட்டும் வரத்தான் செய்கின்றனர்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications