சூட்டிங் ஸ்பாட்டில்... மன்னிப்பு கேட்ட பாண்டியன் ஸ்டோர் ஜீவா...இதுதான் காரணமா
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வெங்கட் வெளியிட்ட சூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
என்னமோ. ..என்ன மாயமோ தெரியவில்லை..இதை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என்று இவர் கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.

கண்ட்ரோல் இல்லாத செயல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்து வரும் வெங்கட் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வாய்விட்டு சிரித்து வருகின்றனர் சூட்டிங் ஸ்பாட்டில் இப்படி எல்லாம் கூட அலப்பறை செய்கிறாரா இவர்??என்று பலர் கூறி வருகின்றனர். சீரியலின் அமைதியின் சொரூபம் ஆக அண்ணனை எதிர்த்துப் பேசாத தம்பியாக இருக்கும் இவர் சூட்டிங் பாட்டில் இவரையும் மீறி செய்த செயல் அனைவரையும் ஆட்டம்போட வைத்துள்ளது.

மனதை கவர்ந்த ஜீவா-மீனா ஜோடி
பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இந்த சீரியலின் கதை பல திரைப்படங்களின் கதையை போன்றுதான் இருக்கிறது என்று பலர் ஆரம்பத்திலிருந்தே கலாய்த்து வருகிறார்கள். என்னதான் கலாய்த்தாலும் இந்த சீரியலில் கேரக்டர்கள் ரசிகர்களின் மனதில் நன்றாகப் பதிந்து விட்டனர். அதில் ஜீவா, மீனா கேரக்டர் பலருக்கும் பிடித்த கேரக்டராக இருக்கின்றது. இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும் ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருப்பது பலருக்கும் பிடித்துப் போய் உள்ளது.

சூட்டிங் ஸ்பாட்டில் திடீர் ஆட்டம்
இந்த சீரியலின் பல திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் வருடக்கணக்கில் இந்த சீரியல் தொடர்ந்து கொண்டுவருவதற்கு ரசிகர்களின் ஆதரவு ஒரு காரணமாக இருந்து வருகிறது. சீரியலில் சுவாரஸ்யங்களுக்காக பலநேரங்களில் இந்த சீரியலில் திடீர் பங்க்ஷன் ஏற்பாடு செய்து விடுகின்றனர். மீனாவின் வலகாப்பு பங்ஷனில் தொடங்கி, தற்போது மீனா குழந்தையின் காது குத்துதல் வரைக்கும் சிறப்பாக ஏற்படுத்திவிடுகிறது விஜய் டிவி. இந்தநிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு போட்டு ஆட்டம் போட்டுருக்கின்றார் வெங்கட். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் என்ன இவர் இப்படி பண்ணுகிறார் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட வெங்கட்
ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒருசில டான்ஸ் நிகழ்ச்சியில் வெங்கட் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் இவரும் கண்ணனும் உட்கார்ந்து பேசுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எங்கேயோ இருந்து குத்து பாட்டு மியூசிக் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இதை கேட்டதும் சூட்டிலிருந்த இவர்கள் இருவரும் ஆட்டம் போட்டுள்ளனர். இருந்த இடத்தில் இருந்தே குத்துப்பாட்டுக்கு உடல் அசைவை பார்த்து டைரக்டர் அங்கே என்ன நடக்கிறது என்று கேட்ட பிறகுதான் சாரி சார், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்டு சுயநினைவுக்கு வந்துள்ளார் வெங்கட். இந்த வீடியோக்களை தற்போது சமூக வலைத்தளத்தில் அவரே வெளியிட்டுள்ளதால் வைரலாக பரவி வருகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications