சன் டிவியை விட்டு விலகிய அசார்.. காரணம் இது தானாம்.. கடைசியில் இவரும் அந்த வரிசையில் வந்து விட்டாரா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பலருக்கும் பரிட்சயமான அசார் தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருக்கிறார்.
சன் டிவியை விட்டு விலகிய அசார் விஜய் டிவியில் புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறாராம்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசார் வெளியிட்ட செய்தியை பார்த்த ரசிகர்கள் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

பிரபலமான வணக்கம் தமிழா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலமாக பல பிரபலங்களை பேட்டி எடுத்த அசார் தொகுப்பாளராக ரசிகர்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருடைய ஜாலியான பேச்சு பிடித்துப் போன ரசிகர்கள் பலர் இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தார்களாம். சின்னத்திரை மட்டுமல்லாமல் பல சாதனை புரிந்தவர்களையும் பேட்டி எடுத்து அவர்களுடைய திறமைகளை பலருக்கும் காட்டுவது தான் அசார். அவருடைய அசத்தலான கேரக்டராக இருந்து வந்தது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கும்போது தொகுப்பாளராக வலம் வந்தாலும், இவருக்கும் சின்னத்திரை நடிகையான தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்ரியாவுக்கும் இவருக்கும் காதல் என்ற வதந்தி பரவி வந்தது. அது மட்டுமல்லாமல் ஹரிப்பிரியாவின் விவாகரத்திற்கு இவர் தான் காரணம் என்ற செய்தி எல்லாம் பரவி வந்தது. ஆனால் அதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக ஹரி பிரியா, நாங்கள் இருவரும் நண்பர்கள் எங்களுக்குள் "அந்த" மாதிரி எண்ணம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தார்.

இன்ஸ்டாகிராம் பதிவு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் ஒரு சில எபிசோடுகள் ஆகவே இவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு!?எதனால் இங்கே காணவில்லை என்று கமெண்ட்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசார் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்களை கூறி வந்தாலும், எதனால் சன் டிவியை விட்டு விலகி விட்டார் என்று கேள்விகளை அதிகமாக எழுப்பி வருகிறார்கள்.

விஜய் டிவியில் அறிமுகம்
விஜய் டிவியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஜோடியோடு கலந்து கொண்டு கலக்கும் நிகழ்ச்சியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி இருந்து வருகிறது. அதில் இதுவரைக்கும் மாகாபா மற்றும் நிஷா இருவரும் தொகுத்து வழங்கி இருந்தனர். இந்த நிலையில் தற்போது அசார் அறிமுகமாக இருப்பதால் இவர்களில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அசார் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இனி இந்த நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கப் போகிறது என்று கூறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications