Baahubali The Epic OTT : ஓடிடியில் வெளியாகும் ‘பாகுபலி: தி எபிக்’ .. எப்போ, எதில் பார்க்கலாம்?
சென்னை: இந்திய திரையுலகின் வரலாற்றில் மறக்க முடியாத மைல்கல்லாக அமைந்த திரைப்படங்களில் ஒன்று தான் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி. பிரபாஸ், ராணா டகுபாட்டி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம், இந்திய சினிமாவை உலக அளவில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.
இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இணைத்து 'பாகுபலி: தி எபிக்' என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்போது இந்த படம் ஓடிடி வர இருக்கிறது.

ரீ ரிலீஸில் புதிய அனுபவம்
கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 'பாகுபலி: தி எபிக்', ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய சினிமா அனுபவத்தை வழங்கியது. ரீமாஸ்டர் செய்யப்பட்ட இந்த பதிப்பில், காட்சித் தரம் மேம்படுத்தப்பட்டதுடன், முன்பு தியேட்டரில் வெளியாகாத சில புதிய ஷாட்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இதனால், ஏற்கனவே பாகுபலியை பார்த்திருந்த ரசிகர்களும் மீண்டும் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.
ஒரே படமாக இணைந்த இரண்டு பாகங்கள்
'பாகுபலி: தி எபிக்' திரைப்படம், Baahubali: The Beginning (2015) மற்றும் Baahubali: The Conclusion (2017) ஆகிய இரண்டு பாகங்களையும் ஒரே கதையாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி 43 நிமிடங்கள் ஆகும். கதை தொடக்கம் முதல் முடிவு வரை இடைவிடாமல் விறுவிறுப்பாக நகரும் வகையில் எடிட்டிங் செய்யப்பட்டிருப்பதை முக்கிய பலமாக ரசிகர்கள் பாராட்டினர்.
ரீ ரிலீஸிலும் வசூல் சாதனை
மீண்டும் தியேட்டரில் வெளியான நிலையில் கூட 'பாகுபலி: தி எபிக்' உலகளவில் ரூ.51.72 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இணைந்து உலகம் முழுவதும் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், ரீ ரிலீஸிலும் இப்படம் நல்ல வசூலை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்களும் ரசிகர் வரவேற்பும்
திரைப்பட விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் 'பாகுபலி: தி எபிக்' குறித்து நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்தனர். குறிப்பாக பிரபாஸின் இரட்டை வேட நடிப்பு, ராணா வில்லத்தனம், ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி தேவி பாத்திரம், எம்.எம். கீரவாணியின் இசை, பிரம்மாண்டமான காட்சியமைப்பு ஆகியவை மீண்டும் ரசிகர்களை கட்டிப் போட்டதாக விமர்சனங்கள் வெளியானது. பெரிய திரையில் இந்த படத்தை மீண்டும் பார்க்க முடிந்தது ஒரு விழா போன்ற அனுபவம் என பலர் தெரிவித்தனர்.
ஓடிடியில் வெளியீடு
திரையரங்குகளில் வெளியான பிறகு, 'பாகுபலி: தி எபிக்' ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, திரையரங்குகளில் வெளியான 55 நாட்களுக்கு பிறகு, இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் டிசம்பர் 25-ம் தேதி முதல் Netflix ஓடிடியில் 'பாகுபலி: தி எபிக்' ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications