என் மூஞ்சியையா குறை சொல்லுறீங்க? விமர்சனங்களுக்கு வீடியோவில் பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் தன்னுடைய முகத்தைப் பற்றிய நெகட்டிவாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எல்லோருமே மக்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்திருக்கின்றனர். அதிலும் இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி இப்போது கல்யாணம் முடிந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் இனியாவிற்கு சொல்லவே வேண்டாம். அடிக்கடி இவர்தான் இந்த சீரியலில் ட்ரோலில் சிக்கிக் கொள்ளும் கேரக்டராக இருக்கிறார்.

சீரியல் ட்ரோல்
இனியா ஸ்கூல் படிக்கும்போதும் சரி காலேஜ் படிக்கும் போது சரி குடும்பத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருப்பார். பாக்கியா என்னதான் நல்லது செய்தாலும் கடைசியில் பாக்கியாவை மட்டம் தட்டி பேசுவதை வைத்தும் சிலர் ட்ரோல் செய்து அவரை திட்டி தீர்த்து வருவார்கள். எந்த வீட்டிலும் இந்த மாதிரி ஒரு பொண்ணு இருக்கவே கூடாது என்றெல்லாம் இவர் குறித்த நெகட்டிவான கமெண்ட்கள் வந்திருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வருத்தம்
ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இனியாவிற்கு சில மாதங்களுக்கு முன்புதான் பெரிய சோகமான சம்பவமும் நடந்தது. அதாவது இனியா காலேஜில் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகள் இருந்தது. அதில் அவருடைய டான்ஸை பார்த்து நேகாவை பர்சனல் ஆக நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்து வந்தனர். அப்போது வருத்தப்பட்ட நேகாவிற்கு அந்த சீரியலில் அவருடன் நடிக்கும் நடிகர்கள் ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.
விமர்சனங்கள்
அது பற்றி அந்த சீரியல் நடிகர்கள் பல தங்களுடைய வருத்தங்களை தெரிவித்திருந்தனர். ஒருவருடைய கேரக்டர் பிடிக்கவில்லை என்றால் அந்த கேரக்டரை திட்டுங்கள் அதை விட்டுவிட்டு அந்த கேரக்டரில் நடித்ததற்காக பர்சனலா திட்டாதீங்க என்று வேண்டுகோள் வைத்திருந்தனர். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இந்த சீரியலில் கதை வேகமாக தொடங்கப்பட்டது. இனியா படித்துவிட்டு வேலைக்கு செல்வது போன்று காட்சிகள் வந்ததை தொடர்ந்து அவருக்கு திடீர் திருமணம் நடந்தது. இப்போது இவரை சுற்றி தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.
நேகா வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ
இந்த நிலையில் தான் நேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது ரிலீஸ் வீடியோ தான். அந்த வீடியோவில் "அய்யய்யோ இவரு மூஞ்சிய பாத்தியா... இவரு மூஞ்சி அப்படியே சோப்பு விளம்பரத்துல வர்ற மாடல் மாதிரியே இருக்காருல.! குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி ஒரு மூஞ்சி இவங்க என் மூஞ்ச குறை சொல்றாங்க" என்று சந்தானத்தின் காமெடிக்கு அந்த ரிலீஸ் வீடியோ இருக்கிறது. இந்த வீடியோவை தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு பதிலடியாக பகிர்ந்து இருக்கிறார். இதை சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications